வருமான வரித்துறையிடம் சிக்கிய ஹீரோ..? ரூ.1000 கோடிக்கு போலி செலவு கணக்கு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் கடந்த வாரம் வருமான வரித்துறை டெல்லி மற்றும் குருகிராமில் உள்ள இரண்டு ஹீரோ மோட்டோகார்ப் அலுவலகங்களிலும், நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான பவன் முன்ஜாலின் இல்லத்திலும் சோதனை நடத்தியது.

 

இந்தச் சோதனையில் வருமான வரித்துறை குற்றங்களுக்கான ஆதாரம்" பேப்பர் ஆதாரங்களாகவும், டிஜிட்டல் தரவுகள் வடிவத்தில் கண்டுபிடிக்கப்படித்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் ஐடி ரெய்டு .. 25 இடங்களில் அதிரடி சோதனை.! ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் ஐடி ரெய்டு .. 25 இடங்களில் அதிரடி சோதனை.!

1000 கோடி ரூபாய்

1000 கோடி ரூபாய்


ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் வருமான வரித்துறை செய்த சோதனையில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான போலி செலவுகள் கணக்குகளைக் கண்டுப்பிடித்துள்ளது. இந்தத் தரவுக்கு மார்ச் 23 முதல் 26ஆம் தேதி வரையில் செய்யப்பட்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டதாக சிஎன்பிசி கூறுகிறது.

பண்ணைவீடு

பண்ணைவீடு

இதேபோல் டெல்லியின் வெளிப்புறத்தில் அமைந்திருக்கும் சத்தர்பூர் பகுதியில் முன்ஜால் பண்ணைவீட்டை வாங்குவற்காகச் சுமார் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கான பணமாகப் பரிமாற்றம் செய்ததற்கான தரவுகளும் இந்தச் சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

ரியல் எஸ்டேட்
 

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட் சந்தையில் வரியைச் சேமிக்கும் நோக்கத்திற்காகப் பணமாக வர்த்தகம் செய்யும் முறை கையாளப்படுகிறது. இத்தகைய பணப் பரிமாற்றத்தில் பெரும்பாலும் கருப்புப் பணம் பணம் தான் அதிகளவில் புழக்கத்தில் இருக்கும்.

269SS சட்டம்

269SS சட்டம்

இது வருமான வரி சட்டத்தின் பிரிவு 269 SS படி, அசையாச் சொத்தை பரிவர்த்தனை செய்யும் போது, விற்பவர் வாங்குபவரிடமிருந்து 20,000 அல்லது அதற்கு மேல் பணமாகப் பெற்றால் 100% அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள்

ஹீரோ மோட்டோ கார்ப் பங்குகள்

இதன் வாயிகா ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன பங்குகள் இன்று 8 சதவீதம் வரையில் சரிந்து உள்ளது. இன்று காலை வர்த்தகம் துவங்கும் போது 2394 ரூபாய் விலையில் இருந்த ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவன பங்குகள் 2155 ரூபாய் வரையில் சரிந்தது. ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனப் பங்குகளில் 52 வார சரிவு விலை 2148 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT dept found Rs 1,000 crore bogus expenses raid on Hero Motocorp

IT dept found Rs 1,000 crore bogus expenses raid on Hero Motocorp வருமான வரித்துறையிடம் சிக்கியது ஹீரோ.. ரூ.1000 கோடிக்குப் போலி செலவு கணக்கு..!
Story first published: Tuesday, March 29, 2022, 16:59 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X