ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் பிரச்சனை.. அதுவும் அடுத்த இரண்டு காலாண்டுகளில்.. என்ன அது?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

புனே: நடப்பு நிதியாண்டில் கொரோனாவின் காரணமாக இந்திய ஐடி துறை மிக கடுமையாக பாதிக்கும் என்று இன்ஃபோசிஸ் முன்னாள் மூத்த அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

இது குறித்து அவர் இந்திய தகவல் தொழில் நுட்ப துறையானது மிக மோசமான பல காரணிகளால் பாதிக்கும். குறிப்பாக கொரோனாவினால் மிகக் கடுமையாகக் பாதிக்கும் என்றும் கூறியிருந்தார்.

ஏனெனில் தாங்கள் அதிகளவில் அண்டை நாடுகளுக்கு சேவை அளித்து வந்த நிலையில், தற்போது வெளி நாடுகளிலும் கொரோனா அச்சம் காரணமாக தொழில்துறைகள் முடங்கியுள்ளன.

ஐடி துறை வீழ்ச்சி காணும்

ஐடி துறை வீழ்ச்சி காணும்

ஏனெனில் ஐடி துறையில் முக்கிய பங்கு வகிக்கும் தொழில்களில், சில்லறை விற்பனை, விமான தொழில் எரிவாயு மற்றும் பிற நிதி சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அந்தந்த துறையில் செலவினை குறைக்க முற்படலாம். அதன் ஒரு பகுதியாக ஐடி சேவைக்கும் செலவினைக் குறைக்க முற்படலாம் என்றும் கூறப்பட்டது. இதன் காரணமாக நடப்பு நிதியாண்டில் ஐடி துறையானது கணிசமான அளவு வீழ்ச்சியினை காணும் என்றும் அந்த மூத்த அதிகாரி கூறியிருந்தார்.

2008 பொருளாதார வீழ்ச்சி

2008 பொருளாதார வீழ்ச்சி

அதுவும் அது 2008ல் இருந்து ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினை போலத் தான் இருக்கும் என்றும் கூறினார். அதுவும் இந்த பிரச்சனை இன்னும் எவ்வளவு நாட்களுக்கு நீடிக்கும், அது எந்தளவுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்ற கேள்வினையும் ஏற்படுத்தியது. இதற்கிடையில் பல ஐடி நிபுணர்கள் தொடர்ந்து ஐடி துறைக்கு எதிர்மறையாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர்.

லாக்டவுன் தான் காரணம்

லாக்டவுன் தான் காரணம்

இந்த நிலையில் செவ்வாய்கிழமையன்று இடியில் வெளியாக ஒர் அறிக்கையில், கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் புதிய ஒப்பந்தங்கள் என்பது குறைவாகத் தான் கையெழுத்தாகின. இதற்கு முக்கிய காரணம் கொரோனாவினால் பல நாடுகளில் லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளதே என்றும் கூறியுள்ளது.

செலவினங்களை குறைக்க திட்டம்

செலவினங்களை குறைக்க திட்டம்

மேலும் கொரோனா பயத்தினால் பல நாடுகளின் நிறுவனங்கள் தங்களது புதிய திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். சில நிறுவனங்கள் தங்களது ஐடி செலவினங்களையும் குறைக்கத் தொடங்கியுள்ளன. சென்சார் டெக்னாலஜிஸ் (Zensar Technologies) மார்ச் மாத இறுதியில் 600 மில்லியன் டாலர் ஒப்பந்த குழாய் வைத்திருந்த நிலையில், மே 1 தொடக்கத்தில் 1 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக தெரிவித்துள்ளது.

டிஜிட்டல் துறையில் வளர்ச்சி

டிஜிட்டல் துறையில் வளர்ச்சி

இதில் 70 சதவீதம் டிஜிட்டல் ஒப்பந்தங்களில் வந்தவையாம். மேலும் கிளவுட் கம்ப்யூட்டிங்க் இதில் கணிசமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுடன் தங்கள் வணிகத்தினை நிறுவனத்துடன் ஒருங்கிணைக்க விரைவாக செயல்படுகிறது என்றும் சென்சார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய ஒப்பந்தம்

புதிய ஒப்பந்தம்

அதே நேரம் பெங்களுரினை அடிப்படையாக கொண்ட மைண்ட் ட்ரீ நிறுவனமும் புதிய ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது. இதே Pareekh Jain Consulting நிறுவனத்தின் தலைவர் பரீக் ஜெயின் இது குறித்து கூறுகையில், கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்ட ஆரம்ப சரிவுக்கு பிறகு, ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இவைகள் கூட ஒப்பந்தம்

இவைகள் கூட ஒப்பந்தம்

நடுத்தர நிறுவனங்கள் கையெழுத்து இடுவது கூட இந்த காலத்தில் அதிகரித்துள்ளதாகவும், LTTS, KPIT உள்ளிட்டவை கூட இரண்டு மாதங்களில் பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. எல் அன்ட் டி டெக்னாலஜி சர்வீசஸ் 50 மில்லியன் டாலருக்கு குறைவான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அதே நேரத்தில் பெர்சிஸ்டன்ட் சிஸ்டம்ஸ் ஒரு மென்பொருள் வாடிக்கையாளருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

செலவினை குறைக்க திட்டமிடல்

செலவினை குறைக்க திட்டமிடல்

ஆக கடந்த இரண்டு மாதங்களாக ஒப்பந்தங்கள் அதிகரித்து வருவதாகவும், இந்த ஒப்பந்தங்களில் பெரும்பாலானவை ப்யூச்சரில் உள்ள திட்டம் என்றும் KPITயின் நிறுவனர் ரவி பண்டிட் தெரிவித்துள்ளார். இதே சில வாடிக்கையாளார்கள் தங்களது ஒப்பந்தங்களை முடித்துக் கொள்ள பேசி வருவதாகவும், அவர்கள் செலவினை குறைக்க ஒப்பந்தத்திற்கான செலவினங்களில் குறைக்க பேசி வருவதாகவும் இத்துறை சார்ந்த் மூத்த நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

சில காலாண்டுகள் வரை வீழ்ச்சி தான்

சில காலாண்டுகள் வரை வீழ்ச்சி தான்

எப்படி இருப்பினும் இத்துறையில் நடப்பு நிதியாண்டில் தங்களது ஒப்பந்தத்தினை முடித்து கொள்ளலாம். ஒப்பந்த தொகையினை குறைக்க முற்படலாம். மேலும் நடப்பு நிதியாண்டில் ஒரு சில காலாண்டுகளில் வருவாய் வீழ்ச்சியினை பதிவு செய்யலாம். எனினும் மற்றொரு வகையில் மீட்சிக்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. அவை மிக நீண்ட காலத் திட்டங்களா என்று தான் பார்க்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறியுள்ளனர்.

ஊழியர்களுக்கு காத்திருக்கும் பிரச்சனை

ஊழியர்களுக்கு காத்திருக்கும் பிரச்சனை

ஏற்கனவே ஐடி துறையில் உள்ள பிரச்சனைகளினால் பல லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சம்பள குறைப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக இன்னும் வருவாய் வீழ்ச்சி காணும்போது இன்னும் எந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமோ? உண்மையில் ஐடி ஊழியர்களுக்கு இன்னும் பிரச்சனைகள் காத்துக் கொண்டுள்ளது என்று தான் கூற வேண்டும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT companies to record a decline in revenues over the first few quarters of the ongoing FY

Analysts said IT companies to record a decline in revenues over the first few quarters of the ongoing fiscal year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X