இந்திய ஐடி ஊழியர்களுக்குப் பொற்காலமாக இருந்த 2021ஆம் ஆண்டை போலவே 2022ஆம் ஆண்டும் இருக்கும் என முக்கியமான சந்தை கணிப்புக் கூறுகிறது.
இதனால் ஐடி ஊழியர்களுக்குத் தொடர்ந்து அதிகப்படியான வேலைவாய்ப்புகளும், அதிகப்படியான சம்பள உயர்வும் பெற முடியும் எனத் தெரிகிறது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக்குப் பின்பு உலக நாடுகளில் இருக்கும் அனைத்துத் துறை சார்ந்த நிறுவனங்களும் அதிகப்படியான தொகையை டெக் சேவை மேம்பாட்டில் முதலீடு செய்து ஊழியர்களின் தேவையைக் குறைக்க முடிவு செய்தது.
ஐடி சேவை
இதன் வாயிலாக இந்தியாவில் இருக்கும் அனைத்து ஐடி சேவை நிறுவனங்களும் குறைவான விலையில் தரமான ஐடி சேவைகளை அளித்து வரும் காரணத்தால் வெளிநாட்டில் இருந்து அதிகப்படியான திட்டங்களைப் பெற்றது. குறைந்த காலகட்டத்தில் அதிகப்படியான திட்டங்களைப் பெற்ற காரணத்தால் ப்ராஜெட்களைத் திட்டமிட்ட தேதிக்குள் முடிக்க வேண்டி கட்டாயம் உருவானது.
டெக் ஊழியர்கள்
இதனால் இந்தியாவில் இருக்கும் அனைத்து ஐடி சேவை நிறுவனத்திலும் டெக் ஊழியர்களின் தேவை அதிகரித்தது, போட்டி நிறுவனங்களில் இருந்து திறன் வாய்ந்த ஊழியர்களை அதிகப்படியான சம்பளம் கொடுத்து ஈர்க்க வேண்டிய கட்டாயம் உருவானது.
சம்பள உயர்வு
பொதுவாக ஐடி துறையில் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவோருக்கு 30 முதல் 45 சதவீதம் வரையிலான சம்பள உயர்வு மட்டுமே கொடுக்கப்படும், ஆனால் திறன் வாய்ந்த ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தால் 120 சதவீதம் வரையில் சம்பள உயர்வு கொடுத்துப் பணியில் அமர்த்தப்பட்டு வந்தது.
120% சம்பள உயர்வு
தற்போது Xpheno நிறுவனத்தின் அறிவிப்பின் படி புல் ஸ்டாக் இன்ஜினியர்ஸ், டேட்டா சியின்டிஸ்ட், டேட்டா இன்ஜினியர்ஸ், பேக்என்ட் இன்ஜினியர்ஸ், மற்றும் மூத்த அல்லது அதிக அனுபவம் வாய்ந்த ஊழியர்களுக்கு 2022ஆம் வருடமும் 60 முதல் 120 சதவீதம் வரையில் சம்பள உயர்வு அல்லது கவுன்டர் ஆஃபர் கொடுத்து ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணியில் அமர்த்துவது தொடரும் எனத் தெரிவித்து உள்ளது.
பிற முக்கியத் தொழில்நுட்பம்
இதேபோல் தற்போது ஐடி நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு, கிளவுட், செக்யூரிட்டி மற்றும் இன்ஜினியரிங் பிரிவில் அதிகப்படியான முதலீட்டைச் செய்துள்ள காரணத்தால் இப்பிரிவு ஊழியர்களுக்கு அதிகப்படியான டிமாண்ட் மற்றும் சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications