ஐடி சேவை துறை எந்த அளவுக்கு மாறி வருகிறதோ, அதே அளவுக்கு ஐடி ஊழியர்களின் நிலைமையும் மாறி வருகிறது என்றால் மிகையில்லை. ஒருப்பக்கம் பல துறையில் பல ஊழியர்களின் பணிநீக்கத்திற்கு காரணமாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவும், விரிவாக்கம் செய்யவும் ஐடி சேவை நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
இதேவேளையில் ஐடி ஊழியர்களின் சம்பள உயர்வும், புதிய நிறுவனத்தில் சேரும் போது கொடுக்கப்படும் சம்பளம் உயர்வின் முறை முற்றிலும் மாறப்போகிறது, இது ஐடி ஊழியர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் இதுதான் வரும்காலத்தில் நடைமுறைக்கு வரும் என விப்ரோ நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஐடி ஊழியர்களை எச்சரிப்பது மட்டும் அல்லாமல் முக்கியமான அறிவுரையும் கூறியுள்ளார்.

விப்ரோ நிறுவனத்தின் மனித வள பிரிவின் தலைவராக இருக்கும் சௌரப் கோவில், அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களின் ஊழியர்களையும் Generative AI, சைபர் செக்யூரிட்டி போன்ற முக்கியமான தொழில்நுட்பத்தில் பயிற்சி பெறும்படி அறிவுறுத்தியுள்ளார்.
எதிர்காலத்தில் விப்ரோ நிறுவனத்தின் ஊழியர்களின் சம்பள உயர்வு தனிநபரின் upskilling and reskilling அடிப்படையில் தான் வழங்கப்படும், இதிலும் முக்கியமாக Generative AI, சைபர் செக்யூரிட்டி போன்ற முக்கியமான தொழில்நுட்பத்தில் பயிற்சி மேற்கொள்வது முக்கியமானதாக இருக்கும் என சௌரப் கோவில் தெரிவித்துள்ளார்.
இதேபோல் புதிதாக தேர்வு செய்யப்படும் ஊழியர்களுக்கு இப்போது அளிக்கப்பட்டு வரும் 30 சதவீதம் சம்பள உயர்வு எல்லாம் இனி இருக்காது எனவும் சௌரப் கோவில் தெரிவித்துள்ளார். இதை விட அதிர்ச்சி அளிக்கும் விஷயம் ஒன்றை தெரிவித்தள்ளார்.
ஜெனரேட்டிவி AI வளர்ச்சி மூலம் கீழ் மட்டத்தில் இருக்கும் ஊழியர்கள் செய்யும் ஆய்வு பணிகளை இனி மெஷின் செய்யும், இதன் மூலம் ஊழியர்கள் இனி இயந்திரங்கள் செய்ய முடியாத கடினமான பணிகளை செய்ய திருப்பிவிடப்படும். இதனால் ஊழியர்கள் இந்த மாற்றத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் சௌரப்.
இதோடு நிற்காமல் தற்போது HR துறைக்கு வரும் 80 சதவீத கோரிக்கைகள், கேள்விகள் அனைத்தையும் பாட் எதிர்கொண்டு உரிய பதிலை-ஐ அளிக்கும் கட்டமைப்பை உருவாக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இந்த நிலையில் HR பிரிவில் இருக்கும் ஊழியர்கள் இனி அதிகளவில் மேனஜர்களுக்கும், உயர் அதிகாரிகளுக்கும் எப்படி டீம்-ஐ நிர்வாகம் செய்ய வேண்டியிருக்கும் என விப்ரோ நிறுவனத்தின் மனித வள பிரிவின் தலைவராக இருக்கும் சௌரப் கோவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications