டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் பல குழுப்பத்திற்கு முற்றுப்புள் வைத்தாலும் ஐடி ஊழியர்களுக்கு பணிநீக்கம் குறித்த விளக்கம் கிடைக்காமல் உள்ளது. இதேபோல் முதலீட்டாளர்களுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய சந்தை மூலம் வங்கி துறை மற்றும் அதன் வர்த்தகம் குறித்த பாதிப்பு எப்படி இருக்கும்? BFSI பிரிவின் வர்த்தகம், ஊழியர்கள் பாதிக்கப்படுவார்களா ஆகிய கேள்விகளுக்கு முழுமையான விளக்கம் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில் டிசிஎஸ் நிலைப்பாடும், இதன் திட்டமும் என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்தார் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை நிதியியல் அதிகாரியான கணபதி சுப்பிரமணியம்.

செயற்கை நுண்ணறிவு என்பது புதியது அல்ல, எனக்கு தெரிந்து நாங்கள் 1990 களில் இருந்து இதில் பணியாற்றி வருகிறோம். இப்போது இப்பிரிவு வேகமாக வளர்ந்தும், முதிர்ச்சி அடைந்து எல்லோரும் பயன்படுத்தும் ஒன்றாக மாறியுள்ளது. நீங்க, நான், என் குழந்தைகள் வரையில் எல்லோரும் பயன்படுத்தும் அளவிற்கு மாறியுள்ளது. இது மட்டும் அல்லாமல் தற்போது செயற்கை நுண்ணறிவு என்பது ஐடி ஊழியர்களை காட்டிலும் திறன் கொண்டதாக மாறியுள்ளது என்றும் சிஓஓ கணபதி சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
எங்களுடைய பல ப்ராடெக்-ல் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி வருகிறோம், உதாரணமாக TCS BaNCS தளத்தில் 90 சதவீத code ப்ராம்ட் மூலம் செய்துள்ளது. எங்களுடைய ஐடி ஊழியர்கள் உயர்தர specifications கொடுத்து உயர் தர ப்ராம்ட் மூலம் code உருவாக்கியுள்ளோம் என தெரிவித்தார். டிசிஎஸ் நிறுவனத்திற்கு AI ஒன்றும் புதியது இல்லை என தெரிவித்தார்.

AI மூலம் இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகளுக்கு பாதிப்பு இருக்குமாக என்ற கேள்விக்கு பதில் அளித்த டிசிஎஸ் சிஓஓ கணபதி சுப்பிரமணியம், இப்போதைக்கு ஐடி இன்ஜினியர்கள் பாதுகாப்பாக உள்ளனர். தற்போதைய நிலையில் ஊழியர்கள் செய்யும் பணியில் AI பயன்படுத்தப்பட்டு உள்ளதால் ஊழியர்களின் செயல்திறன் மேம்பட்டு உள்ளது என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications