இந்தியாவில் கொரோனா தொற்றுக் காரணமாகப் பெரும்பாலான ஐடி நிறுவன ஊழியர்கள், கடந்த 2020 மார்ச் மாதம் முதல் வீட்டில் இருந்து பணியாற்றி வருகின்றனர். இதில் 90 சதவீதம் ஊழியர்கள் பெரு நகரங்களில் இருந்து அவர்களது வீட்டை காலி செய்துவிட்டு சொந்த ஊருக்கே சென்றுள்ளனர்.
கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வரும் நேரத்தில் வேக்சின் செலுத்திக் கொண்டோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் தற்போது லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு அளிக்கப்பட்டு, நிறுவனங்கள் திறக்கப்பட்டு வருகிறது.
இதனால் நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களும் தங்களது ஊழியர்களைத் திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளனர்.
இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ
இந்தியாவின் டாப் 3 ஐடி நிறுவனங்களான இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ ஆகியவை தங்கள் ஊழியர்களுக்குப் பெரும்பாலானோருக்கு வேக்சின் அளித்துள்ள காரணத்தால், ஊழியர்களை அலுவலகத்தில் வந்து பணியாற்ற அழைக்க முடிவு செய்துள்ளது.
ஊழியர்களுக்கு வேக்சின்
தற்போது இன்போசிஸ் நிறுவனத்தில் 59 சதவீத ஊழியர்களுக்கும், விப்ரோ நிறுவனத்தில் 55 சதவீத ஊழியர்களுக்கும், டிசிஎஸ் நிறுவனத்தின் 5 லட்சம் ஊழியர்களில் 70 சதவீத ஊழியர்களுக்கும் குறைந்தபட்சம் ஒரு வேக்சின் சோஸ் போடப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வேக்சின் கட்டாயம்
இதுமட்டும் அல்லாமல் இன்போசிஸ், விப்ரோ போன்ற நிறுவனங்கள் அனைத்தும் வேக்சின் வேண்டும் எனப் புதிதாக ஆர்டர்களையும் வைத்துள்ளது. இந்த ஆர்டர் மூலம் மீதமுள்ள ஊழியர்களுக்கு வேக்சின் கட்டாயம் அளிக்க முடியும் என நம்புகிறது.
அலுவலகத்திற்கு ஊழியர்கள் அழைப்பு
கொரோனா தொற்று குறித்து அதிகளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்பதால் முதல் கட்டமாக இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ சில சதவீத ஊழியர்களை மட்டுமே அழைக்க முடிவு செய்துள்ளது. அடுத்த 2 காலாண்டுகள் காலகட்டத்தில் தொடர்ந்து அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
பெங்களூர்
ஏற்கனவே பெங்களூரில் இருக்கும் பல சிறு, குறு ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை அலுவலகத்திற்கு அழைத்துள்ள வேளையில், கேப்ஜெமினி, இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளின் கீழ் சில சதவீத ஊழியர்களை மட்டுமே அழைக்க முடிவு செய்து அதற்கான பணிகளைத் துவங்கியுள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications