இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தனது தனித்துவமான திட்டங்கள் மூலம் உலக கவனத்தை ஈர்க்கிறது. உலகிலேயே எந்த நாடுகளும் செல்லாத நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக லேண்டரை தரையிறக்கி சந்திராயன் -3 திட்டம் மூலம் கடந்த ஆண்டு விண்வெளி ஆய்வில் புதிய சாதனை படைத்தது இஸ்ரோ.
அடுத்ததாக ஆதித்யா எல்1 கலத்தை ஏவி சூரியன் பற்றி ஆய்வில் கால்பதித்த இஸ்ரோ, இந்த ஆண்டு மற்றொரு சாதனை பயணத்திற்கு தயாராகி வருகிறது.

ககன்யான் திட்டம்: விண்வெளி ஆராய்ச்சியின் அடுத்த மைல்கல்லாக விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தில் தற்போது இஸ்ரோ தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி இரண்டு ஆள்ளில்லா விண்கலத்தைல LEO எனப்படும் Low Earth Orbit-க்கு அனுப்பும், 1 விண்கலத்தை மனிதர்களுடன் அனுப்பும்.
இஸ்ரோ மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது இதுவே முதன்முறை. இந்த திட்டத்திற்காக 9,023 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
2024 ககன்யான் ஆண்டாக இருக்கும்: 2024ஆம் ஆண்டு ககன்யான் ஆண்டாக இருக்கும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. விண்வெளிக்கு செல்லும் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு வெளிநாடுகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த ஆண்டுக்குள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படும் சுகன்யா திட்டம் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி திரும்ப பத்திரமாக பூமிக்கு திரும்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எதிர்கால இந்திய விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களுக்கு அடித்தளமாக இது இருக்கும். இரண்டு ஆளில்லா கலன்களை முதலில் ஏவி சோதனை செய்து மீண்டும் பூமியில் தரையிறக்கி பின்னரே மனிதர்கள் செல்லும் விண்கலத்தை ஏவுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
திட்டத்தில் இணைந்துள்ள நிறுவனங்கள்: கதன்யான் திட்டத்தைப் பொறுத்தவரை பல்வேறு இந்திய நிறுவனங்களும் இஸ்ரோவுடன் கைகோர்த்துள்ளன.
இந்திய ஆயுதப்படை
பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு
இந்திய கடல்சார் நிறுவனங்கள் - இந்திய கடற்படை, கடலோர காவல் படை, இந்திய கப்பல் போக்குவரத்து கழகம், தேசிய கடல்சார் நிறுவனம் , தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்
இந்திய வானிலை ஆய்வு மையம்
சி எஸ் ஐ ஆர் ஆய்வகங்கள்
கல்வி நிறுவனங்கள்
தொழில் துறை நிறுவனங்கள்.
ககன்யான் திட்டத்தின் நன்மைகள் என்னென்ன?:
சூரிய மண்டலம் மற்றும் அதற்கு அப்பாலும் ஆராய்ச்சி செய்வதற்கான நிலையான மற்றும் நீடித்த, திட்டங்களை முன்னெடுத்து செல்ல உதவும்
மனிதர்களை அல்லது ரோபோக்களை அனுப்பி விண்வெளி ஆய்வு மாதிரிகளை சேகரித்து கொண்டு வருவதை எளிதாக்கும்
உலகளாவிய விண்வெளி நிலையம் மேம்பாட்டில் இந்தியாவின் பங்கை அதிகரிக்க செய்யும்
விண்வெளி ஆய்வில் கல்வித்துறை மற்றும் தொழில்துறை கூட்டாண்மையை உருவாக்கி ஒரு பரந்த கட்டமைப்பை உருவாக்க உதவும்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் ஆய்வு மேற்கொள்வது, புதுமைகளை படைப்பது ஆகியவற்றில் இந்திய இளைஞர்கள் ஊக்கம் பெறுவர்
திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?: கடந்த 2023, அக்டோபர் மாதம் இஸ்ரோ விஞ்ஞானிகள் விண்வெளி வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கூடிய கலன்களை ராக்கெட்டில் ஏவி சோதனை செய்தனர். ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட் சரியான முறையில் செயல்பட்டது.
எனவே ககன்யானின் முதல் , வெஹிக்கல் அபார்ட் மிஷன் வெற்றி அடைந்தது என சோம்நாத் அறிவித்தார். ககன்யான் திட்டத்தில் கிடைக்கும் வெற்றி உலக அரங்கில் விண்வெளி ஆய்வில் சிறந்த நிறுவனம் என்ற பெருமை இஸ்ரோவுக்கு கிடைக்கும்.
Story written by: Devika Manivannan


Click it and Unblock the Notifications