IT நிறுவனங்களுக்கு காத்திருக்கும் ஜாக்பாட்.. கொரோனாவுக்கு பிறகு நல்ல காலம் தான்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டு வரலாற்றில் மறையாத ஒரு ஆண்டாகத் தான் இருக்கும். ஏனெனில் அந்தளவுக்கு மக்கள் மனதில் பதிந்துள்ளது. மயான அமைதி காணும் தெருக்கள். லட்சக்கணக்கானோர் வேலை பார்த்து வந்த நிறுவனங்கள் மூடல், தொழில்சாலைகள் காற்று வாங்கிக் கொண்டிருக்கும் நிலை. இப்படி எது எடுத்தாலும் பின்னடைவு தான்.

இப்படி ஒவ்வொரு துறையையும் தன் பாட்டுக்கு ஆட்டி வைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ், சேவை துறையினைச் சேர்ந்த ஐடி துறையையும் பாடாய்படுத்தி வருகிறது.

ஒரு புறம் இவர்களுக்கு உள்ள நல்ல விஷயம் என்னவெனில் ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாம் என்பது தான். ஆனால் உலகளவில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் நிலையில், ஐடி துறைக்கான தேவையும் குறைந்துள்ளது எனலாம்.

பெரும் இழப்பு

பெரும் இழப்பு

இந்த நிலையில் இடியில் வெளியான செய்தி ஒன்றில், கொரோனா வைரஸானது பல்வேறு வணிகங்களில் பல சவால்களையும் பிரச்சனைகளையும் எழுப்பியுள்ளது. இந்த கொடிய தொற்று நோயானது நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு உலகப் பொருளாதாரத்தில் இழப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம். மேலும் மனித உயிர் இழப்புகளிலும் பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் உலகிற்கு தீர்வு

டிஜிட்டல் உலகிற்கு தீர்வு

சுகாதார நெருக்கடி காரணமாக ஒரு நிச்சயமற்ற வணிகச் சூழல் காரணமாக, கார்ப்பரேட்டுகள் தங்கள் வணிகத்தினை மறுபரிசீலனை செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறது. ஏனெனில் தற்போது சமூக விலகல் என்பது புதிவித நெறிமுறையாக மாறியுள்ளது. எனினும் இதில் டிஜிட்டல் உலகம் அதிர்ஷ்டவசமாக விலகியுள்ளது எனலாம். ஏனெனில் ஒரு விதமான தீர்வைக் கொண்டுள்ளது.

ஐடி துறைக்கு நல்ல விஷயம்

ஐடி துறைக்கு நல்ல விஷயம்

இது டிஜிட்டல் உலகிற்கு ஒரு நல்ல செய்தியாகவே உள்ளது. சமீபத்திய காலங்களில் முதலீட்டாளர்கள் ஐடி சேவைகளின் முக்கிய நுகர்வோராக இருக்கும், மேற்கத்திய பொருளாதாரங்களில் மந்த நிலை காரணமாக சில சந்தேகங்களை எதிர்கொள்கின்றனர். எனினும் கொரோனா வைரஸூக்கு பிந்தைய உலகில், புதிய மாற்றங்கள் வரலாம். அது ஐடி துறையினை பெரும் லாபம் ஈட்டும் துறையாக மாற்றலாம்.

டிஜிட்டல் மயமாகியுள்ளது

டிஜிட்டல் மயமாகியுள்ளது

பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது அனைத்து செயல்முறைகளையும் டிஜிட்டல் மயமாக்கியுள்ளன. மேலும் அவை தொழிலாளர்களின் பாதுக்காப்பு நலன் கருதி அதிநவீன பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு கருவிகளில் முதலீடு செய்து வருகின்றன.

டிஜிட்டல் வளர்ச்சி காணலாம்

டிஜிட்டல் வளர்ச்சி காணலாம்

ஐடி துறையின் முக்கிய வணிகங்களான வங்கி துறை மற்றும் பிற நிதி சேவைகள், கல்வி, சில்லறை விற்பனை, சுகாதாரம், உணவு மற்றும் மளிகை விநியோகம் போன்றவை உள்ளன. இந்த நிலையில் கொரோனாவுக்கு பிந்தைய நிலையில் பல நிறுவனங்கள் டிஜிட்டல் வளர்ச்சிக்கு தள்ளப்படலாம். ஆக வளர்ந்து வரும் டிஜிட்டல் மயமாக்கலினால் தகவல் தொழில்நுட்ப துறை மேலும் வளர்ச்சி காணலாம்.

சில்லறை துறை ஆதரவு அளிக்கும்

சில்லறை துறை ஆதரவு அளிக்கும்

ஆக ஒவ்வொரு துறையும் டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் ஆட்டோமேஷன் நோக்கி நகரும் என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் வீட்டில் இருந்து வேலை செய்வது சற்று பிரச்சனையாக கருதப்பட்டாலும், தற்போது இயல்பாக மாறத் தொடங்கியுள்ளது. ஆக வணிகங்கள் விரைவில் வழக்கம் போல செயல்பட முடியும். அதிலும் சில்லறை துறைகள் ஆதரவு சேவைகளுக்காக அதிக செலவு செய்யலாம். இது ஐடி துறைக்கு ஆதரவு அளிக்கலாம்.

இ-காமர்ஸ் துறையின் முதுகெலும்பு

இ-காமர்ஸ் துறையின் முதுகெலும்பு

இதேபோல் தொழில்நுட்பம் இ-காமர்ஸின் முதுகெலும்பாக உருவாகப் போகிறது. ஏனெனில் இது மொபைல் மற்றும் வலைதளங்களில் விற்பனையாளர்களையும், வாடிக்கையாளர்களையும் இணைக்க உதவுவதோடு, மட்டுமல்லாமல், வாடிக்கையாளர் ஆர்டர்கள், விநியோகங்கள், வருமானம் மற்றும் வாங்கிய பொருட்களுக்கான கொடுப்பனவுகளை நிர்வகிக்கவும் உதவுகிறது. ஆக கொரோனாவுக்கு பின்பு ஐடி துறையானது நிச்சயம் வலுவான வளர்ச்சியினைக் காணலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT companies have many chances after covid -19

IT companies have many chances after covid -19, coronavirus make many challenges and opportunities across various sectors. but digital world has some sort of a solution to the problem. its good news for digital sector.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X