IT ஊழியர்களுக்கு இது நல்ல செய்தி.. 60 லட்சம் வாய்ப்புகள் உருவாக்கப்படும்..!

இந்தியாவில் கடந்த மே முதல் ஆகஸ்ட் மாத காலத்தில் மட்டும் புரபஷனல் ஜாப்ஸ் பிரிவில் இருக்கும், 66 லட்சம் ஊழியர்கள் தங்களது வேலையை இழந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

இப்படி பெரு நிறுவனங்கள் முதல் சிறு நிறுவனங்கள் வரையில், வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்கும் நிலை தான் இந்தியாவில் இருந்து வருகிறது.

ஆனாலும் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் கொஞ்சம் ஆறுதல் தரக்கூடிய விஷயம் ஐடி துறை தான்.

புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை

புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை

ஏனெனில் இந்த நெருக்கடியான காலகட்டத்திலும் வேலை வாய்ப்புகளை கொடுத்து வரும் நிலையில், இனி வரும் ஆண்டுகளிலும் வேலை வாய்ப்புகளை இத்துறையில் அதிகரிக்க நடவடிக்கைகள் இருந்து வருகிறது. 2020 - 25ம் ஆண்டிற்கான புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கைக்கு கடந்த செப்டம்பர் முதல் வாரத்தில் கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

60 லட்சம் வேலைகள்

60 லட்சம் வேலைகள்

இந்த புதிய கொள்கையின் நோக்கமே கர்நாடாகவில் நேரடியாகவும், மறைமுகமாகவும், 60 லட்சம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் உருவாக்குவது தான். ஒரு டிரில்லியன் டாலர் டிஜிட்டல் பொருளாதாரத்தினை உருவாக்கும் குறிக்கோளில், 30 சதவீதம் பங்களிப்பை உருவாக்க, இந்த கொள்கை பயன்படும் என்றும் கூறப்படுகிறது.

உள்கட்டமைப்பை மேம்படுத்துங்கள்

உள்கட்டமைப்பை மேம்படுத்துங்கள்

அதோடு இந்த புதிய கொள்கை பொருளாதார வளர்ச்சியை நோக்கி முன்னேற உதவும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு தொழில் துறையை மேம்படுத்துவதற்கும், இத்துறைக்கு உத்வேகம் அளிக்கும் விதமாகவும் இந்த புதிய கொள்கைகள் உள்ளது. இது பெங்களுருவுக்கு அப்பால், முதலீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சியினை ஊக்குவிக்கப்பதற்கும் பரிந்துரைக்கிறது.

ஊக்கம்

ஊக்கம்

கர்நாடகா ஏற்கனவே நாட்டின் தகவல் தொழில்நுட்ப மையமாகவும், அதன் தலை நகரான பெங்களூரு உலகின் நான்காவது பெரிய தொழில்நுட்ப கிளஸ்டராகவும் உள்ளது. 1997ம் ஆண்டிலேயே தகவல் தொழில்நுட்ப கொள்கையை வகுத்த முதல் மாநிலமாகும். இது தொழில்துறையில் வளர்ச்சிக்கு ஊக்கத்தினையும் இதன் மூலம் அளிக்கிறது.

அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறை

அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறை

கர்நாடாகாவின் தகவல் தொழில்நுட்பத் துறையானது மிகப்பெரிய வேலைவாய்ப்பினை உருவாக்கும் தொழில்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அந்தளவுக்கு ஐடி துறைக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறையை, இன்னும் மேம்படுத்த கர்நாடாக அரசு நடவடிக்கையினை எடுத்து வருவது மிக நல்ல விஷயமே.

இன்னும் பல ஒப்பந்தம்

இன்னும் பல ஒப்பந்தம்

சொல்லப்போனால் உலகளவில் ஐடி நிறுவனங்களில் 80 இந்தியாவில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்களாக உள்ளன. எனினும் கொரோனாவினால், தற்போதைய நிதி நிலைமை மோசமாக உள்ளது. இது தவிர இன்னும் சில ஒப்புதல்களையும் அந்த சமயத்தில் கர் நாடக அரசு கொடுத்துள்ளது. அது புதியதாக முன்மொழியப்பட்ட ESDM கிளஸ்டரில் (எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் டிசைன் மற்றும் உற்பத்தி) சிறப்பு ஊக்கத் தொகையினை வழங்க கர்நாடக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த ஒப்புதல்கள் மேற்கொண்டு கர்நாடாகவிற்கு நிறுவனங்களை வரவைக்க உதவும். இதன் மூலம் வேலை வாய்ப்பு பெருகவும் இது வழிவகுக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+