அமெரிக்க அரசு விசா வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி வரும் வேளையில்.. சமீபத்தில் டிரம்ப் அரசு வெளியிட்டுள்ள ஒரு உத்தரவு அமெரிக்காவுக்கு செல்ல வேண்டும் என கனவு காணும் பல கோடி இந்தியர்களின் கனவை உடைத்துள்ளது.
2025 டிசம்பர் மத்தியிலும், இறுதியிலும் திட்டமிடப்பட்ட பல H-1B மற்றும் H-4 விசா இண்டர்வியூவ் ரத்து செய்யப்பட்டு மார்ச் 2026க்கு மாற்றப்பட்டு உள்ளது அமெரிக்க தூதரகம். இதனால் அமெரிக்கா செல்ல திட்டமிடும் மக்களின் கனவு காலம் தாழ்த்தப்பட்டு உள்ளது. விசா இண்டர்வியூவ் 3 மாதம் தள்ளி வைக்க என்ன காரணம்..?

டிரம்ப் அரசின் புதிய உத்தரவு டிசம்பர் 15 முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. அதாவது H-1B, H-4 விசாவுக்காக விண்ணப்பம் செய்யும் அனைத்து விண்ணப்பதாரரின் சமூக ஊடக கணக்குகளை சோதனை செய்ய வேண்டும் என கொள்கை அளவில் மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால் அமெரிக்க தூதரகங்கள் புதிய கொள்கை மற்றும் நடைமுறைகளை செயல்படுத்த வேண்டும் என்பதற்காக டிசம்பர் மாதம் 2ஆம் பாதியில் திட்டமிடப்பட்ட விசா இண்டர்வியூவ் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இதனால் ஹைதராபாத், சென்னை உள்ளிட்ட தூதரகங்களில் ஆயிரக்கணக்கான நேர்காணல்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க வெளியுறவு துறை இப்போது H-1B விசா விண்ணப்பதாரர்களும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் வழங்கப்படும் H-4 விசாவிற்காக விண்ணப்பம் செய்தவர்கள் தங்கள் சமூக ஊடக கணக்குகளை அமெரிக்க தூதரகங்களின் ஆய்வு பணிகள் முடியும் வரையில் Public முறையில் வைத்திருக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது.
இதன் மூலம் அமெரிக்க தூதரகங்கள் விசா விண்ணப்பதாரரின் பின்னணி சோதனையை எளிதாக செய்ய முடியும். இந்த புதிய நடைமுறை காரணமாக ஒரு நாளைக்கு நடத்தப்படும் நேர்காணல்களின் எண்ணிக்கை குறைவதால், ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டவை ரத்தாகின்றன அல்லது தள்ளி வைக்கப்படுகின்றன.
அமெரிக்க தூதரகங்கள் அனுப்பிய மின்னஞ்சல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: புதிய சோதனை முறை காரணமாக ஒரு நாளில் செய்யப்பட்டும் விசா இண்டர்வியூவ் எண்ணிக்கை குறையும் என்பதால், டிசம்பர் இண்டர்வியூவ் ரத்து செய்யப்பட்டு மார்ச் 2026க்கு தள்ளிவைக்கப்படுகின்றன என விளக்கம் கொடுத்துள்ளது.
இதன் மூலம் இந்தியாவில் இருந்து செல்லும் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் இதனால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக ஹெச்1பி விசா-வை ஐடி மற்றும் டெக் சேவை நிறுவனங்களும், ஊழியர்களும் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.


Click it and Unblock the Notifications