ஐடி ஊழியர்கள் கடந்த பல மாதங்களாக வீட்டில் இருந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்னும் சில மாதங்களுக்கு ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி செய்வது தொடரக்கூடும் என்றும் கர்நாடக அரசு கூறியுள்ளது.
இது குறித்து வெளியான செய்தியில், கர்நாடக அரசு ஐடி நிறுவனங்களை கொரோனா வைரஸ் காரணமாக திறக்க கேட்கப்போவதில்லை. தற்போது நடைமுறையில் உள்ளபடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவது இன்னும் சில மாதங்களுக்கு தொடரக்கூடும்.
ஐடி மற்றும் பிடி துறையின் பொறுப்பாளராக இருக்கும், கர்நாடகாவின் துணை முதமைச்சர் சி என் அஸ்வத் நாராயண், நிறுவனங்களை தங்களது அலுவலகங்களைத் திறக்கும்படி கட்டாயப்படுத்த முடியாது. அவர்கள் தற்போது உள்ளபடியே வீட்டில் இருந்தே பணிபுரியட்டும்.
இன்னும் சில மாதங்களுக்கு WFH தான்
நேரம் சரியாக இருக்கும் போது நிறுவனங்கள் அழைப்பு விடுக்கும். மேலும் நிறுவனங்களை அவர்களது ஊழியர்களை அலுவலகங்களில் வந்து பணிபுரியச் செய்யும் படி அரசாங்கத்திற்கு எந்த முன் சிந்தனையும் இல்லை. தற்போது நிலைமையும் அதற்கேற்றதாக இல்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.
WFH-ல் நிறுவனங்கள் பாதிப்பு
தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிந்து வருவதாகவும், அது நிறுவனங்களின் உற்பத்தி திறனை பாதித்துள்ளது. இதனால் நிறுவனங்கள் அலுவலகங்களை திறக்க அழுத்தம் கொடுக்குமாறும் சுயதீன எம்எல்ஏ கேள்வியெழுப்பியுள்ளார். அதோடு இதன் காரணமாக போக்குவரத்து உள்ளிட்ட சில துறை சார்ந்த குழுக்களிலும் உள்ள தாக்கத்தினை சுட்டிக் காட்டியுள்ளார்.
வாழ்வாதாரங்கள் பாதிப்பு
இதேபோல உடுப்பி எம்எல்ஏ கே ரகுபதி பட்டும், ஐடி நிறுவனங்கள் இன்னும் திறக்கப்படாததால், கேண்டீன்கள், கேப்ஸ் மற்றும் பிற சார்புடைய வாழ்வாதரங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளார். ஆக ஐடி நிறுவனங்களை திறக்குமாறு அரசாங்கம் கேட்க வேண்டிய நேரம் இது என்றும் கூறியுள்ளார்.
டெக்னாலஜிக்கள் வளர்ச்சி
இதற்கு பதிலளித்த அஸ்வத் நாரயண், அலுவலகங்கள் திறந்தவுடன், துணை சேவைகளும் மீண்டு வரும். எனினும் நிலவி வரும் நெருக்கடியான நிலையால், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவது தான், பாதுகப்பானதும், விருப்பமானதாகவும் உள்ளது. மேலும் தகவல் தொழில்நுட்பம், ஸ்டார்டப்கள் மற்றும் கண்டுபிடிப்பு துறைகள் உள்ளிட்ட துறைகளில் தொற்றுநோய் காலத்தில், அவற்றை மீட்பதற்கு டெக்னாலஜிகள் வந்துள்ளன என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
வீட்டில் இருந்தே பணிபுரியுங்கள்
கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து பெங்களூரிவில் தொற்று நோயின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், நிறுவனங்கள் அதன் ஊழியர்களை வீட்டில் இருந்து பணிபுரியுமாறு கேட்டுக் கொண்டன. ஐடி மற்றும் பிபிஓ நிறுவனங்களை டிசம்பர் இறுதிவரை வீட்டில் இருந்தே பணிபுரியுமாறும் அரசாங்கமும் கேட்டுக் கொண்டது. இந்த நிலையில் இந்த மாதத்துடன் இந்த கோரிக்கை முடிவடையவிருக்கும் நிலையில், ஜனவரியில் இருந்து மீண்டும் அலுவலகங்கள் திறக்கப்படுமா? என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் சில மாதங்களுக்கு அலுவலகங்கள் திறக்கப்படாது என்பதனை இதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications