ஐடி ஊழியர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் நியூஸ்.. ஜாக்பாட் தான்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில காலாண்டுகளாகவே தொடர்ச்சியாக ஐடி நிறுவனங்கள் தொடர்ச்சியாக தங்களது வருவாயினை உயர்த்தி வருகின்றன. இந்த கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு துறையும் பின்னடைவை சந்திக்க, ஐடி துறையில் உள்ள நிறுவனங்கள் மட்டும் பல புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகின்றன.

 

இதற்கு முக்கிய காரணம் பல துறைகளில் டிஜிட்டல் வளர்ச்சியானது விஸ்வரூபம் எடுத்து வருவது தான். மறுபுறம் கொரோனா காலத்தில் கூட ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்தும் வருகின்றனர்.

சில துறைகளில் ஊழியர்கள் அலுவலகம் வந்தால் மட்டுமே வேலை என்ற நிலையில், அதுபோன்ற நிறுவனங்கள் எல்லாம் முடங்கின. இதற்கிடையில் தற்போது தான் மீளத் தொடங்கியுள்ளன. எனினும் ஐடி துறையில் ஊழியர்கள் வீட்டில் இருந்தும் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் இதனை நிரந்தரமாக அமல்படுத்த கூட, சில சர்வதேச நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

சும்மா எகிறி அடித்த தங்கம் விலை.. அடுத்த வாரத்திலும் அதிகரிக்கலாம்.. நிபுணர்கள் பரபர கணிப்பு!

நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி

நிரந்தரமாக வீட்டில் இருந்து பணி

இதற்கிடையில் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இயங்கும் (Special Economic Zones ) ஐடி நிறுவனங்கள், நிரந்தரமாக ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறலாம் என செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம் விவாதித்து வருவதாகவும் தெரிகிறது. இது குறித்து இம்மாத இறுதிற்குள் இறுதி முடிவுகள் எட்டப்படலாம் என்றும் தெரிகிறது.

எங்கிருந்தும் பணி புரியலாம்

எங்கிருந்தும் பணி புரியலாம்

ஏற்கனவே ஐடி ஊழியர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும், நிரந்தரமாக பணிபுரியலாம் என்ற நிலையே இருந்து வருகிறது. அரசும் இது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. ஏற்கனவே அரசு இம்மாத தொடக்கத்தில், இது குறித்த கொள்கைகளை தளர்த்தியுள்ளது. இந்த SEZ பகுதிகளில் உள்ள ஐடி நிறுவனங்கள் 60% மேலாக ஐடி சேவைகளை ஏற்றுமதி செய்கின்றன.

நாஸ்காமின் கருத்து
 

நாஸ்காமின் கருத்து

இதற்கிடையில் தான் தற்போது மீண்டும் வர்த்தக அமைச்சகம் இது குறித்து விவாதித்து வருவதாகவும், இந்த மாத இறுதிக்குள் இறுதி முடிவுகள் வரலாம் என்றும் தெரிகிறது. இதே இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை கூட்டமைப்பான நாஸ்காம், கடந்த செவ்வாய்க்கிழமையன்று நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இந்த ,முடிவு எதிர்காலத்தில் ஒரு கலப்பு வேலை மாதிரியை திட்டமிட அனுமதிக்கும் என்றும் கூறியுள்ளது.

எங்கிருந்து வேண்டுமானாலும் பணி

எங்கிருந்து வேண்டுமானாலும் பணி

ஏற்கனவே டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் போன்ற பல முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தொற்று நோய் அடங்கியவுடன் தங்கள் ஊழியர்களில் கணிசமான பகுதியை எங்கிருந்து வேண்டுமானாலும் பணிபுரியலாம் என மாற்றுவதாக கூறியுள்ளன. SEZன் Rule 43ன் படி, ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்ய நிறுவனங்களை அனுமதிக்கிறது. இந்த நிலையில் அரசே இதனை அமலுக்கு கொண்டு வருவதன் மூலம் இன்னும் ஐடி ஊழியர்களுக்கு கொண்டாட்டம் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IT employees may soon be able to work from home permanently

IT sector latest updates.. IT employees may soon be able to work from home permanently
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X