இந்திய ஐடி சேவை துறை அதிகப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் வேளையில் புதிய பிரச்சனை வெடித்துள்ளது. தற்போது பணியாற்றும் நிறுவனத்தில் தான் குறைவான சம்பள உயர்வு கிடைக்கிறது என்றால் வேறு நிறுவனத்திற்கு மாறினாலும் மந்தமான சம்பள உயர்வு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதனால் ஐடி ஊழியர்கள் அனைவரும் தற்போது பணியாற்றும் நிறுவனத்திலேயே இருக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. எதனால் இந்தப் பிரச்சனை..? பொதுவாக ஐடி ஊழியர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வில் 7 முதல் 12 சதவீதம் வரையில் சம்பளம் உயரும். அதேபோல் கொரோனா சீசனுக்குப் பின்பு வேறு நிறுவனத்திற்கு மாறும் போது 30 முதல் 40 சதவீதம் வரையில் சம்பளம் அளிக்க்கப்பட்டு வந்தது.

இந்திய ஐடி சேவை துறை நிறுவனங்களில் புதிதாகக் கிடைக்கும் வர்த்தகம் பெரிய அளவில் குறைந்துள்ளது மட்டும் அல்லாமல் டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் வருடத்திற்கு 440 மில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை இழந்து வரும் காரணத்தால் புதிதாகப் பணியில் சேர்க்கும் ஊழியர்கள் எண்ணிக்கையைப் பெரிய அளவில் குறைந்துள்ளது.
இதனால் ஒட்டுமொத்தமாக ஐடி துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் ஜிசிசி நிறுவனங்கள் மட்டுமே கடந்த சில மாதமாக டெக் ஊழியர்களைப் பணியில் சேர்த்தது வந்தது. இதற்கிடையில் ஐடி சேவை துறையில் சம்பள உயர்வு நிறுத்தம், வேரியபிள் பே குறைப்பு எனப் பில பிரச்சனைகள் உருவானது.
இதன் எதிரொலியாக வேலைவாய்ப்புச் சந்தையில் டெக் ஊழியர்கள் சப்ளை அதிகரித்துள்ளது, ஆனால் காலியான வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை என்பது குறைவாக உள்ளது. இதனால் புதிய நிறுவனத்திற்கு மாறும் போது இருந்த 30-40 சதவீத சம்பள உயர்வு தற்போது 18-22 சதவீதமாகக் குறைந்துள்ளது.
இதேவேளையில் செயற்கை நுண்ணறிவு, சைபர்செக்யூரிட்டி, டேட்டா சைன்டிஸ்ட், டேட்டா இன்ஜினியர்ஸ், கிளவுட் இன்ஜினியர்ங் துறையில் திறமையானவர்களுக்கு இன்றும் 35 முதல் 40 சதவீதம் வரையில் சம்பளம் உயர்வு அளிக்கப்படுகிறது. சம்பளம் உயர்வு குறைக்கப்பட்ட பிரிவு எனப் பார்த்தா legacy coding எனப்படும் நீண்ட காலமாகப் பயன்பாட்டில் இருக்கும் ஜாவா, C++ போன்ற திறன் தேவைப்படும் பிரிவுகளுக்குத் தான் இந்தப் பிரச்சனை உள்ளது.


Click it and Unblock the Notifications