IT ஊழியர்கள் வீட்டில் இருந்தே வேலை பாருங்க.. அவசியம் இருந்தா மட்டும் ஆபீஸ் போங்க!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: உலக அளவில் கொரோனா வைரஸ் காரணமாக ஐடி துறையில் வேலைவாய்ப்பு குறைந்து வருவதாக கடந்த மாதம் வெளிவந்த அறிக்கையில் மூலம் அறிய முடிந்தது.

இந்த நிலையில் ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக வீட்டில் இருந்தே பணியாற்றுவதற்கு ஐ.டி. ஊழியர்களுக்கு, நிர்வாகம் தரப்பில் உத்தரவிடப்பட்டது.

தகவல் தொழில் நுட்பம் மற்றும் பயோ டெக்னாலஜி நிறுவனங்கள் வீட்டிலிருந்தே வேலையை தொடர ஊக்குவிக்கப்பட்டு வந்தன.

சேவையை மீண்டும் தொடரலாம்

சேவையை மீண்டும் தொடரலாம்

தற்போது சற்று தளர்வுகள் இருந்தாலும் மிக அவசியமான முக்கியமான தேவை தவிர யாரும் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டாம் எனவும் கர் நாடக அரசு ஊக்குவிக்கின்றது. இந்த நிலையில் ஏப்ரல் 20 முதல் ஓரளவு தளர்வுகள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதிலும் உள்துறை அமைச்சகம் தனது வழிகாட்டுதல்களில் தகவல் தொழில்நுட்ப துறை மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் 50% ஊழியர்களை வைத்து தங்கள் அலுவலகங்களில் மீண்டும் சேவை நடவடிக்கையை தொடரலாம் என்று கூறியது. .

வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதியுங்கள்

வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதியுங்கள்

இந்த நிலையில் ஐடி நகரம் அமைந்துள்ள கர்நாடகாவில், முந்தைய உத்தரவை அரசு வாபஸ் பெற்றுள்ளது. எனினும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் அத்தியாவசிய மற்றும் முக்கியமான சேவைகள் மட்டுமே பதவியில் இருந்து வேலை செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கலாம். ஆக ஊழியர்களை வழக்கம் போல வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதிக்குமாறு நிறுவனங்களை, முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா கூறியுள்ளார்.

5ஜி சோதனை

5ஜி சோதனை

ஓரளவு தளர்வு இருந்தபோதிலும் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறியுள்ளதாகவும், தானும் வீட்டில் இருந்தே பணியாற்ற திட்டமிட்டுள்ளதாகவும் என்று விப்ரோ தலைவர் ரிஷாத் பிரேம்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விப்ரோவில் 93% ஊழியர்களை வீட்டிலிருந்து பணியாற்ற ஒப்புதல்களைப் பெற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளார்.

அவசியம் சென்றாக வேண்டும்

அவசியம் சென்றாக வேண்டும்

மேலும் எங்களது சேவைகளின் ஒரு பகுதியாக 5ஜிக்காக எங்கள் ஆய்வகங்களில் சோதனைகள் நடைபெற்று வருகின்றன. அவைகளை வீட்டில் இருந்து செய்ய முடியாத முக்கிய பணியாக உள்ளது. ஆக அவர்கள் அலுவலகங்கள் வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனினும் மற்ற பணியாளர்கள் பெரும் அளவில் வீட்டில் இருந்து பணியாற்றவே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் ரிஷாத் கூறியுள்ளார்.

பணிபுரிய அனுமதி

பணிபுரிய அனுமதி

இதே பெங்களுரினை அடிப்படையாகக் கொண்ட, இன்ஃபோசிஸ், மைண்ட் டீரி, டெல் டெக்னாலஜி உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதே போல மும்பை மற்றும் பெங்களுரு உள்ளிட்ட நகரங்களில் மீண்டும் வீட்டில் இருந்து பணிபுரிய மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

பயோகான் நிறுவனம்

பயோகான் நிறுவனம்

மும்பையை சேர்ந்த டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனம் தனது 25% வருகையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது. பெங்களூரை தளமாகக் கொண்ட பயோகான் நிறுவனம் அத்தியாவசிய மருந்து உற்பத்தியை தொடர்ந்து இயக்கும் என்றும் என்றும் கூறியுள்ளது. ஆக இப்படியாக பல நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை தளர்த்தல் இருந்த போதிலும் வீட்டில் இருந்தே பணியாற்ற கூறி வருகின்றன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT companies want employees to continue WFM

IT and bio-technology companies are encouraging employees to continue work from home, except for those involved in critical functions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X