IT sector updates: ஐடி துறையில் சமீபத்திய காலமாக பணியமர்த்தல் என்பது குறைந்து, மாறாக பணி நீக்கம் என்பது அதிகரித்து வருகின்றது. சர்வதேச அளவிலான டெக் நிறுவனங்கள் பல ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்துள்ளன.
கூகுள் நிறுவனம் தொடங்கி விப்ரோ வரையில் பணி நீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளன. இது குறித்து ஐடி ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையே இருந்து வருகின்றது.

இந்த சூழலில் தான் அசெஞ்சர் நிறுவனமும் ஏற்கனவே சமீபத்தில் தேர்தெடுத்தவர்களை, பணியமர்த்த தாமதப்படுத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்ந்து செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும், இந்த சூழலில் தான் பணியமர்த்தலை குறைப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில் தான் புதிய பணியமர்த்தல்களை தாமதப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது.
சில தினங்களுக்கு முன்பு டிசிஎஸ் நிறுவனமும் தனது ஆன்போர்டிங்கினை தாமதபடுத்தி வருவதாக தகவல்கள் வெளியானது. நாட்டின் முன்னணி நிறுவனமான டிசிஎஸ், நாட்டில் அதிகளவில் வேலை வாய்ப்புகளை வழங்கி வரும் நிறுவனமாகும்.

டிசிஎஸ் நிறுவனம் என்பது பணி நீக்கம் என்பது இல்லாவிட்டாலும், எனினும் இது நிச்சயம் செலவு குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடலாம். ஏற்கனவே டிசிஎஸ் வேரியபிள் பேவினை குறைத்துள்ளது. இதற்கிடையில் ஆன்போர்டிங் என்பதும் தாமத்தியுள்ளதாக தெரிகிறது.
இது மிகப்பெரிய ஐடி நிறுவனங்களின் மார்ஜினில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில், தேவையானது சரிவினைக் கண்டு வருகின்றது. இதன் காரணமாக ஐடி துறையிலும் தாக்கம் இருக்கலாம். ஆக இந்த போக்கு இன்னும் சில மாதங்கள் நீடிக்கலாம் என்ற அச்சமும் இருந்து வருகின்றது. ஆக இந்த சமயத்தில் புதிய பணியமர்த்தல் என்பதும் தாமதப்படலாம்.
அதே போல ஐடி நிறுவனங்கள் முந்தைய காலாண்டுகளில் இருந்ததை போல் அல்லாமல், நடப்பு காலாண்டில் குறையலாம். இது மேற்கொண்டு ஐடி துறையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
மொத்தத்தில் தற்போது நிலவி வரும் மெதுவான பொருளாதார மந்த நிலை, புதிய பணியமர்த்தல் என்பதில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். டிசிஎஸ் நிறுவனத்தினை பொறுத்தவரையில் பணியமர்த்தலை செய்தாலும், முந்தைய காலாண்டுகளை காட்டிலும் குறைவாகவே உள்ளது.


Click it and Unblock the Notifications