நடப்பு ஆண்டில் பலருக்கும் மறக்க முடியாத ஆண்டாகவே இருக்கும். அந்தளவுக்கு மக்களை பாடாய்படுத்தி வந்தது இந்த கொரோனா. எனினும் இதில் முதலீட்டாளர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்க கூடிய விஷயம் என்னவெனில் பங்கு சந்தைகள் பட்டையை கிளப்பியது தான்.
நடப்பு ஆண்டு பலருக்கும் மறக்க முடியாத ஆண்டாகவே இருக்கும். அந்தளவுக்கு மக்களை பாடாய்படுத்தி வந்தது இந்த கொரோனா. எனினும் இதில் முதலீட்டாளர்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்க கூடிய விஷயம் என்னவெனில் பங்கு சந்தைகள் பட்டையை கிளப்பியது தான்.
இது தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நல்ல லாபத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ஐ போலவே வருவாய் விகிதமானது உச்சத்தினை தொட்டது குறிப்பிடத்தக்கது.
தேவை அதிகரிப்பு
தொழிற்துறைகளை பெருந்தொற்று என்பது மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தியிருந்தது. எனினும் ஒவ்வொரு துறையில் டிஜிட்டல் தேவையானது உட்புகுந்துள்ளது. மொத்தத்தில் ஐடி துறையின் தேவையானது அதிகரித்துள்ளது. இதனால் பல துறையினரும் டிஜிட்டல் துறை, கிளவுட் சேவைகளுக்காக கூடுதலாக முதலீடு செய்து வருகின்றனர்.
தொடர்ந்து வளர்ச்சி
இதற்கிடையில் தான் ஐடி நிறுவனங்களுக்கான ஒப்பந்தம் என்பது மிகப்பெரிய அளவில் சமீபத்திய காலாண்டுகளாக அதிகரித்தது. கடந்த செப்டம்பர் காலாண்டில் கூட டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்களின் வளர்ச்சியானது முறையே 17% 21% மற்றும் 30% ஆக அதிகரித்துள்ளது. இது இந்த நிறுவனங்களில் மட்டும் அல்ல ஹெச் சி எல் டெக்னாலஜி, டெக் மகேந்திரா உள்ளிட்ட நிறுவனங்களிலும் கடந்த 5 காலாண்டுகளாக தொடர்ந்து மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியினை கண்டு வருகின்றது.
ஐடி-க்காக செலவு
இந்த போக்கு வரும் ஆண்டிலும் தொடரலாம் என கார்ட்னரின் அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. இதற்கிடையில் ஐடி துறைக்கான செலவினங்கள் கடந்த 2020ல் 0.9% வளர்ச்சி கண்டது. இதே 2021ல் 9.5% வளர்ச்சி கண்டுள்ளது. இது 2022ம் ஆண்டில் 5.5% ஆக இருக்கலாம் என கார்ட்னர் மதிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் 2020ல் 1.7% ஆகவும், இதே 2021ல் 11.2% ஆகவும், 2022ல் 8.6% ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்குதாரர்கள், ஊழியர்களுக்கு சலுகைகள்
இத்தகைய வளர்ச்சிகளுக்கு மத்தியில் நீண்டகாலத்திற்கு பிறகு ஐடி நிறுவனங்கள் பலத்த லாபத்தினை கண்டுள்ளன. இதன் காரணமாக ஊழியர்களுக்கு நல்ல சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகள் இருந்தன. பங்குதாரர்கள் நல்ல லாபத்தினை கண்டனர். எனினும் இது இனி வரும் காலாண்டுகளில் தொடருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஊழியர் வீத வருமானம்
உன்னிப்பாக இந்த விஷயத்தினை கவனித்தோமானால், டிசிஎஸ் நிறுவனத்தில் டிசம்பர் 2020ல் ஒரு ஊழியர் 1% வருவாயினை கொடுத்திருந்த நிலையில், செப்டம்பர் 2021 காலாண்டில் -1% வருவாயினையே கொடுத்துள்ளனர். இதில் இன்ஃபோசிஸ், விப்ரோ நிறுவனங்கள் நல்ல லாபகரமான நிறுவனங்களாக இருந்தாலும், ஹெச் சி எல், டெக் மகேந்திரா போன்ற நிறுவனங்கள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன.
அட்ரிஷன் விகிதம்
ஐடி நிறுவனங்களில் கடந்த காலகட்டங்களில் அட்ரிஷன் விகிதம் என்பது பெரும் சவாலான விஷயமாக இருந்து வந்தது. டிசிஎஸ் நிறுவனத்தில், டிசம்பர் 2020ல் 7.6% ஆக இருந்த விகிதம், செப்டம்பர் 2021ல் 11.9% அதிகரித்துள்ளது.
இதே இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் டிசம்பர் 2020ல் 10% ஆக இருந்த விகிதம், செப்டம்பர் 2021ல் 20.1% ஆக இருந்தது.
இதே விப்ரோ நிறுவனத்தில் 11% ஆக இருந்த விகிதம் , 20.5% ஆக செப்டம்பரில் அதிகரித்துள்ளது.
இதே ஹெச். சி.எல் டெக் நிறுவனத்தில் 10.2% ஆக இருந்த விகிதம், 15.7% ஆக அதிகரித்துள்ளது.
இதே டெக் மகேந்திராவில் 12% ஆக இருந்த விகிதம், செப்டம்பரில் 21.1% ஆக அதிகரித்துள்ளது.
மார்ஜின்
ஐடி துறையில் தேவையானது அதிகம் உள்ள அதே சமயத்தில் திறனுள்ள ஊழியர்களுக்கான தேவையானது அதிகமாகவே உள்ளது. இதற்கிடையில் சம்பள விகிதம் என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இது நிறுவனங்களின் மார்ஜினில் சரிவினை ஏற்படுத்தியுள்ளது.
எதிர்பார்ப்பு
மொத்தத்தில் 2022ம் ஆண்டில் ஐடி நிறுவனங்களில் கடந்த ஆண்டினை போல தேவை என்பது மிகப்பெரிய அளவில் அதிகரிக்க வேண்டும். அப்படி இல்லாவிடில் ஐடி நிறுவனங்களின் வளர்ச்சி விகிதமானது சரியக் கூடும். இது நடப்பு ஆண்டில் பங்குதாரர்களுக்கு கொடுத்த லாபம், ஊழியர்களுக்கு கிடைத்த சம்பள உயர்வுகள் என்பது இந்த ஆண்டு அதே அளவு இருப்பது கடினமான ஒன்றாகத் தான் இருக்கின்றது. எனினும் கொரோனாவுக்கு முந்தைய நிலையை காட்டிலும் டிஜிட்டல் துறையில் நிச்சயம் ஒரு சீரான வளர்ச்சி என்பது இருக்கலாம் என்ற பரவலான எதிர்பார்ப்பு இத்துறையில் இருந்து வருகின்றது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications