உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு எழுச்சியில் யார் எப்போது வேலையை இழக்க போகிறார்கள் என்று தெரியாமல் பீதியிலேயே இருக்கின்றனர். இந்த நிலையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்கள் அனைத்தும் ஜெனரேட்டிவ் AI தொழில்நுட்பத்தில் தனது உலகளாவிய வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க தயாராகி வருகிறது.
AI என்ன செய்துவிட முடியும் என பலரும் பேசிய நிலையில் இந்த மாத துவக்கத்தில் சர்வதசே அளவில் இயங்கி வரும் HR நிறுவனமான சேலஞ்சர், கிரே & கிறிஸ்மஸ் வெளியிட்ட தனது மாதாந்திர அறிக்கையின் படி, இந்த ஆண்டு மே மாதத்தில் தோராயமாக 4000 பேர் தங்களுடைய வேலையை இழக்க செயற்கை நுண்ணறிவு (AI) காரணம் என அறிவித்துள்ளது.

இது வெளிநாட்டு நிறுவனம் தான், இந்தியாவில் இப்படி நடக்காது என நீங்கள் கூறினால், உங்களுக்காகவே சுட சுட ஒரு தகவல்-ஐ விப்ரோ நிறுவனத்தின் மனித வள பிரிவின் தலைவராக இருக்கும் சௌரப் கோவில் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஐடி நிறுவனத்திலும் ஊழியர்களுக்கு பிரம்மிட் கட்டமைப்பு இருக்கும், இது அனைவருக்கும் தெரியும். இதில் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் பிரஷ்ஷர்கள் மற்றும் அடிப்படை பணிகளை செய்பவர்கள், இது ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு அடுக்குகளிலும் அனுபவம், பதவி கொண்டு மாறுப்படும்.
இந்த நிலையில் அனைத்து துறையிலும் ஜெனரேட்டிவ் AI ஆதிக்கம் இருக்கும் வேளையில் ஐடி துறையில் மட்டும் வராதா என்ன.. சொல்லப்போனால் ஐடி துறை நிறுவனங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படும் என்பதை உறுதி செய்கிறது விப்ரோ நிறுவனத்தின் மனித வள பிரிவின் தலைவராக இருக்கும் சௌரப் கோவில்.
சௌரப் கோவில் கொடுத்த பேட்டியில் ஜெனரேட்டிவ் AI வளர்ச்சி மூலம் நிறுவனத்தில் கீழ் மட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் செய்யும் பல்வேறு அடிப்படை ஆய்வு பணிகளை இனி மெஷின் அதாவது AI தொழில்நுட்பம் வாயிலாக செய்யப்படும்.
இதன் மூலம் ஊழியர்கள் இனி இயந்திரங்கள் செய்ய முடியாத கடினமான பணிகளை செய்ய உட்படுத்தப்படுவார்கள். இதனால் ஊழியர்கள் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் சௌரப். இதில் என்ன இருக்கிறது என்றால் AI தொழில்நுட்பம் மூலம் கீழ் மட்டத்தில் சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கைய எளிதாக குறைக்க முடியும்.
சமீபத்தில் தான் விப்ரோ புதிதாக சேரும் பிரஷ்ஷர்களின் சம்பளத்தை பாதியாக குறைத்தது. இது ஐடி ஊழியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.

இதோடு நிற்காமல் சௌரப் கோவில் தான் தலைமை தாங்கும் HR துறைக்கு வரும் 80 சதவீத கோரிக்கைகள், கேள்விகள் அனைத்தையும் ஜெனரேட்டிவ் AI மூலம் இயங்கும் பாட் (BOT) எதிர்கொண்டு உரிய பதிலை-ஐ அளிக்கும் கட்டமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
இதனால் HR பிரிவில் இருக்கும் ஊழியர்களின் பணிகள் அடுத்த சில காலத்தில் பெரிய அளவில் குறைய உள்ளது, இதனால் ஹெச்ஆர் ஊழியர்கழ் இனி வரும் காலத்தில் அதிகளவில் மேனஜர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எப்படி டீம்-ஐ நிர்வாகம் செய்ய வேண்டும் என்ற பயிற்சி அளிக்கும் என விப்ரோ நிறுவனத்தின் மனித வள பிரிவின் தலைவராக இருக்கும் சௌரப் கோவில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications