IT ஊழியர்களுக்கு குட் நியூஸ்! குடுத்து வெச்சவங்க போங்க!

இந்தியாவின் முகத்தை, இந்திய பொருளாதாரத்தின் தன்மையை, இந்த 21-ம் நூற்றாண்டில் வேறு ஒரு லெவலுக்கு மாற்றியதில் ஐடி துறைக்கு நிச்சயம் ஒரு முக்கிய இடம் உண்டு.

அப்படிப்பட்ட ஐடி கம்பெனிகள் தொடர்பாக, கடந்த சில மாதங்களாக இந்த கொரோனாவால் லே ஆஃப், சம்பளம் கட், வேலைக்கு ஆள் எடுப்பதில் சிக்கல் என பல பிரச்சனைகளை படிக்கிறோம்.

அதே ஐடி கம்பெனிகளில், ஊழியர்களின் உடல் நலனைக் கருதி சில நல்ல விஷயங்களைச் செய்து இருக்கிறார்கள் பல பெரிய ஐடி கம்பெனிகள்.

மற்ற கம்பெனிகள்

மற்ற கம்பெனிகள்

ஐடி கம்பெனிகள், தங்கள் ஊழியர்களைப் பார்த்துக் கொள்வதைப் கவனித்து, மற்ற ஐடி சார்ந்த பல பெரிய கம்பெனிகளும் தங்கள் ஊழியர்களுக்கு கொரோனா காலத்தில் சலுகைகளையும், வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது போன்ற வசதிகளையும் வழங்கி இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அப்படி ஐடி கம்பெனிகள் என்ன செய்துவிட்டார்கள்..?

அலுவலகம் வருவதில் திட்டம்

அலுவலகம் வருவதில் திட்டம்

கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில், போடப்பட்ட லாக் டவுன் எல்லாம் இப்போது பெரிய அளவில் நீக்கிவிட்டார்கள். அடுத்து என்ன மதிய சாப்பாட்டைக் கட்டிக் கொண்டு எல்லோரையும் அலுவலகத்துக்கு வரச் சொல்லுங்கள் என ஐடி கம்பெனிகள் அவசரப்படுத்தவில்லை. அது தான் அவர்கள் செய்திருக்கும் மிகப் பெரிய பாரட்டுக்குரிய நல்ல விஷயம்.

வீட்டில் இருந்தே வேலை பாருங்க

வீட்டில் இருந்தே வேலை பாருங்க

பெரும்பாலான ஐடி கம்பெனிகளில், தங்களுக்கான வேலைகளை ஆன்லைனிலேயே செய்ய முடியும் என்பதால், பல ஐடி கம்பெனிகளும், தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே வேலை பார்க்கச் சொல்லி இருக்கிறார்களாம். இன்னும் சில கம்பெனிகளோ தங்கள் ஊழியர்களை அணிகளாகப் பிரித்து, அலுவலகத்துக்கு வரச் சொல்கிறார்களாம்.

ஊழியர்கள் விருப்பம்

ஊழியர்கள் விருப்பம்

அவ்வளவு ஏன்? இதை எல்லாம் விட இன்னும் சில ஐடி கம்பெனிகள், தங்கள் ஊழியர்கள் எப்போது அலுவலகத்துக்கு வர விரும்புகிறார்களோ, அப்போது அலுவலகம் வந்து கொள்ளலாம் எனச் சொல்கிறார்களாம். கேட்கவே எவ்வளவு நன்றாக இருக்கிறது. இதை எல்லாம் எந்த கம்பெனிகள் செய்து இருக்கிறார்கள்.. என தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? இதோ விவரங்கள்.

தாட்வொர்க்ஸ் (Thoughtworks)

தாட்வொர்க்ஸ் (Thoughtworks)

இது ஒரு பெரிய ஐடி கம்பெனி. இந்த கம்பெனியில், முதல் கட்டமாக 5% முக்கியமான ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வந்து வேலை பார்க்கப் போகிறார்களாம். மெல்ல இந்த எண்ணிக்கை 15 - 20 சதவிகிதமாக அதிகரிக்கப் போகிறார்களாம். அதன் பிறகு மெல்ல 40 - 50 % ஊழியர்கள் சுழற்சி முறையில் அலுவலகம் வந்து போவார்களாம்.

எல்லோருக்கும் அனுமதி

எல்லோருக்கும் அனுமதி

இந்தியாவில் இருக்கும் தாட்வொர்க் அலுவலகத்தில் வேலை பார்க்கும் அனைத்து ஊழியர்களுக்கும், எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் வீட்டில் இருந்து வேலை பார்க்க அனுமதி வழங்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது தாட்வொர்க் கம்பெனி. மிக முக்கியமான பதவிகளில் இருப்பவர்கள் மட்டுமே அலுவலகம் வந்து வேலை செய்ய வேண்டி இருக்கும் என்கிறது தாட்வொர்க் நிர்வாக தரப்பு.

கூகுள் (Google)

கூகுள் (Google)

மாத்தி யோசி தானே கூகுள் ஸ்டைல். கொரோனாவுக்குப் பிறகு ஊழியர்கள் அலுவலகம் வருவதிலும் மாற்று யோசனையை முன் வைத்து இருக்கிறது கூகுள். ஒரு ஊழியர் 14 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அலுவலகம் வரும் வகையில் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்களாம். இந்த திட்டப்படி பார்த்தால், எந்த நேரத்திலும், 100 பேர் பயன்படுத்தும் அலுவலகத்தை 10 பேர் மட்டுமே பயன்படுத்துவார்களாம். மெல்ல செப்டம்பர் வாக்கில் இந்த எண்ணிக்கையை 30 % பேராக உயர்த்த இருக்கிறார்களாம்.

ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்

மார்க் சக்கர்பெர்க்கும், தன் ஊழியர்களுக்கு கட்டற்ற சுதந்திரத்தைக் கொடுத்து இருக்கிறார். சரியாக, அலுவலக வேலைகளைச் செய்ய முடியும் என்றால், 2020-ம் ஆண்டு முழுக்க, ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் எனச் சொல்லி இருக்கிறார். ஃபேஸ்புக் அலுவலகத்தை 25% ஊழியர்களுடன் திறக்க திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.

கோல்ட் மேன் சாக்ஸ் சர்வீசஸ்

கோல்ட் மேன் சாக்ஸ் சர்வீசஸ்

இந்த கம்பெனி தன் ஊழியர்களுக்கு எங்கிருந்து வேலை பார்ப்பது சரிப்பட்டு வருமோ அங்கிருந்து வேலை பார்க்கலாம் எனச் சொல்லி இருக்கிறார்கள். ஆக எந்த ஐடி கம்பெனிக்கும், தன் ஊழியர்களை, அலுவலகத்துக்கு அழைத்து வந்து வேலை வாங்க வேண்டும் என்கிற எண்ணம் அதிகம் இல்லை என்பதையே இது காட்டுகிறது.

 நல்ல விஷயம்

நல்ல விஷயம்

ஊழியர்களின் விருப்பப்படி, வீட்டில் இருந்தே வேலை பார்க்க அனுமதிப்பது மிகவும் பாராட்டுக்குரியது. குறிப்பாக, இந்தியாவில் கொரோனா வைரஸ் பயங்கரமாக பரவும் இந்த நேரத்தில் இப்படி ஒரு சலுகையை வழங்குவது, பல ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதாக இருக்கும் என்றே சொல்லலாம். இதே டெக்னிக்கை, எந்த கம்பெனிகள் எல்லாம் பின்பற்ற முடியுமோ, அவர்களும் பின்பற்றினால் அலுவலகம் வழியாக கொரோனா பரவாமல் இருக்கும். இந்த ஐடியாவில் ஒன்றுபடுவோம். கொரோனா பரவலைத் தடுப்போம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+