தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், வேலைவாய்ப்புக்கும் முக்கிய பங்கு வகிக்கும் கோயம்புத்தூர் மாவட்டம் அடுத்தடுத்த பல சாதனைகளைப் படைத்து வருகிறது. ஒருபக்கம் சென்னையைத் தாண்டி வராத ஐடி நிறுவனங்களை வலைப்போட்டுப் பிடித்து வருகிறது அம்மாவட்டத்தின் திறன் வாய்ந்த ஊழியர்கள் படை.
இதன் வாயிலாகக் கோயம்புத்தூர் முழுவதும் தற்போது டெக் பார்க்குகளை உருவாக்கி வருகிறது. ஆனாலும் கோயம்புத்தூர் மாவட்ட பொருளாதாரத்தின் வளர்ச்சி உற்பத்தித் துறை. இதில் தற்போது புதிய மைல்கல்-ஐ தொட்டு உள்ளது.

கோயம்புத்தூர்-ஐ சேர்ந்த பல நிறுவனங்கள் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO-வுக்கு நீண்ட காலமாகப் பல பொருட்களையும், சேவைகளையும் அளித்து வருகிறது. ஆனால் மங்கள்யான் வெற்றிக்குப் பின்பு தான் இஸ்ரோவின் வளர்ச்சியில் கோயம்புத்தூர்-க்கும் கோயம்புத்தூர் நிறுவனத்திற்கும் எவ்வளவு பங்கீடு உள்ளது என தெரிய வந்தது.
கோயம்புத்தூர் - இஸ்ரோ உறவில் இன்னும் ஒரு மைல்கல்லாகக் கோவை லக்ஷ்மி மெஷின் வொர்க்ஸ் அட்வான்ஸ்டு டெக்னாலஜி சென்டர் (LMW ATC) ஏப்ரல் 2ஆம் தேதி, ISRO-வின் முக்கிய திட்டமான GSLV MK-III திட்டத்திற்கான ராக்கெட்டுக்கான composite Ogive Payload Fairing என்ற முக்கியமான பாகத்தை தயாரித்து டெலிவரி செய்துள்ளது.
விண்ணைத் தொடும் பேலோடு பேரிங்: ராக்கெட்டின் உச்சியில் பொருத்தப்படும் இந்த பேலோடு பேரிங், செயற்கைக்கோளை விண்ணுக்கு செலுத்தும் போது ஏற்படும் காற்று, வெப்பம் மற்றும் ஒலி அதிர்வுகளில் இருந்து பாதுகாக்கும் கேடயமாக செயல்படுகிறது.
LMW ATCயின் சாதனை: GSLV MK-III ராக்கெட்டுக்காக தயாரிக்கப்பட்ட இந்த பேலோடு பேரிங், 5 மீட்டர் விட்டமும், 10.75 மீட்டர் உயரமும் கொண்டது. இது 'போட் டெயில்’ (Boat Tail), 'சிலிண்டர்’ (Cylinder), 'ஓகிவ்’ (Ogive) மற்றும் 'நோஸ் கேப்’ (Nose Cap) என நான்கு பகுதிகளைக் கொண்டது.

அமைச்சர் TRB ராஜா பாராட்டு: “இந்தியாவின் விண்வெளி துறையில் ஒரு மைல் கல்லைக் கடந்துள்ள LMW ATCயின் சாதனைக்கு நாங்கள் பெருமைப்படுகிறோம். தனியார் துறையில் உருவாக்கப்பட்ட முதல் composite Ogive Payload Fairing-ஐ எல்.எம்.டபிள்யு வெற்றிகரமாக தயாரித்து ISROவிற்கு வழங்கியுள்ளது.
இது கோவையின் இன்னோவேஷன் திறனை மட்டும் காட்டவில்லை, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறைகளில் தமிழ்நாடு பெற்றுவரும் முன்னேற்றத்தையும் எடுத்துக்காட்டுகிறது” என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் TRB ராஜா பாராட்டினார்.
விண்வெளி துறை: இந்த சாதனை, தமிழ்நாடு விண்வெளி துறையில் தொடர்ந்து சாதித்து வருவதற்கான அறிகுறியாகும். இதன் மூலம், இந்தியா விண்வெளி ஆராய்ச்சியில் உலகத் தலைவராக உயர்வதற்குத் தமிழ்நாடு தொடர்ந்து உந்து சக்தியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
முதல் சிப்காட்: கோயம்புத்தூர் உற்பத்தி நகரமாக இருந்து ஐடி நகரமாக மாறிவரும் வேளையில் சென்னையைப் போலவே சேவை - உற்பத்தித் துறை சமநிலைப்படுத்தும் வகையில் பல உற்பத்தி நிறுவனங்கள் கோயம்புத்தூர்-க்கு படையெடுத்து வருகிறது. இதற்காக கோயம்புத்தூரில் முதல் முறையாக சிப்காட் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
டிபென்ஸ் பார்க்: இதற்கு ஏற்றார்போல் கோயம்புத்தூர் மாவட்டத்தின் சூலூர் தாலுக்காவில் வரப்பட்டி கிராமத்தில் தமிழ்நாடு அரசு புதிய சிப்காட் பகுதியை உருவாக்க உள்ளது. இந்தச் சிப்காட் பகுதியை TIDCO மூலம் இணைந்து பாதுகாப்புத் துறைக்கான பிரத்தியேக தொழிற்பூங்காவாக உருவாக உள்ளது.


Click it and Unblock the Notifications