இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் மீண்டும் பணியமர்த்தலை தொடங்கியுள்ளன. அது மட்டும் அல்ல சம்பள உயர்வு மற்றும் போனஸ் உள்ளிட்ட அறிவிப்புகளையும் வழக்கம்போல அறிவித்து வருகின்றன.
ஐடி துறையில் கொரோனாவின் தாக்கத்தின் மத்தியில், மூன்றாவது காலாண்டில் ஐடி நிறுவனங்களுக்கு புதிய பல திட்டங்கள் கிடைத்தன.
இதன் காரணமாக மூன்றாவது காலாண்டில் ஐடி நிறுவனங்ளின் வருவாய் பலத்த அதிகரிப்பினை கண்டது. இதன் காரணமாக ஐடி நிறுவனங்கள் பணியமர்த்தலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
ஹெச்சிஎல் போனஸ் அறிவிப்பு
ஹெச்சிஎல் டெக்னாலஜி லிமிடெட் நிறுவனம் கிட்டதட்ட 1,60,000 ஊழியர்களுக்கு, ஒன் டைம் போனஸாக 700 கோடி ரூபாயினை அறித்துள்ளது. இந்த நிறுவனத்தின் வருவாய் 10 பில்லியன் டாலர்களை கண்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பானது வந்துள்ளது. இது குறித்து ஹெச்சிஎல் நிறுவனம் தனது ஊழியர்கள், ஒரு வருடம் அலுவலகத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் இந்த சலுகை பொருந்தும் எனவும் அறிவித்துள்ளது.
ஹெச்சிஎல் பணியமர்த்தல்
அது மட்டும் அல்ல, இந்த நிறுவனம் இந்தியாவில் 15,000 புதியவர்களை (freshers) பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் 1500 -2000 ஊழியர்களை அதன் வாடிக்கையாளர் தளங்களில் பணியமர்த்தவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ஹெச்சிஎல் மட்டும் அல்ல, சமீப காலங்களில் ஐடி நிறுவனங்கள், தங்களது டிஜிட்டல் சேவையை விரிவுபடுத்தும் விதமாக ஊழியர்களை தொடர்ந்து பணியமர்த்தி வருகின்றன.
தேவை அதிகம்
ஐடி துறையில் தேவை என்பது ஒரு முறை நிகழ்வு அல்ல. இது பல ஆண்டு மேம்படுத்தலின் ஒரு பகுதியாகும். இதற்கு டிஜிட்டல் உருமாற்ற திட்டங்களை உருவாக்கவும், அவற்றை விற்கவும் திறமையான பணியாளர்கள் தேவை. ஐடி சந்தையில் இத்தகைய திறன்களுக்கான தேவையில் எப்போதும் பற்றாக்குறையே நிலவி வருகின்றது. திறமைக்கான தேவைகள் எப்போதும் தவிர்க்க முடியாதது. இதனால் சம்பள உயர்வு, பதவி உயர்வுகளை நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன.
டிசிஎஸ்ஸின் அறிவிப்பு
இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம், கடந்த ஆண்டு அக்டோபர் 1 முதல் அதன் 4,50,000 ஊழியர்களுக்கான சம்பள உயர்வை முதன் முதலாக வெளியிட்டது. இதே இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் ஜனவரி மாதத்தில் தங்களது ஊழியர்களுக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுகளை அறிவித்தன.
இன்ஃபோசிஸ் திட்டம்
குறிப்பாக இன்ஃபோசிஸ் நிறுவனம் ஜனவரி 1, 2021 முதல் சம்பள உயர்வை அறிவித்தது. அதோடு சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வுகளை அறிவித்தது. அதோடு 2022ம் நிதியாண்டில் கல்லூரி கேம்பஸில் இருந்து 24,000 பேரை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது நடப்பு நிதியாண்டில் 15,000 பேரை பணியமர்த்தியுளது.
விப்ரோவின் அறிவிப்பு
விப்ரோ ஏற்கனவே தகுதியான ஊழியர்களுக்கு சம்பள உயர்வினை ஜனவரி 1 முதல் தொடங்கியுள்ளது. அதோடு 100% வேரியபிள் சம்பளத்தினை வழங்க அறிவித்தது. இதே மற்றொரு முன்னணி ஐடி நிறுவனமான காக்ணிசன்ட், இந்தியாவில் 2 லட்சம் உழியர்களை கொண்டுள்ளது. அதோடு 2021ல் 23,000 ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளது. அதோடு லேட்டரல் பணியர்த்தலையும் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications