உலகம் முழுக்கவே பல்வேறு புதுமைகளை அறிமுகப்படுத்தும் கம்பெனிகளில் ஐடி மற்றும் டெக்னாலஜி கம்பெனிகளுக்கு எப்போதும் ஒரு தனி இடம் உண்டு.
இப்போதும், ஒரு சில ஐடி மற்றும் டெக்னாலஜி கம்பெனிகள், கொரோனா வைரஸ் பிரச்சனையால் வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் ஊழியர்களை கவனத்தில் எடுத்துக் கொண்டு, சில புதுமையான திட்டங்களை அறிவித்து இருக்கிறார்களாம்.
போனஸ் வாங்கிக் கொள்ளலாம், ஆனால் சம்பளப் பிடித்தம் செய்வோம் எனச் சொல்கிறார்கள் சில கம்பெனிகள். சில கம்பெனிகளோ சம்பள பிடித்தம் எல்லாம் இல்லை என்கிறார்கள். அப்படி என்ன திட்டம்? வாங்க பார்போம்.
2000 டாலர் போனஸ்
Stripe Inc. என்கிற கம்பெனி, அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, நியூ யார்க் மற்றும் சியாட்டில் போன்ற நகரங்களில் இருந்து வெளியேறும் ஊழியர்களுக்கு 20,000 டாலரை ஒரு முறை போனஸாகக் கொடுக்க இருக்கிறார்களாம். ஆனால் அவர்களின் சம்பளத்தில் 10 சதவிகிதத்தை பிடித்தம் செய்ய போவதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
ஏன் சம்பளப் பிடித்தம்
இந்த சலுகைத் திட்டம், 2020-ம் ஆண்டு வரை, வேறு நகரங்களுக்கு மாற விரும்பும் ஊழியர்களுக்கு கொடுக்க இருக்கிறார்களாம். பொதுவாகவே பெரு நகரங்களில் செலவீனங்கள் அதிகமாக இருக்கும். ஆனால் சிறு நகரங்களில் செலவுகள் மற்றும் வாழ்கைத் தரச் செலவுகள் எல்லாம் கொஞ்சம் குறைவாக இருக்கும். எனவே, சிறு நகரங்களுக்குச் செல்பவர்களுக்கு போனஸையும் கொடுத்து சம்பளத்தையும் பிடித்தம் செய்கிறார்களாம்.
மற்றும் ஒரு கம்பெனி
இதே போல VMware Inc. என்கிற கம்பெனியும், நிரந்தரமாக வீட்டில் இருந்தே வேலை பார்க்க விரும்பி, சிலிகான் வேலியை விட்டு வெளியே செல்லும் ஊழியர்களுக்கு, சம்பளப் பிடித்தம் செய்ய இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. ஊழியர்கள் எந்த நகரத்துக்கு மாறிக் கொள்ள இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து சம்பளக் குறைப்பும் இருக்குமாம்.
டென்வர் நகரத்துக்கு 18 %
உதாரணத்துக்கு VMware Inc. கம்பெனி ஊழியர் ஒருவர், சிலிகான் வேலியில் இருந்து, டென்வர் நகரத்துக்கு மாறப் போகிறார் என்றால் அவருக்கு 18 % சம்பளப் பிடித்தம் செய்வார்களாம். லாஸ் ஏஞ்சலஸ், சான் டியாகோ போன்ற நகரங்களுக்கு மாறும் ஊழியர்களுக்கு 8 % சம்பளப் பிடித்தம் செய்யப் போகிறார்கள் என லைவ் மிண்டில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
வீட்டில் இருந்தே வேலை பாருங்கள்
ரவுண்ட் ராக் என்கிற டெக்ஸாஸ் மாகாணத்தைச் சேர்ந்த கம்பெனி, தன் ஊழியர்களை வீட்டில் இருந்து வேலை பார்க்க 400 டாலர் பண உதவி எல்லாம் செய்து இருக்கிறதாம். இப்போது வரை, வேறு நகரங்களுக்குச் சென்று வேலை பார்க்கும் ஊழியர்களின் சம்பளத்தை, இப்போதைக்கு குறைக்கவில்லை எனவும் தெளிவுபடுத்தி இருக்கிறது இந்த ரவண்ட் ராக் கம்பெனி.
முக்கிய கம்பெனிகள்
இதே போன்ற ஊழியர்களுக்கான திட்டங்களை, உலகின் முன்னணி டெக்னாலஜி கம்பெனிகளான ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவர்கள் ஆலோசித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஃபேஸ்புக் வெளிப்படையாகவே ஊழியர்கள் மாற்றம் செய்யும் நகரத்தைப் பொறுத்து சம்பளம் குறைக்கப்படும் எனச் சொன்னது இங்கு நினைவு கூறத்தக்கது.
கம்பெனிக்கு என்ன லாபம்
வேறு நகரங்களுக்கு மாறும் கம்பெனி ஊழியர்களுக்கு சம்பளத்தைக் குறைப்பது, அலுவலக இடங்களுக்கு அதிக வாடகை அல்லது விலை கொடுக்க வேண்டிய தேவை குறைவு போன்றவைகளால், கம்பெனிகளுக்கு கணிசமாக பணம் மிச்சமாகும். இந்த மாதிரியான திட்டங்கள் விரைவில் இந்தியாவுக்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
டிசிஎஸ் முன்னோடி
ஏற்கனவே இந்தியாவின் மிக பெரிய ஐடி கம்பெனியான டிசிஎஸ், வரும் 2025-ம் ஆண்டுக்குள், தன் மொத்த ஊழியர்களில் சுமாராக 75 சதவிகிதம் பேர் நிரந்தரமாக, வீட்டில் இருந்தே வேலை பார்க்கும் நிலை வரலாம் எனச் சொல்லி இருந்தது இங்கு நினைவு கூறத்தக்கது. ஆக இந்தியாவில் இந்த திட்டங்கள் எட்டிப் பார்பப்தற்கு அதிக நாள் ஆகாது. எனவே இப்போதே சொந்த ஊருக்கு படையெடுக்கத் தயாரிக் கொள்ளுங்கள் மக்களே!
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications