வெயில் காலம் வரப்போகுது! எக்ஸாம் எல்லாத்தையும் முடிச்சிட்டு வீட்ல என்ன பண்றதுன்னு தெரியாம பசங்க நிறைய பேர் சுத்திட்டு இருப்பாங்க! இந்த நேரத்துல ஒரு கம்ப்யூட்டர் கோச்சிங் சென்டர் ஆரம்பிச்சா செம்ம லாபம் பார்க்கலாம்! வீட்ல இருந்து வேலை பார்க்கிற ஐடி ஊழியர்களும் இதை ஒரு சைடு பிசினஸா வச்சுக்கிட்டா எக்ஸ்ட்ரா இன்கம் கிடைக்கும் தானே! இதுக்கு பெருசா முதலீடு எதுவும் தேவைப்படாது! ஏன்னா லேப்டாப் இப்போ வாடகைக்கு கிடைக்குது. ஒருவேளை லேப்டாப் வாங்கி ஆரம்பிச்சாலும் 2 அல்லது 3 லேப்டாப் போதும். இந்த பிசினஸை எப்படி ஆரம்பிக்கலாம்னு பார்க்கலாம் வாங்க!
இப்போ எல்லாம் கம்ப்யூட்டர் தெரியாம ஒண்ணுமே பண்ண முடியாது. மளிகை கடை முதல் பெரிய பெரிய மால்கள் வரை பில்லிங் போடுவதற்கு கம்ப்யூட்டர்கள் தான் பயன்படுகின்றன. இப்போ இருக்கிற தொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்துட்டு.. வீட்ல ஸ்கூல் காலேஜ் போற பசங்க மட்டும் இல்லாம, வீட்ல இருக்கிற பெரியவங்களும் கம்ப்யூட்டர் கத்துக்கணும்னு ஆசைப்படுறாங்க!

அதுக்கு தகுந்தார் போல சம்மர் லீவ் வரப்போகுது. இந்த லீவ்ல கம்ப்யூட்டர் கிளாஸ் சேர்ந்து படிக்கலாமான்னு சில பசங்க யோசிச்சிட்டு இருப்பாங்க. அதே போல அவங்களோட பெற்றோரும் ஏதாவது ஒரு கிளாஸ்ல சேர்த்து விட்டாதான் நம்ம நிம்மதியா இருக்கலாம் நினைக்கிறது வழக்கம்தான்.
இதையெல்லாம் வச்சு கம்ப்யூட்டர் கோச்சிங் சென்டரை ஒரு சைடு பிசினஸாவே மாத்த முடியும். கொரோனா தொற்றுக்குப் பிறகு பல ஐடி ஊழியர்கள் வீட்டிலேயே வேலை செய்றாங்க. எனவே ஃப்ரீயா இருக்கிற நேரத்துல இந்த தொழில ஆரம்பிக்கிறது கூடுதல் வருமானத்தை பெற கண்டிப்பா உதவியா இருக்கும்.
கம்ப்யூட்டர் கோச்சிங் சென்டர் தொடங்க என்னென்ன தேவை?: குறைந்த முதலீட்டில் ஆரம்பிக்கணும்னா 4 லேப்டாப் இருந்தா போதும்! இல்லன்னாலும் நீங்க வாடகைக்கு எடுக்கலாம். பல ஊர்கள்-ல கம்ப்யூட்டர், கேமராக்களை வாடகைக்கு விடறாங்க. இதுபோல உங்க ஊர்ல இருந்தா.. உங்க கோச்சிங் சென்டர்-ல சேர்ர பசங்க கற்ற பீஸ வச்சே வாடகைக்கு லேப்டாப் எடுக்கலாம். அதுல தேவையான சாஃப்ட்வேரை மட்டும் டவுன்லோட் பண்ணா போதும்!
உதாரணமா MS ஆபீஸ், போட்டோ ஷாப் ஒருவேளை ப்ரோக்ராமிங் கத்து கொடுக்க போறீங்கன்னா அதுக்கு தேவைப்படுற சாஃப்ட்வேர் இன்ஸ்டால் பண்ணனும். வீட்டில் ஒரு சின்ன ரூம் இருந்தாலே போதும். உங்க ஊர்ல எந்த பேப்பர் ஃபேமஸோ.. அந்த பேப்பர்ல நீங்களும் கோச்சிங் சென்டர் ஆரம்பிச்சு இருக்கீங்கன்னு விளம்பரப்படுத்தலாம்.
என்ன மாதிரி கிளாஸ் எடுக்கலாம்?: பேசிக் கம்ப்யூட்டர் கிளாஸ் எடுத்தாலே போதும்! ஸ்கூல் முடிச்சுட்டு வர பசங்களுக்கு கோடிங் போட்டு ஆப் டெவலப்மெண்ட் பண்ற அளவுக்கு கோச்சிங் கொடுக்கணும்னு அவசியம் இல்ல. இன்டர்நெட் எப்படி யூஸ் பண்றது?, ஈமெயில் அனுப்புறது, மெயில் மெர்ஜிங் இதெல்லாம் கத்து கொடுக்கலாம்.
அதுவே டிசைனிங் கிளாஸ் எடுத்தீங்கன்னா.. போட்டோ ஷாப், கோரல் டிரா இதெல்லாம் வச்சு எப்படி டிசைன் பண்றதுன்னு கத்து கொடுக்கலாம்! அடுத்ததா ப்ரோக்ராமிங் லாங்குவேஜ்.. ப்ரோக்ராமிங்னு வரும்போது C, C++, பைத்தான்.. இது மாதிரி லாங்குவேஜை கத்து தரலாம். எல்லா லாங்குவேஜ்க்கும் அடிப்படை என்னவோ C, C++ போன்ற லாங்குவேஜ்கள் தான்.
எல்லாரும் ஜெயிக்க முடியுமா?: எந்த தொழில ஆரம்பிச்சாலும் அதுல போட்டின்னு ஒன்னு கண்டிப்பா இருக்கும். அதே போல உங்க ஊர்ல ஏதாவது பெஸ்ட் கோச்சிங் சென்டர் இருந்ததுன்னா.. நீங்க உங்களோட கோச்சிங் சென்டர்-ல அவங்களை விட ஸ்பெஷலா என்ன வச்சிருக்கீங்கன்னு பாருங்க! நல்ல கிளாஸ், வொர்கிங் கண்டிஷன்ல இருக்கிற லேப்டாப், பசங்களுக்கு புடிச்ச மாதிரி கிளாஸ் எடுக்கிறது.. இதெல்லாம் இருந்தாலே போதும்!
அதேபோல படிச்சு முடிச்சுட்டு போற பசங்களுக்கு கண்டிப்பா சர்டிபிகேட் கொடுக்கணும். அப்போதான் அவங்களுக்கு ஒரு நம்பிக்கை வரும். தேவைப்படுற நேரத்துல நோட்ஸ் கொடுக்கணும், அவங்கள கேக்குற டவுட்டை கரெக்டா கிளியர் பண்ணனும். இந்த கோடை லீவுல கம்ப்யூட்டர் கோச்சிங் சென்டர் ஆரம்பிக்கிறது ஒரு பெஸ்ட் பிஸினஸ் ஐடியா தான். கரெக்டா பிளான் பண்ணி முயற்சி பண்ணா கண்டிப்பா இதுலயும் சக்சஸ் பண்ணலாம்.
எவ்வளவு லாபம் கிடைக்கும்?: இதுல உங்களுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்னு முன்னாடியே சொல்லிட முடியாது. ஏன்னா உங்க கோச்சிங் சென்டர்-ல எவ்ளோ பேர் வந்து ஜாயின் பண்றாங்களோ அதை பொறுத்து தான் வருமானம் இருக்கும். சம்மர் லீவுல ஏதாவது பண்ணனும்னு யோசிக்கிறவங்க இந்த ஐடியாவையும் வச்சிக்கலாம்.
குறிப்பா இந்த பதிவு யாருக்குனா பிசினஸ் பண்ணனும்னு நினைக்கிறவங்களுக்காகத்தான். இதை வச்சு நாங்க உங்கள கோச்சிங் சென்டர் ஆரம்பிங்கன்னு சொல்லல. எந்த ஒரு தொழிலை தொடங்குறதா இருந்தாலும் உங்களோட சுய விருப்பத்துல ஆரம்பிங்க.
More From GoodReturns

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!



Click it and Unblock the Notifications