ஐடி ஊழியர்களின் கழுத்தை நெறிக்கும் பணி சுமை, மன அழுத்தம்.. HR ஊழியர்கள் சொல்லும் ஷாக் தகவல்..!!

சமீபத்தில் EY நிறுவனத்தில் பணி சுமையால் ஒரு இளம் பெண் ஊழியர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து இந்தியா முழுக்க அனைத்து துறையிலும் பணி சுமை குறித்த விவாதம் நடந்து வருகிறது. உற்பத்தித் துறை முதல் ஐடி துறை வரையில் நீண்ட வேலை நேரம் மற்றும் வேலை அழுத்தம் குறித்து அதிகப்படியான விவாதம் நடைபெற்றுள்ளது.

ஏன், பல நிறுவனங்களின் நிர்வாகம் தானாக முன் வந்து ஊழியர்களின் நலனுக்காக முக்கியமான மாற்றத்தையும் செய்துள்ளனர், குறிப்பாகப் பணி நேரத்திற்குப் பின்பு வேலை தொடர்பான அழைப்புகளையும், ஈமெயில்களையும் குறைத்துள்ளது. வார இறுதி நாட்களிலும், விடுமுறை நாட்களிலும் பணிகளை அளிப்பதைக் குறைக்க முன்வந்துள்ளனர்.

ஐடி ஊழியர்களின் கழுத்தை நெறிக்கும் பணி சுமை, மன அழுத்தம்.. HR ஊழியர்கள் சொல்லும் ஷாக் தகவல்..!!

இந்த நிலையில் ஐடி மற்றும் டெக் துறையில் நிலவும் மன அழுத்தம் மற்றும் பணி சுமை பற்றி பல மனிதவள பரிவு தலைவர்கள் பேசியுள்ளனர். கொரோனா தொற்றுக்கு பின்னர் இந்தியாவில் மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் கார்ப்ரேட் ஊழியர்களின் பணி நேரம் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.

6 மணிக்கும் முடியும் பணி தற்போது இரவு 9 மணி வரையில் நீண்டுள்ளது, இதை ஊழியர்கள் தரப்பில் இருந்து குறையாக நிர்வாகத்திற்கு சொல்லப்படுவதும் இல்லை, இதற்கு முக்கியமான காரணம் வொர்க் ப்ரம் ஹோம் சலுகை இருப்பதால் தான். சமீபத்தில் வொர்க் ப்ரம் ஹோம் குறைக்கப்பட்டாலும் பணி நேரம் குறைவது இல்லை.

இதேபோல் வார இறுதி நாட்களிலும் கிளையின்ட் டிமாண்ட் என்ற பெயரிலும், நிர்வாக பணிகள் என்ற வகையிலும் ஊழியர்கள் பணியாற்றுவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது. இந்த நிலையை சிறிய நிறுவனங்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் அதிகரித்துள்ளது.

கண்ணாடி கட்டிடத்தில், ஏசி ரூமில், கம்பியூட்டர் முன்பு சொகுசாக பணியாற்றும் அனைத்து ஊழியர்களுக்கும் தலையில் ஒரு டெட்லைன் என்ற கத்தி தொங்கிக்கொண்டு இருக்கிறது. இதேபோல் நிர்வாகம் குறுகிய காலத்தில் கூடுதல் லாபம் பெற வேண்டும் என்ற கணக்கில் அதிகப்படியான வேலையைக் குறுகிய காலகட்டத்திற்குள் முடிக்க டெட்லைன் வைக்கப்படுவது மூலம் ஊழியர்களின் பணி சுமை, மன அழுத்தும் ஆகியவை அதிகரிக்கிறது.

இந்தியாவில் தற்போது கன்சல்டிங் முதல் IT வேலைகள் வரை, ஊழியர்களுக்கு பணியினால் ஏற்படும் மன அழுத்தம் தீவிரமாக உள்ளது என்று HR நிபுணர்கள் கூறுகின்றனர், மேலும் நச்சு வேலை கலாச்சாரம் (toxic work culture) புகழ்ந்து பேசப்படக்கூடாது என்று எச்சரிக்கின்றனர்.

இந்த நிலையில் Teamlease Regtech இன் இயக்குனர் மற்றும் நிறுவனர் சந்தீப் அகர்வால் கூறுகையில் Work burnout நிறுவனங்களில் ஒரு வழக்கமாக மாறியுள்ளது என்று கூறினார். நீண்ட வேலை நேரம் மற்றும் அலுவலகத்தில் தாமதமாகத் தங்குவது ஒரு கௌரவச் சின்னமாகக் கருதப்படுகிறது.

"இதேபோல் நிறுவனங்கள் சட்டரீதியாக ஓட்டைகளை பயன்படுத்தியும் வருகிறது, 1948 ஆம் ஆண்டு தொழிற்சாலைச் சட்டத்தின் கீழ் அதிகப்பணி நேரத்திற்கான ஊதியம் வழங்குவது 'தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு' மட்டுமே பொருந்தும், 'அலுவலகர்கள்' அல்லது 'நிர்வாகிகள்' என பெரும்பாலும் குறிப்பிடப்படும் வொயிட்-காலர் ஊழியர்களை இது பொருந்தாது" என்று அவர் கூறினார். ஆனால் வொயிட்-காலர் ஊழியர்களுக்கு ஓவர்டைம் பணிக்கான ஊதியம் வழங்கப்படுவதே கிடையாது என்பது அடுத்த பெரிய பிரச்சனை.

ரீட் & வில்லோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சிஇஓ-வான ஜானூ மோதியானி கூறுகையில் IT மற்றும் ஆலோசனைத் துறைகளில் அழுத்தம் மோசமாக உள்ளது, ஒவ்வொரு ஆண்டும் அதிகப்படியான இளம் தலைமுறையின் நுழையும் வேளையில் இதை சரி செய்ய வேண்டும் என கூறினார்.

இப்படி பல மனிதவள பிரிவு அதிகாரிகளும், டெக் வல்லுனர்களும் EY நிறுவனத்தில் பணி சுமையால் இளம் பெண் ஊழியர் மரணம் அடைந்ததை தொடர்ந்து மன அழுத்தம் குறித்து அதிகம் பேசி வருகின்றனர். கார்ப்ரேட் துறையில் இருக்கும் மன அழுத்தம் பெரும் விமர்சனமாக மாறியுள்ளது, பல வருடங்களுக்கு பின்பு வொர்க் லைப் பேலென்ஸ் பேச்சு முக்கியமானதாக மாற்றியுள்ளது.

இந்த சூழ்நிலையில் தான் இன்போசிஸ் நாராயணமூர்த்தி போன்றோர் வாரம் 70 மணிநேரம் பணியாற்ற வேண்டும் என கூறுகிறார்கள். நாம் செய்யும் பணி முக்கியம், அதோடு நம்முடைய உடல் நிலை, மன நிலை ஆகியவற்றை சிறப்பாக வைத்துக்கொள்ளவதும் மிகவும் முக்கியம். இவற்றை சமநிலைபடுத்துவதில் தான் அனைத்து ஒரு ஊழியரின் திறன் உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+