மார்ச் காலாண்டு முடிவுகளுக்கு பின்பு இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த நிலையை விரைவில் மாற்ற வேண்டும் என்பதற்காக அனைத்து முன்னணி ஐடி நிறுவனங்களும் இரு முக்கியமான விஷயங்களை இலக்காக கொண்டு இயங்க முடிவு செய்துள்ளது.
ஐடி நிறுவனங்கள் மீதான நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவில் குறைந்துள்ளது, இந்த நிலையை மாற்ற ஐடி நிறுவனங்கள் விரைவாக செயல்பட முடிவு செய்துள்ளது. இதற்காக ஐடி நிறுவனங்கள் தனது லாபத்தின் மார்ஜின் அளவை அதிகரிக்கவும், ஊழியர்களை அதிகளவில் பயன்படுத்தவும் முக்கிய இலக்காக கொண்டு உள்ளது.

இவ்விரண்டையும் பூர்த்தி செய்தால் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களை குறைக்க வழிவகை செய்வது மட்டும் அல்லாமல் ஊழியர்களின் செயல்திறனை முழுமையாக பெற முடியும். இதேவேளையில் மார்ஜின் அளவுகளை உயர்த்துவதன் மூலம் நிறுவனத்தின் நிதிநிலை மேம்படும், இதனால் தானாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை திரும்ப பெற முடியும் என நம்புவதாக தெரிகிறது.
இந்திய ஐடி நிறுவனங்களில் ஊழியர்களை பயன்படுத்தும் அளவு அதாவது Employee Utilisation rates கடந்த சில காலாண்டுகளாக அதிகரித்துள்ளது. இது புதிய திட்டங்களை ஐடி நிறுவனங்கள் பெறுவதில் இருக்கும் சிக்கலில் துவங்கி, அளவுக்கு அதிகமாக நிறுவனத்தில் இருக்கும் நிலையை தொடர்ந்து பென்சில் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்தியாவின் 2வது பெரிய ஐடி சேவை நிறுவனமான இன்போசிஸ்-ன் Employee Utilisation அளவு மார்ச் காலாண்டில் 76.9 சதவீதமாக குறைந்துள்ளது. இதேபோல் விப்ரோ நிறுவனத்தை பார்த்தால் 2023 ஆம் நிதியாண்டு முழுவதையும் ஒப்பிடும் போது Employee Utilisation அளவு 72.8 சதவீதமாக குறைந்துள்ளது. 2020 ஆம் ஆண்டை காட்டிலும் குறைவான அளவாகும், மேலும் 7 ஆண்டுகளில் 81.20 சதவீதம் தான் குறைவான அளவீடு.

இந்த பிரச்சனை டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல், விப்ரோ போன்ற பெரிய ஐடி சேவை நிறுவனங்களில் மட்டும் அல்லாமல் சிறிய மற்றும் நடுத்தர ஐடி சேவை நிறுவனங்களிலும் உள்ளது. ஆனால் முதலீடுகளும், முதலீட்டாளர்கள் கவனமும் அதிகப்படியாக பெரிய ஐடி சேவை நிறுவனங்கள் மீது இருக்கும் காரணத்தால் அதிக பாதிப்பை பெரிய நிறுவனங்கள் எதிர்கொள்கிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

Indane வாடிக்கையாளர்களே உஷார்!! சிலிண்டர் புக் செய்ய புதிய எண்கள், வழிமுறைகள் அறிவிப்பு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

முடிவுக்கு வருகிறதா ஈரான் போர்? 3 கண்டிஷன்களை வெளியிட்ட ஈரான் அதிபர்..!! அடுத்தது என்ன?

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

சிலிண்டர் இணைப்பு வைத்திருப்போருக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு!! உடனே இந்த வேலையை முடிங்க!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications