விண்வெளி ஆராய்ச்சியில் எப்போதும் முன்னோடியாக இருக்கும் பல நாடுகளுக்கு கடுமையான போட்டி கொடுக்கும் இந்தியா, நிலவின் மேற்பரப்பு ஆய்வு செய்வதற்காக உருவாக்கியுள்ள Chandrayaan-3 விண்கலத்தின் பட்ஜெட் மூலம் உலக நாடுகளை மீண்டும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Chandrayaan-3 விண்கலம் ஜூலை 14 ஆம் தேதி மதியம் 2.35 மணிக்கு ஏவ முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக ஆந்திரா-வின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திற்கு சந்திரயான்-3 விண்கலம் தயாராக உள்ளது.

நிலவு குறித்து ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ (ISRO) என சுருக்கமாக அழைக்கும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் மூன்றாவது திட்டம் தான் சந்திரயான்-3 விண்கலம். இதற்கு முன்பு ISRO சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 ஆகியவற்றில் வரலாற்று வெற்றியை கண்ட நிலையில் சந்திரயான்-3 விண்கலம் அடுத்தக்கட்ட பணிகளுக்காக விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
சந்திரயான்-3 விண்கலத்தில் பாதுகாப்பாக தரையிறங்கும் வசதிகளோடு, ரோவர்-ம் உள்ளது. சந்திரயான்-3 விண்கலத்தில் நிலவின் தெர்மல் கண்டக்ட்விட்டி, வெப்பம், நில அதிர்வு செயல்பாடு,
பிளாஸ்மா அடர்த்தி ஆகியவற்றை ஆய்வு செய்ய கருவிகள் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் ரோவர்-ல் எக்ஸ்ரே ஸ்பெக்டோமீட்டர், LIBS எனப்படும் ஸ்பெக்டோமீட்டர் ஆகியவையும் கொண்டு செல்லப்படுகிறது.
இஸ்ரோ-வின் வெற்றியும் தனித்துவமும் மிகவும் குறைந்த விலையில் எப்படி விண்வெளி பயணத்தை மேற்கொள்ளப்படுகிறது என்பதில் தான் உள்ளது. அந்த வகையில் சந்திரயான்-1 மற்றும் சந்திரயான்-2 ஆகியவற்றில் வரலாற்று வெற்றியை கண்ட நிலையில், அதன் மூலம் கிடைத்த படிப்பு, கற்றல், டேட்டா ஆகியவற்றின் அடிப்படையில் சந்திரயான்-3 உருவாக்கப்பட்டு உள்ளது.
ISRO சந்திரயான்-2 திட்டத்தை சுமார் 960 கோடி ரூபாய் முதலீட்டில் செய்து முடித்த நிலையில், தற்போது சந்திரயான்-2 திட்டத்தை வெறும் 600 கோடி ரூபாய்க்கு கட்டமைத்துள்ளது. இது மட்டும் அல்லாமல் நிலவு ஆராய்ச்சி திட்டத்தில் சந்திரயான்-3 மிகவும் கடினமான திட்டமாகவும் பார்க்கப்படுகிறது.
சுவிஸ் நாட்டில் 1600 கோடி ரூபாய்க்கு வீடு வாங்கும் பணக்கார இந்தியர்கள் மத்தியில், அரசு அமைப்பான ISRO வெறும் 600 கோடி ரூபாயில் சந்திரயான்-3 திட்டத்தை செயல்படுத்துவது உலக நாடுகளுக்கு மட்டும் அல்லாமல் இந்தியர்களுக்குமே வியப்பாக உள்ளது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications