இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் கடந்த வாரம் மோசமான காலாண்டு முடிவுகளை வெளியிட்டது.
இதன் மூலம் இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வந்துக்கொண்டு இருக்கிறது. இதில் முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுவது முன்னணி ஐடி சேவை நிறுவனங்களில் பென்ச்-ல் இருக்கும் அதிகப்படியான ஊழியர்களும், ஊழியர்களை முழுமையாக பயன்படுத்தாததும் தான்.
சமீபத்தில் இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரியான நிலன்ஞன் ராய் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின்பு பேசுகையில், ஐடி சேவை துறையில் புதிய ஆர்டர்கள் எண்ணிக்கை குறைந்த காரணத்தால் ஊழியர்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதன் மூலம் இன்போசிஸ் நிறுவனத்தில் மார்ச் காலாண்டில் பென்ச்-ல் இருக்கும் ஊழியர்கள் அளவு மொத்த ஊழியர்களில் 20 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

இதேபோல் ப்ராஜெக்ட்-ல் இருக்கும் ஊழியர்களை பயன்படுத்தும் அளவு 80 சதவீதமாக குறைந்துள்ளது, இதற்கும் டிமாண்ட் அளவில் ஏற்பட்ட சரிவு தான் காரணம் என தெரிவத்துள்ளார். இனி வரும் காலத்தில் Employee utilisation அளவு படிப்படியாக உயரும் என கணித்துள்ளோம் என இன்போசிஸ் தலைமை நிதியியல் அதிகாரியான நிலன்ஞன் ராய் தெரிவித்தார்.
இன்போசிஸ் நிறுவனத்தில் இருப்பது போல தான் டிசிஎஸ் நிறுவனத்திலும் பென்ச் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எல்லாம் சரி பென்ச் ஊழியர்கள் என்றால் என்ன..? ( பென்ச் ஊழியர்கள் என்றால் தெரியாதவர்களுக்காக) இவர்கள் நிறுவன பணியில் இருப்பார்கள், நிறுவனங்கள் இவர்களுக்கு தனது கணக்கில் இருந்து சம்பளமும் கொடுக்கும். ஆனால் எந்தொரு ஆக்டிவ் ப்ராஜெட்-லும் பணியாற்றமாட்டார்கள்.
இதன் படி இன்போசிஸ் நிறுவனத்தில் தற்போது 68,646 ஊழியர்கள் பென்ச்-ல் உள்ளனர். இதில் பிரஷ்ஷர்களும் இருப்பார்கள், அனுபவம் வாய்ந்த ஊழியர்களும் இருப்பார்கள். இதை தான் தற்போது இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் முக்கிய பிரச்சனையாகவும், அதிகப்படியான செலவுகளை ஈர்க்கும் விஷயமாகவும் பார்க்கிறது.
உலகின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான அக்சென்சர் அடுத்த 18 மாதங்களில் 19,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக சில நாட்கள் முன்பு அறிவித்துள்ளது. இந்த நிலையில் அக்சென்சர் நிறுவனத்தில் பல ஆயிரம் ஊழியர்கள் எந்த ப்ராஜெக்ட்-லும் இல்லாமல் பென்ச்-ல் உள்ளனர். இந்த நிலையில் யாரெல்லாம் நீண்ட காலமாக எந்த ப்ராஜெக்ட்டிலும் இல்லாமல் பென்ச்-ல் இருக்கிறார்கள் என பட்டியலிட்டு உள்ளது அக்சென்சர்-ன் HR பிரிவு.

இந்திய பொருளாதாரத்திற்கு தூண் ஆக இருக்கும் ஐடி சேவை துறையில் அமெரிக்கா, ஐரோப்பாவில் விலைவாசி உயர்வால் தொடர்ந்து வட்டி விகிதத்தை உயர்த்தி வந்த நாளில் இருந்தே இந்திய ஐடி நிறுவனங்கள் பாதிக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் ஐடி சேவை நிறுவனங்கள் கொரோனா காலத்தில் பெற்ற அதிகப்படியான வர்த்தகத்தை இந்த சரிவில் ஈடு செய்ய முடியும் என முதலீட்டாளர்கள் கணித்தனர்.
இதே வேளையில் ஐடி நிறுவனங்களும் தனது வளர்ச்சி வாய்ப்புகளை குறைக்காமல் இருந்தது முதலீட்டாளர்களின் இந்த நம்பிக்கைக்கு முக்கிய காரணமாக இருந்தது. இதை தொடர்ந்து வங்கிகள் திவால் மற்றும் நிதி நெருக்கடி பிரச்சனைகள் மூலம் மார்ச் காலாண்டில் சந்தை கணிப்பை காட்டிலும் குறைவான லாபம் மற்றும் வருவாய் வளர்ச்சியை பதிவு செய்த காரணத்தால் அதிகளவிலான ஈவுத்தொகை அறிவிக்கப்பட்டும் இன்போசிஸ் பங்குகள் 10 சதவீதம் வரையில் சரிந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications