பொதுவாக இந்த ஆண்டு அனைத்து துறைகளுக்கும் பெருத்த அடி தான் எனினும், இந்தியாவின் வளர்ச்சியில் கணிசமான பங்கினை கொண்ட சேவைத் துறையினை சேர்ந்த ஐடி துறைக்கும் பெருத்த அடி விழுந்து கொண்டிருக்கிறது எனலாம்.
ஏனெனில் இந்தியாவில் பல ஐடி நிறுவனங்கள் இருந்தாலும் அவற்றில் வீட்டில் இருந்து பணி புரியும் ஆப்சன் இல்லை எனலாம்.
அப்படியே வீட்டில் இருந்து பணிபுரியும் ஆப்சன் இருந்தாலும், அது எந்த அளவுக்கு வேலை செய்யும் என தெரியவில்லை. இதெல்லாவற்றுக்கும் அப்பால், உலகமே இன்று கொரோனாவால் ஸ்தம்பித்து போயுள்ளது.
ஐடி துறையின் அவுட்லுக்
இப்படி இருக்கையில் ஐடி துறைக்கான தேவையும் குறைந்துள்ளது. இந்த நிலையில் லைவ் மிண்டில் வெளியான ஒரு அறிக்கையில் ஐடி துறையில் வருவாய் பற்றிய அவுட்லுக் எவ்வளவு மோசமாக இருக்கும் என்ற செய்தி ஒன்று வெளியானது. இந்த நிலையில் மார்ச் 2020வுடன் முடிவடைந்த காலாண்டில் ஐடி நிறுவனங்கள் தங்களது நிதி அறிக்கைகளை தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர்.
வளர்ச்சி பாதிக்கும்
கொரோனா தொற்று நோய் ஏற்படும் வரை பெரும்பாலான நிபுணர்கள் ஐடி அவுட்சோர்சிங் சந்தையில் பரந்த அடிப்படையிலான வலிமை இருப்பதாகவும் கூறி வந்தனர், அதோடு அது எதிர்வரும் காலத்தில் நல்ல வலிமையோடு இருக்கும் என்றும் எதிர்பார்த்தனர். ஆனால் கொரோனா தொற்று நோய் காரணமாக இந்திய ஐடி துறையில் வருவாய் வளர்ச்சி விகிதம் பாதிக்கப்படும் என்று கூறுகிறது மற்றொரு அறிக்கை.
வேலை வாய்ப்பு
இதுகுறித்து முக்கிய ஐடி துறையில் அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்தியாவின் ஏற்றுமதி வருவாயில் ஐடி துறை முக்கிய இடம் பிடித்துள்ளது. இத்துறையின் மூலம் ஆண்டுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. இது இந்தியாவின் வளர்ச்சிக்கும் மிக உறுதுணையாக இருந்து வருகிறது. அதோடு இந்த துறையில் 40 லட்சத்துக்கு அதிகமானோர் இத்துறையில் வேலை வாய்ப்பினை பெற்றுள்ளனர்.
கொரோனாவால் தளர்வு
ஆனால் இத்துறையில் கொரோனாவினால் சற்று தளர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் இதன் எதிர்கால வளர்ச்சி என்ன ஆகுமோ என்ற குழப்பத்தில் நிறுவனங்கள் உள்ளன. அது மட்டும் அல்லாது ஒவ்வொரு மாதமும் மார்ச் முதல் மே வரையிலான காலத்தில் புதிய ஒப்பந்தங்கள் இருக்கும். ஆனால் நடப்பு ஆண்டில் அது இயலாத ஒன்றாகிவிட்டது.
வளர்ச்சி வீழ்ச்சி
கடந்த மார்ச் காலாண்டினை பொறுத்தவரையில் முதல் இரண்டு மாதங்கள் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த சந்தையிலும், நிர்வகிக்கப்பட்ட சேவைகளிலும் வலுவான வளர்ச்சியினைக் காட்டின. இருப்பினும் 85% வளர்ச்சி விகிதமானது ஜனவரி பிப்ரவரி மாதங்களில் முன்பதிவு செய்யப்பட்டது. மார்ச் மாதத்திலும் தொற்று நோயின் தாக்கம் குறிப்பிடத்தக்க தாக்கம் இருந்தது. மார்ச் மாதத்தில் வீழ்ச்சி இருந்த போதிலும் முதல் இரண்டு மாதங்களில் வளர்ச்சி நன்றாக இருந்தது.
வளர்ச்சி இம்புட்டு தான்
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் காலாண்டின் தொடக்கத்தில் ஆண்டுக்கு 9 - 10% வரை இந்திய நிறுவனங்கள் வளர்ச்சி பாதையில் இருந்தன. ஆனால் இதே கடைசி மாதத்தில் 2% மட்டும் இருந்தது. இது கொரோனாவின் தாக்கத்தினால் உலகளாவிய அளவில் குறைந்தது. அதிலும் ஐடி துறையின் முக்கிய தேவையை கொண்டிருந்த அமெரிக்கா, கொரோனாவினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது.
வளர்ச்சி குறையும்
ஆக வரும் காலாண்டுகளில் ஐடி நிறுவனங்களின் காலாண்டு வளர்ச்சி 17% குறைந்து, ஆண்டு வளர்ச்சியில் 7% அடி வாங்கலாம் என்றும் ஒர் அறிக்கை கூறுகிறது. இது பயணம் ரத்து, போக்குவரத்து மற்றும் விருந்தோம்பல் போன்ற முக்கிய தொழில்களில் பலவீனத்தால் தூண்டப்படுகிறது. இதனால் 60% ஐடி வாடிக்கையாளர்கள் 90 நாட்களுக்கு தங்களது தொழில் நுட்பங்களுக்கான செலவினங்களை தாமதப்படுத்துவார்கள் என்றும் இந்த அறிக்கை எதிர்பார்ப்பதாகவும் கூறியுள்ளது.
ஆக எவ்வளவு அடி வாங்கப்போகிறது என்று தெளிவாக இல்லாவிட்டாலும் நிச்சயம் பிரச்சனை உண்டு என்பதை இந்த அறிக்கைகள் தெளிவாக்குகின்றன.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications