விவசாயம், கால்நடை வளர்ப்பில் எல்லோருக்கும் வெற்றிக் கிடைத்துவிடாது.. ஆனால் கடும் உழைப்பு சரியான வர்த்தக செட்அப் இருந்து நீங்களே ராஜா, நீங்களே மந்திரி. இதுவும் விவசாயம், கால்நடை வளர்ப்பில் முன அனுபவம் கொண்டவர்கள் உங்கள் வீட்டிலேயேோ அல்லது உங்களிடம் பணியாற்றினால் டபுள் ஜாக்பாட்.
48 வயதான சாப்ட்வேர் இன்ஜினியர் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு புதிய வாழ்க்கையை துவங்கியுள்ளார், வழக்கம் போல் இவரும் பல எதிர்ப்புகளை எதிர்கொண்ட நிலையில்... இவருடைய வளர்ச்சியை கண்டு சொந்தகாரர்கள் முதல் ஊர்காரர்கள் வரையில் அனைவரும் வியந்து வருகின்றனர். யார் இவர்..? ஐடி வேலையை விட்டுவிட்டு என்ன தொழில் செய்தார்..?

ஆந்திர பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயதான மண்டலபு சீனிவாச ராவ் சாப்ட்வேர் ஊழியராக பணியாற்றினார், சில வருடங்களுக்கு முன்பு தனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறப்பதற்காக நல்ல சம்பளம் தரும் ஐடி வேலைவாய்ப்பு விட்டுவிட்டார் சொந்த ஊருக்கு திரும்பினார்.
முன்னாள் மென்பொருள் நிபுணரான மண்டலபு சீனிவாச ராவ் குடும்பத்தின் உதவியுடன், சுமார் 15 பசுக்கள் மற்றும் 17 எருமைகளுடன், ஒரு நாளைக்கு சுமார் 210-220 லிட்டர் பால் உற்பத்தி செய்கிறார். மேலும் பீகாரைச் சேர்ந்த மூன்று தொழிலாளர்கள் உட்பட மொத்தம் ஐந்து நபர்களுக்கு தனது பால் பண்ணை நடந்தி வருவது மட்டும் அல்லாமல், அட்டாங்கி பால் பூத்-ஐ இயக்கி வருகிறார்.
மண்டலபு சீனிவாச ராவ் ஐடி வேலையை விட்டுவிட்டு தனது 4 ஏக்கர் விவசாய நிலத்தில் பால் பண்ணை நிறுவி தற்போது மாதம் 3 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டி வருகிறார். அவரது தாயார் மற்றும் மனைவி மானசா ஆகியோரின் ஆதரவுடன் மட்டுமே இது சாத்தியமானது,
சீனிவாச ராவ் தனது கனவு திட்டத்தை அதாவது பால் பண்ணை திறக்கும் திட்டத்தை 2020 இல் துவங்கினார். இந்த பால் பண்ணை துவங்கிய போது தன்னிடம் இருக்கும் மொத்த சேமிப்பான 25 லட்ச ரூபாயை தொடக்க முதலீட்டாக கொண்டு துவங்கினார். இதன் பின்பு கால்நடை வளர்ப்புத் தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க 20 முதல் 25 லட்சம் ரூபாயை வங்கிகளில் கடனாக பெற்றுள்ளார்.
இந்த கடனை அடைக்கு இன்னும் 2 வருடமாகும் என கூறும் மண்டலபு சீனிவாச ராவ், அதை தொடர்ந்து பால் உற்பத்தியை அதிகரிக்கும் பணியை துவங்குவது மட்டும் அல்லாமல் தங்களுக்கென ஒரு பிராண்ட்-ஐ உருவாக்கி, கோழி, ஆடு பண்ணை அமைக்கவும் ஆர்கானிக்கு விவசாயம் செய்ய திட்டமிட்டு உள்ளார்.
மண்டலபு சீனிவாச ராவ் பால் பண்ணை வர்த்தகத்தை துவங்குவதற்கு முன்பு மென்பொருள் நிபுணராக ஹைதராபாத் மற்றும் டெல்லியில் பணிபுரிந்துள்ளார். அப்போது அவர் கடுமையான பணி சுமை அனுபவித்துள்ளார், இதன் விளைவாக கடுமையான வாழ்க்கை முறை கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.
மேலும் கோவிட் தொற்றுநோய் காலத்தின் போது வீட்டிலிருந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்த காரணத்தால் என் பெற்றோருடன் தங்கியிருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது கிராமத்தில் பால் பண்ணை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது என மண்டலபு சீனிவாச ராவ் கூறுகிறார்.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications