மும்பை: பொதுவாக ஐடி துறையில் பணி நீக்கம் என்பது நீடித்து வரும் மந்த நிலை, பொருளாதார நெருக்கடி என பல பிரச்சனைகளால் தலை தூக்கி வருகின்றது. இதன் காரணாமாக
அவ்வப்போது பணி நீக்கம் என்பது இருந்து வருவது தான்.
இதுவே தற்போது உலகமே கொரோனாவால் முடங்கி போயுள்ள நிலையில் ஐடி துறையின் தேவையும் முடங்கியுள்ளது.
இதன் காரணமாக ஐடி ஊழியர்களின் வேலை பறிபோகும் நிலையே நீடித்து வருகின்றது. இது இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுக்க இவ்வாறு தான் பணி நீக்கம் செய்யப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் பணி நீக்கமா?
ஆனால் இனப்பாகுபாடால் ஐடி துறையில் பணி நீக்கம் செய்யப்படுமா என்றால்? அதனைத் தான் நம்ப முடியவில்லை. அமெரிக்காவில் உள்ள இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இந்த நிகழ்வு அரங்கேறி வருகின்றது. இதனால் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கடந்த வியாழக்கிழமையன்று, தான் இனப்பாகுபாடால் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
எதற்காக பணி நீக்கம்
மேலும் 2016ம் ஆண்டு தான் நிறுவனத்திற்கு எதிராக ஆப்பிரிக்கா இனத்தினை சேர்ந்த அமெரிக்காரரான டாவினா லிங்குவிஸ்ட் சாட்சியம் அளித்தற்காக தான் பணி நீக்கம் செய்யப்பட்டார். இவர் 2017ம் ஆண்டு இன்ஃபொசிஸ் நிறுவனத்தில் இருந்து விலகியதாகவும் தெரிவித்துள்ளார்.
இன்போசிஸ் மறுப்பு
ஆக இதன் காரணமாக தற்போது இன்ஃபோசிஸ் நிறுவனம் இனப்பாகுபாடு வழக்கு ஒன்றை எதிர்கொண்டுள்ளது. அதுமட்டும் அல்ல டாவினா லிங்குவிஸ்ட் தனக்கு இன்ஃபோசிஸ் நிறுவனம் தகுந்த இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இன்ஃபோசிஸ் தரப்பிலோ அப்படி இல்லை எனவும் மறுக்கப்பட்டுள்ளது.
அனைவருக்கும் ஒரே கொள்கை
மேலும் இன்ஃபோசிஸ் நிறுவனம் அனைத்து ஊழியர்களையும் ஒரே மாதிரியாக நடத்துவதாகவும், அனைத்து ஊழியர்களுக்கு ஒரே கொள்கை தான் எனவும் தெரிவித்துள்ளது. அது வேலை வாய்ப்பிலும் சரி, அலுவலகங்களிலும் ஒரே மாதிரியான கொள்கைகளை பின்பற்றுவதாகவும் தெரிவித்துள்ளது.
கருப்பினத்தவர் வழக்கு
அமெரிக்காவின் மின்னபொலிஸ்னகரில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்டு, கொலை செய்யப்பட்டதாக அமெரிக்காவில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதன் காரணமாக அங்கு பெரும் போராட்டமே நடந்தது. இந்த நிறுவனத்தின் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் இப்படி ஒரு சர்ச்சை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தலை தூக்கி வரும் பிரச்சனை
கடந்த ஆண்டு இறுதியில் இதே போன்ற குற்றசாட்டுகள் விப்ரோ நிறுவனத்திலும் எழுந்தது குறிப்பிடத்தக்கது. ஆக காலங்காலமாக அரங்கேறி வரும் இந்த குற்றச்சாட்டுகளால் பணி நீக்கம் என்பது தலைதூக்கி வருகிறது. தற்போதுள்ள நிலையில் ஐடி நிறுவனங்களுக்கு இதுவும் பெரும் பிரச்சனையாக அமையக்கூடும். ஏற்கனவே கொரோனாவால் பெரும் பிரச்சனைக்கு ஆளாகி வரும் நிலையில், தற்போது இது போன்ற பிரச்சனைகளும் தலை தூக்கி வருகின்றன.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications