இந்திய ஐடி நிறுவனங்களில் ஒரு வருடத்திற்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருந்த போது ஊழியர்கள் பற்றாக்குறை இருந்தது மட்டும் அல்லாமல் ஒரு ஐடி ஊழியர் சர்வ சாதாரணமாக 2 முதல் 4 வேலைவாய்ப்புகளை கையில் வைத்துக்கொண்டு 120 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை பெற்று அசத்தி வந்தனர்.
ஆனால் நிலைமையே வேறு, ஐடி நிறுவனத்தில் அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு மட்டும் அல்லாமல் பிரஷ்ஷர்களுக்கு கூட அடுத்த 6 மாதத்திற்கு வேலைவாய்ப்பு கிடைப்பது என்பது பெரும் சவாலாகவே இருக்கும்.

இந்தியாவில் முன்னணி staffing நிறுவனங்கள் வெளியிட்டுள்ள தகவல்கள் படி முன்பு 100 வேலைவாய்ப்புகளுக்கு ஊழியர்கள் தேவை இருக்கும் இடத்தில் தற்போது வெறும் 25 - 30 ஊழியர்களுக்கு மட்டுமே டிமாண்டு உள்ளது. இதனால் staffing நிறுவனங்களின் வர்த்தகமும் பெரிய அளவில் குறைந்துள்ளது.
ஒருப்பக்கம் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும், செலவுகளை குறைக்கும் விதமாக டெக் ஊழியர்களின் பயிற்சிக்கு ஒதுக்கப்படும் தொகையை பெரிய அளவில் குறைத்துள்ள காரணத்தால் பிர்ஷ்ஷர்களுக்கான வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதேபோல் வர்த்தகம் குறைந்து வரும் வேளையில் பென்ச்-ல் இருக்கும் ஊழியர்களை புதிய தொழில்நுட்படத்தில் பயிற்சி கொடுத்து பணியில் சேர்ப்பதில் தீவிரமாக உள்ளனர்.
சில மாதங்கள் முன்பு வரையில் ஐடி நிறுவனங்கள் வெளியில் இருந்து ஊழியர்களை சேர்க்க மிகவும் ஆர்வமுடன் இருந்தனர், தற்போது ஊழியர்களின் utilisation அளவை மேம்படுத்தவும், பென்ச்-ல் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்து அனைத்து ஊழியர்களையும் Billable resource ஆக மாற்ற வேண்டும் என நோக்கத்தில் ஊழியர்களின் திறனை upskill செய்து வருகிறது.
இதுமட்டும் அல்லாமல் ஒரு ஊழியர் ராஜினாமா செய்துவிட்டால், இந்த இடத்தில் புதிய நபரை சேர்க்கும் பணிகளும் மிகவும் தாமதப்படுத்தபடுகிறது. இதிலும் முக்கியாமாக வெளியில் இருந்து ஒருவரை நியமிக்க வேண்டுமெனில் கூடுதல் தாமதமாகிறது என டீம்லீஸ் தலைவர் சுனில் கூறுகிறார். ஐடி நிறுவனங்கள் அனைத்தும் சீப் சம்பளத்தில் ஊழியர்களை பணியில் சேர்க்க திட்டமிட்டு உள்ளது எனவும் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு 100 சதவீதம் சம்பள உயர்வு கொடுத்தாலும் மறுத்த ஊழியர்கள் தற்போது மிகவும் குறைந்த சம்பள உயர்வையே வழங்குகிறது. அப்படி அதிகப்படியான சம்பள உயர்வை கொடுத்தாலும் கொடுத்தாலும் நிறுவனம் குறித்து சந்தேகம் ஊழியர்களுக்கு எழுகிறது. இதனால் ஐடி ஊழியர்கள் மத்தியில் வேறு நிறுவனங்களுக்கு மாறுவது குறித்த எண்ணம் இல்லை, இதனால் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஊழியர்கள் அட்ரிஷன் விகிதம் குறைந்து வருகிறது.


Click it and Unblock the Notifications