கொரோனா பாதிப்புக் காரணமாக 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வருமான வரித்துறை நிதியமைச்சகத்தின் ஒப்புதலுடன் கால நீட்டிப்பு செய்துள்ளது.
இதனால் வருமான வரி செலுத்த வேண்டிய தனிநபர் அனைவரும் புத்தாண்டு கொண்டாட்டங்களை முடித்து விட்டு வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யலாம்.
வருமான வரி தாக்கல்
இன்று வருமான வரித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்யத் தனிநபர் பிரிவுக்கு 10 நாட்கள் நீட்டிக்கப்பட்டு ஜனவரி 10, 2021 வரையில் கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.
முன்பு டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நிறுவனங்களுக்கான அவகாசம்
இதேபோல் நிறுவனங்களுக்கு 2019-20ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்ய முன்பு ஜனவரி 31 வரையில் கால அவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், தற்போது 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுப் பிப்ரவரி 12, 2021 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
2 முக்கியத் தேதிகள்
பொதுவாக வருமான வரி தாக்கல் செய்வதற்கு வருமான வரித் துறை 2 தேதிகளை அறிவிக்கும் ஒன்று உரியத் தேதி (Due Date) மற்றொன்று கடைசித் தேதி (Last date).
ஆனால் மக்கள் உரியத் தேதியைத் தான் கடைசி நாளாகப் புரிந்துகொள்கின்றனர். அது முற்றிலும் தவறு வருமான வரியை அறிவிக்கப்பட்ட கடைசி நாள் வரையில், வருமான வரி அறிக்கையைத் தாக்கல் செய்யலாம்.
ஜனவரி 10, 2021
இந்த வகையில் 2019-20ஆம் நிதியாண்டுக்கும், 2020-21 கணக்கீடு ஆண்டுக்கும் வருமான வரி தாக்கல் செய்ய உரியத் தேதி (Due date) 10, ஜனவரி 2021. உரியத் தேதியில் வருமான வரி தாக்கல் செய்ய முடியாதவர்கள் கடைசி நாளான மார்ச் 31, 2021 வரையில் செலுத்தலாம்.
உரிமை இழப்பு
10, ஜனவரி 2021க்குள் செலுத்தத் தவறினால் நீங்கள் வர்த்தகத்திலோ அல்லது வீட்டுக் கடனில் ஏற்பட்ட நஷ்ட அளவீட்டை அடுத்த ஆண்டுகளுக்குக் கொண்டு செல்லும் பெரிய உரிமையை இழந்திடுவீர். எனவே 31, டிசம்பர் 2020க்குள் வருமான வரி செலுத்துவது ஆகச் சிறந்தது.
இதேபோல் கூடுதல் வரி செலுத்தியவர்களுக்கு உரியத் தேதிக்குள்ள செலுத்தவில்லை எனில் கூடுதல் வரிக்கான வட்டியைப் பெற முடியாது.
அபராதம் உண்டு
இவை அனைத்திற்கும் மேலாக 10, ஜனவரி 2021க்குப் பின் தாக்கல் செய்யப்படும் வருமான வரி அறிக்கைக்கு அபராதம் உண்டு. பொதுவாகத் தாமதமாகத் தாக்கல் செய்யப்படும் வருமான வரி அறிக்கைக்கு 5000 ரூபாய் அபராதத்தை வருமான வரித் துறை விதிக்கிறது.
10000 ரூபாய் அபராதம்
ஆனால் இந்த முறை 10, ஜனவரி 2021க்குப் பின் தாக்கல் செய்யப்படும் வருமான வரி அறிக்கையில் 5 லட்ச ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் இருந்தால் 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், இதேபோல் 5 லட்ச ரூபாய்க்கும் குறைவாக வருமானம் இருந்தால் 1000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும்.
பார்ம் 16 தேவையா?
வருமான வரி தாக்கல் செய்யும் அனைவருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி வருமான வரி தாக்கல் செய்யும் போது பார்ம் 16 தேவையா என்பது தான். கட்டாயம் தேவை என்பது இல்லை, ஆனால் பார்ம் 16 இருந்தால் எளிதாக வருமான வரியைத் தாக்கல் செய்ய முடியும்.
சரி பார்ம் 16 இல்லாமல் வருமான வரியை எப்படித் தாக்கல் செய்வது எப்படித் தெரியுமா..?
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications