இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் ஐடி துறையானது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் முன்னணியில் உள்ளது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு இது இன்னும் அதிகரித்துள்ளது.
ஐடி துறையில் சுமார் 55% CIOs அதிகாரிகள், முழு நேர ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக கார்ட்னர் இன்க் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
இது குறிப்பாக தங்களது டிஜிட்டல் சேவைகளை மேம்படுத்த, ஆட்டோமேஷன், கிளவுட் மற்றும் அனலிஸ்டிக்ஸ் இயங்குதளங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் தொலைதூர பணிகளுக்கான ஆதரவினையும் தெரிவித்துள்ளனர்.
சாதகமான தாக்கம்
கார்ட்னரின் ஆராய்ச்சி துணைத் தலைவர் மத்தேயு சார்லெட், ஐடி துறையில் கொரோனா சாதகமான தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. 2020ன் மத்தியில் இருந்த தடுமாற்றம், அவநம்பிக்கை குறைந்து, தற்போது ஐடி துறையில் வளர்ச்சி மேம்பட ஆரம்பித்துள்ளது. மேலும் டிஜிட்டல் வளர்ச்சியினை மேம்படுத்துவது அவசியம். ஏனெனில் வணிக நடவடிக்கைகளில் ஆட்டோமேஷன் மற்றும் கிளவுட் சேவை என்பது அதிகரிக்கும்.
பணியமர்த்த விருப்பம்
ஆக இந்த காலக்கட்டத்தில் ஐடி துறையில் புதியதாக அதிக முழு நேர ஊழியர்களை பணியமர்த்த CIOs விரும்புகின்றனர். இதற்கு வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களுக்கு மத்தியில் வாய்ப்புகள் அதிகம். எனிம் ரீமோட் ஒர்க், அனலிடிக்ஸ், கிளவுட் பிளாட்பார்ம், டேட்டா செண்டர், நெட்வொர்க் சிஸ்டம்ஸ் நிர்வாகம் மற்றும் அப்பிளிகேஷன்களின் பராமரிப்பு ஆகியவை கிளவுட் சேவையை நோக்கி மாறுவதால், பணியாளர்களின் எண்ணிக்கை குறைவதையும் காணலாம்.
ஒப்பந்தங்கள் அதிகரிப்பு
எப்படி இருப்பினும் ஐடி நிறுவனங்கள் பணியமர்த்தலை திட்டமிட்டுள்ளன. ஏனெனில் தற்போது டிஜிட்டல் தேவைகள் அதிகரித்து வரும் நிலையில், பல நிறுவனங்கள் புதிய பல ஒப்பந்தங்களை செய்துள்ளன. இதனால் தற்போது ஊழியர்களின் பணியமர்த்தலுக்க இது வழிவகுக்கும். குறிப்பாக டிஜிட்டல் திறனுள்ள ஊழியர்களுக்கு டிமாண்ட் அதிகரிக்கும்.
பணியமர்த்தல் அதிகரிக்கும்
ஆக கடந்த நிதியாண்டினை போலவே, நடப்பு நிதியாண்டிலும் ஐடி துறையில் பணியமர்த்தல் என்பது அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். அதோடு கடந்த ஆண்டினை போலவே, நடப்பு ஆண்டிலும் பணியமர்த்தல், சம்பள அதிகரிப்பு என பலவும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக ஐடி ஊழியர்களின் காலத்திற்கு ஏற்ப தங்களது டிஜிட்டல் திறனை மேம்படுத்திக் கொள்வது, நல்ல வாய்ப்புகளை அடைய வழிவகுக்கும்.


Click it and Unblock the Notifications