ஐடி சேவை துறை எந்த அளவிற்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறதோ அதே அளவிற்கு ஐடி-BPM துறையும் புதிய முதலீடுகளுடனும், புதிய தொழில்நுட்ப மேம்பாடுகளுடனும் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது.
இந்தியாவில் இருக்கும் பல ஐடி-BPM நிறுவனங்கள் உலக முழுவதும் வாடிக்கையாளர்கள் சேவை, டெக் உதவிகள் பலவற்றை அளித்து வருகிறது.
மேலும் கொரோனா காலத்தில் அனைத்துத் துறை நிறுவனங்களும் ஆன்லைன் சேவை துறையில் இருக்க வேண்டும் எனக் கட்டாயம் உருவாகியுள்ளதால் ஐடி-BPM நிறுவனங்களுக்கான வர்த்தகம் இந்தியா மட்டும் அல்லாமல் உலகளவில் அதிகரித்துள்ளது.
ஐடி-BPM நிறுவனங்கள்
இந்திய ஐடி-BPM நிறுவனங்கள் தொடர்ந்து அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்று வரும் நிலையில், நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 3.75 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கப்படும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் இத்துறையில் ஒப்பந்த ஊழியர்கள் எண்ணிக்கை 1.48 லட்சமாக உயரும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
48.5 லட்ச ஊழியர்கள்
இதன் மூலம் 2021-22ஆம் நிதியாண்டுக்குள் இந்திய ஐடி-BPM துறையின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 48.5 லட்சமாக உயரும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது. மார்ச் 2022க்குள் 44.7 லட்சத்தில் 48.5 லட்சமாக உயரும் என டீம்லீஸ் நிறுவனம் கணித்துள்ளது.
ஒப்பந்த ஊழியர்கள்
மேலும் ஐடி சேவை நிறுவனங்களைக் காட்டிலும் ஐடி-BPM நிறுவனங்களில் ஒப்பந்த ஊழியர்கள் எண்ணிக்கை அதிகம். மேலும் இத்துறை ஊழியர்கள் மத்தியில் ஒப்பந்த வேலைவாய்ப்புகளுக்கு எவ்விதமான மறுப்பு இல்லை என்பது கூடுதல் தகவல். ஐடி-BPM நிறுவனங்கள் ஒப்பந்த வேலைவாய்ப்பு வாயிலாக ஊழியர்கள் வெளியேற்றத்தின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
13 டிஜிட்டல் திறன்
ஐடி சேவை துறை போலவே ஐடி-BPM துறையிலும் டிஜிட்டல் திறனுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. தற்போது ஐடி-BPM நிறுவனங்கள் மத்தியில் சுமார் 13 டிஜிட்டல் திறன் கொண்ட ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது.
பயிற்சி
புதிய டிஜிட்டல் திறன் கொண்ட ஊழியர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கும் காரணத்தால் ஐடி-BPM நிறுவனங்கள் ஊழியர்களுக்குப் புதிய தொழில்நுட்பத்தில் பயிற்சி அளிக்க அதிகப்படியான தொகையை முதலீடு செய்து வருகிறது. ஐடி சேவை துறைக்கு இணையாக ஐடி-BPM துறையும் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
More From GoodReturns

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

திடீரென 300 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததா Zoho நிறுவனம்? உண்மை என்ன?

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!



Click it and Unblock the Notifications