நியூயார்க்: ஐடி துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 2023ம் ஆண்டு சாபக்கேடாக அமைந்தது. ஏனெனில் லட்சக்கணக்கான ஊழியர்கள் கூண்டாக பணியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில் ஐடி துறையை கனவாக கொண்டிருப்பவர்களுக்கும் இந்த ஆண்டு சபிக்கப்பட்ட ஆண்டாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. காரணம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஐடி துறைக்கு ஆட் சேர்ப்பு குறைந்த அளவில் நடத்தப்பட்டிருப்பதுதான்.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கடந்த 2022ம் ஆண்டு இறுதியில் ஒரு முக்கிய முடிவை எடுத்தது. இந்த முடிவு ஐடி துறையை புரட்டி போட்டுவிடும் என்று அப்போது மெட்டா எதிர்பார்த்திருக்கவில்லை. அதாவது கடந்த ஆண்டு நவம்பரில் பேஸ்புக்கில் பணியாற்றிய 11 ஆயிரத்திற்கும் அதிகமான ஊழியர்களுக்கு ஒரு மெயில் வந்திருந்தது. அந்த மெயிலில், "கொரோனா தொற்றுக்கு பின்னர் சந்தை சீராக இருக்கும் என்று எதிர்பார்க்கபட்டது. ஆனால் போட்டி, விளம்பரம் மூலம் வரும் வருமானத்தில் ஏற்பட்ட இழப்பு, நெருக்கடிகள் ஆகியவை காரணமாக ஊழியர்கள் பலரை பணி நீக்கம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. இவையனைத்துக்கும் நானே பொறுப்பேற்கிறேன்" என்று எழுதப்பட்டிருந்தது.

பொறுப்பேற்ற மார்க் ஸக்கர்பெர்க் சொகுசாக வலம் வந்துக்கொண்டிருக்க வேலையிழந்த இளைஞர்கள் அடுத்து என்ன செய்வது என்பது தெரியாமல் விழிபிதுங்கி நின்றுக்கொண்டிருந்தனர். இந்த மெயில் வந்த நேரத்தில் ஊழியர்களின் நிலைமை என்னவாக இருந்தது என்பது குறித்து பல்வேறு கதைகள் வெளிவர தொடங்கின. இதை படித்த யாரும் கண்ணீர் சிந்தாமல் இருந்திருக்க மாட்டார்கள். ஏனெனில் பிரசவ வார்டுகளிலும், அம்மாவின் இறுதி சடங்கிலும், புதிய திருமண வாழ்க்கையிலும் நின்றுக்கொண்டிருந்த பேஸ்புக் ஊழியர்களுக்கும் சேர்ந்தே இந்த மெயில் அனுப்பப்பட்டிருக்கிறது.
இதெல்லாம் வெறும் பேஸ்புக் ஊழியர்களின் கதை மட்டுமே. பேஸ்புக் பற்ற வைத்த நெருப்பு கூகுள், மைக்ரோசாஃப்ட், விப்ரோ உள்ளிட்ட பெருநிறுவனங்கள் தொடங்கி சிறிய ஐடி நிறுவனங்கள் வரை லட்சக்கணக்கான ஊழியர்களை எரித்து தீர்த்தது. அமெரிக்காவில் H-1B விசாவை கொண்டிருந்த இந்தியர்கள் பெரும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டனர். இதெல்லாம் கடந்த மார்ச் மாதம் வரை நடந்த சம்பவமாகும். சரி எல்லாம் முடிந்தது. லட்சக்கணக்கில் வெளியேற்றப்பட்ட இளைஞர்களுக்கு பதிலாக அதே அளவில் ஆட்கள் எடுக்கப்பட்டிருக்க வேண்டுமே என்ன ஆச்சு என சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்பி வரும் நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது, 2023ம் ஆண்டில் மிகப்பெரும் நான்கு நிறுவனங்கள் நடத்தியுள்ள ஆட்சேர்க்கை கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 66% குறைவாகும். அப்படியெனில் 100 பேரை வெளியேற்றிவிட்டு வெறும் 34 பேரை மட்டுமே நிறுவனங்கள் புதியதாக எடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அமெரிக்க வங்கிகளின் நெருக்கடி பலவீனமான உலகளாவிய மேக்ரோ நிலைமை போன்றவற்றின் காரணமாக டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக்னாலஜிஸ் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 66% அளவுக்கு குறைவான ஆட்களையே எடுத்திருக்கின்றனர். அதாவது கடந்த ஆண்டு இந்த நிறுவனங்கள் 2,43,258 பேரை வேலைக்கு எடுத்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 82,679 ஆக சுருங்கியிருக்கிறது.
இதுவே தனித்தனியாக பார்த்தால் டிசிஎஸ் 78%, விப்ரோ 70% ஆகவும் எச்.சி.எல் டெக் 57.2%, இன்ஃபோசிஸ் 46.3% ஆகவும் குறைவான ஆட்களை எடுத்திருக்கின்றனர். ஆனால் நிறுவனங்கள் தரப்பில் இதற்கு வேறு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஆட்குறைப்பு காரணமாக ஐடி ஊழியர்களின் ஊதியம் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளனர். டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியரின் கடந்த ஆண்டு ஊதியம் ஆண்டுக்கு ரூ.32.4 லட்சமாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ரூ.36.6 லட்சமாக அதிகரித்துள்ளது. அதேபோல இன்போசிஸ் நிறுவன ஊழியரின் ஆண்டு சம்பளம் ரூ.38.7 லட்சத்திலிருந்து ரூ.42.7 லட்சமாக அதிகரித்துள்ளது.
எச்.சி.எல் டெக் ஊழியரின் ஊதியம் ரூ.35.2 லட்சத்திலிருந்து ரூ.44.9 லட்சமாக அதிகரித்துள்ளது. விப்ரோ ஊழியர்களின் ஊதியம் ரூ.32.5 லட்சத்தில் இருந்து ரூ.41 லட்சமாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications