இந்திய ஐடி துறையும், ஐடி ஊழியர்களும் அக்சென்சர் நிறுவனத்தின் பணிநீக்க அறிவிப்பு வந்த பின்பு சற்று பீதியில் தான் உள்ளனர். ஆனால் சந்தை நிலவரங்கள் படி பார்த்தால் அடுத்த 6 மாதத்திற்கு சர்வதேச ரெசிஷன் அச்சம் பெரிய அளவில் பாதிக்காது என்பதால் ஐடி நிறுவனங்கள் அனைத்து செலவுகளை குறைக்கும் வழிகளை மட்டுமே தேடி வரும் வேளையில் பெரிய அளவிலான பணிநீக்கத்தை யாரும் ஆதரிக்கவில்லை.
இதற்கிடையில் இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனங்களான டிசிஎஸ், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களில் தலைமை மாற்றம் இருக்கும் காரணத்தால் இவ்விரு நிறுவனங்களில் பெரிய அளவிலான பணிநீக்கம் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் மற்ற நிறுவனங்களில் இந்த பணிநீக்க அறிவிப்பு வெளியானால் இவ்விரு நிறுவனங்களும் பணிநீக்கம் செய்யும்.

இதேவேளையில் ரெசிஷன் அச்சம் அதிகமாகும் பட்சத்திலும் புதிய ப்ராஜெக்ட்கள் கிடைத்த பட்சத்தில் அக்சென்சர் நிறுவனத்தை போலவே அடுத்த 18 மாதத்தில் பணிநீக்கம் செய்ய அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் அப்ரைசல் காலம் வந்துள்ளது, இந்த ஆண்டு அப்ரைசல் இருக்குமா..? அப்படி இருந்தால் சராசரியாக எவ்வளவு அப்ரைசல் கொடுக்கப்படும்..?
2024 ஆம் நிதியாண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பள உயர்வு கடந்த ஆண்டை காட்டிலும் குறைவாகவே இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் ஐடி ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருந்த போது 60 முதல் 120 சதவீதம் வரையில் சம்பள உயர்வு கொடுத்து ஊழியர்களை பணியில் அமர்த்தியது.

இது ஐடி நிறுவனங்களுக்கு பெரும் நிதி சுமையாக மாறியுள்ள நிலையில் இந்த ஆண்டுக்கான சம்பள உயர்வு 8-10 சதவீதம் வரையில் மட்டுமே இருக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு சராசரியாக 10-11 சதவீதம் வரையில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இதைவிட முக்கியமாக இந்த ஆண்டு பெரும்பாலான ஐடி ஊழியர்கள் கணிக்கப்பட்டு உள்ள 8-10 சதவீத அளவீட்டில் குறைந்தபட்ச அளவான 8 சதவீத சம்பள உயர்வை தான் பெறுவார்கள் என ஹெச்ஆர் பிரிவு வல்லுனர்கள் கூறுகின்றனர்.
இந்திய ஐடி துறையில் ரெசிஷன் அச்சம் காரணமாக 2021-22 ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் இருந்த great resignation பிர்ச்சனை பெரிய அளவில் குறைந்து தற்போது அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனத்திலும் அட்ரிஷன் அளவுகள் பெரிய அளவில் குறைந்துள்ளது, இது ஐடி நிறுவனங்களுக்கு சாதகமாக மாறியுள்ளது.

இதேபோல் 2023 ஆம் நிதியாண்டின் கடைசி காலாண்டு முடிவுகள் அடுத்த சில நாட்களில் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனகங்களும் வெளியிட உள்ள நிலையில் மார்ச் காலாண்டு முடிவில் BFSI பிரிவில் ஏற்பட்ட தடுமாற்றத்தின் மூலம் மந்தமான லாப அளவீடுகளை தான் ஐடி நிறுவனங்கள் வெளியிடும் எனவும் கணிக்கப்பட்டு உள்ளது.
மார்ச் காலாண்டு முடிவுகளை அடிப்படையில் ஐடி ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அளவை உறுதியாக கூறிவிட முடியும், இதேவேளையில் ஐடி சேவை நிறுவனங்களின் சிஇஓ-க்களின் சம்பளம் அளவில் பெரும் மாற்றத்தை இந்த ஆண்டு ஏற்படும் எனவும் கணிக்கப்படுகிறது. ஐடி நிறுவனங்களின் சம்பளம் குறைக்கப்பட வேண்டுமா..? என்பதற்கான பதிலை கமெண்ட் பண்ணுங்க.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications