இந்தியாவில் இருக்கும் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் அமெரிக்கா, ஐரோப்பிய சந்தையில் உருவாகியிருக்கும் ரெசிஷன் அச்சத்தால் வர்த்தக பாதிப்பில் மாட்டிக்கொண்டு உள்ளது. இந்த நிலையில் செலவுகளை குறைத்து, ஊழியர்கள் மூலம் அதிகப்படியான செயல்திறனை பெறுவது மட்டும் தான் ஐடி நிறுவனங்களின் முக்கிய இலக்காக உள்ளது.
செலவுகளை குறைக்க வேண்டும் என்றால் பணிநீக்கம் மட்டுமே வழி இல்லை என்பதை உணர்ந்த இந்திய ஐடி நிறுவனங்கள் காக்னிசென்ட், அக்சென்சர் போல் பணிநீக்கம் அறிவிக்காமல் மாற்று வழியை தேடியுள்ளது.

ஐடி நிறுவனங்கள் செலவுகளை குறைக்க முக்கியமான இடமாக ரியல் எஸ்டேட் செலவுகள் உள்ளது, இந்த வகையில் பெரு நகரங்களில் அதிகப்படியான தொகைக்கு வாடகைக்கும், குத்தகைக்கும் இருக்கும் அலுவலகத்தை குறைத்துவிட்டு சிறு நகரங்களில் அலுவலகத்தை திறக்கவும், விரிவாக்கம் செய்யவும் முடிவு செய்துள்ளது.
இது புதிய விஷயமில்லை, கொரோனா தொற்று காலத்திலேயே சிறிய நகரங்களுக்கு படையெடுக்கும் படலம் துவங்கியிருந்தாலும், தற்போது வர்த்தக பாதிப்புகள் அதிகரித்துள்ளதால் கோயம்புத்தூர், மதுரைக்கு வரும் ஊழியர்கள், நிறுவனங்கள் எண்ணிக்கை பெரிய அளவில் கடந்த 3 மாதத்தில் அதிகரித்துள்ளது.
சமீபத்தில் இன்போசிஸ் கோயம்புத்தூரில் அலுவலகத்தை திறந்த உடனேயே பல ஆயிரம் ஊழியர்கள் பணியிட மாற்றத்திற்கான கோரிக்கை வைத்த நிலையில், தற்போது அலுவலக விரிவாக்க பணிகள் வேகப்படுத்தப்பட்டு உள்ளது.
சிறு நகரங்களுக்கு அலுவலகத்தை மாற்றுவதன் மூலம் ரியல் எஸ்டேட் செலவுகளை குறைப்பது மட்டும் அல்லாமல், ஊழியர்கள் நிறுவனத்தை விட்டு வெளியேறுவது பெரிய அளவில் குறைகிறது. இதேபோல் ஊழியர்களுக்கு சிறந்த work-life balance வழங்குவதற்கும், 2ஆம் மற்றும் 3ஆம் தர நகரங்கள் பெரிய அளவில் உதவுகிறது.
வீட்டுக்கு அருகிலேயே தான் விரும்பும் பணியும், அதிகப்படியான சம்பளத்துடன் வேலையும் கிடைத்துவிட்டால் யார் தான் வேறு நிறுவனத்திற்கு மாற போகிறார்கள். இதேபோல் சிறிய நகரங்களில் வேறு வேலைவாய்ப்புக்கு உடனடியாக மாறுவதற்கான வாய்ப்புகளும் குறைவு என்பதாலும் இது நிறுவனங்களுக்கு பலன் அளிக்கிறது.
இன்போசிஸ் தற்போது கோயம்புத்தூர், திருவனந்தபுரம், நாக்பூர், இந்தூர், ஹூப்ளி, மொஹாலி ஆகிய பகுதிகளில் அலுவலகத்தை துவங்கி வருகிறது.
3500 ஐடி ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்த காக்னிசென்ட் கடந்த வாரம் செலவுகளை குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக பெரு நகரங்களில் இருக்கும் அலுவலகத்தை குறைத்துவிட்டு, சிறிய நகரங்களில் இருக்கும் அலுவலகத்திற்கு மாற்ற திட்டமிட்டு உள்ளது. இதன் மூலம் 2025 ஆம் ஆண்டுக்குள் சுமார் 100 மில்லியன் டாலர் அளவிலான தொகையை சேமிக்க முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications