நாட்டில் தொழில்நகரம் என்று அழைக்கப்படும் கோவை மாவட்டமானது சமீபகாலமாக பல்வேறு துறைகளில் அசுர வளர்ச்சி கண்டு வருகிறது. தற்போது பல்வேறு வெளிநாட்டு முதலீடுகளுக்கு உகந்த இடமாக இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு சார்பிலும் பல்வேறு நிதி உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. கோவையில் பல்வேறு வகையான தொழில்கள் குறிப்பாக ஜவுளி, இன்ஜினியரிங் வேலைகள், ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் இவையனைத்திலும் சிறந்து விளங்குகிறது. அதேபோல், தற்போது ஐடி நிறுவனங்களும் தங்களது தடத்தை பதிக்க போட்டிபோட்டுக் கொண்டு வருகின்றன.
படித்து முடித்த இளைஞர்கள் பெரும்பாலும் வேறு சில மாநிலங்களுக்கும், வேறு மாவட்டங்களுக்கும் செல்லும் நிலையில், அவர்களுக்கு இங்கேயே வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் அரசு சார்பில் பொருளாதார மண்டலங்கள் செயல்படுகின்றன. இவை அவிநாசி சாலை, சரவணம்பட்டி சுற்றுப்புற பகுதிகள், பொள்ளாச்சி சாலைகளில் செயல்பட்டு வருகின்றன. இவை உயர்கல்வி முடிந்தவர்களுக்கு உள்ளூரில் வேலை வாய்ப்பை அமைத்து தருவதற்கு முக்கிய பங்காற்றுகின்றன. அவற்றில் குறிப்பாக ஐடி நிறுவனங்கள் அதிக பங்கு வகிக்கின்றன.

தற்போது ஐடி நிறுவனங்கள் பெரும்பாலும் கோவையை நோக்கி படையெடுக்க ஆரம்பித்துள்ளன. கோவையில், 2024-ல் தற்போது வரை 800-க்கும் மேற்பட்ட ஐடி நிறுவனங்கள் வந்துள்ளன. குறிப்பாக, சென்னைக்கு அடுத்தபடியாக கோவை ஆனது அதிக எண்ணிக்கையில் ஐடி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. ஐடி துறையில் கோவை மாவட்டம் தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத வளர்ச்சியை எட்டி உள்ளது. இது பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல், வாடகை உள்ளிட்ட பல காரணங்களால் இங்கு பல முன்னணி வெளிநாட்டு ஐ.டி. நிறுவனங்கள் கோவையில் கிளைகளை அமைத்துள்ளன.
அந்த வகையில், உலகளவிலான திறன் மையங்களை இங்கே அமைப்பதற்கான சிறந்த சூழலும் அமைந்துள்ளது. உலகளாவியதிறன் மையங்கள் (ஜிசிசி) இதுவரை 300 ஜிசிசி மையங்கள் பல்வேறு துறைகளில் செயல்பட்டு வருகின்றன. இந்த ஜிசிசிகளின் மூலம் ஐடி துறையில், தற்போது வரை 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவிலான திறமை பங்களிப்பில் தமிழ்நாடு 11 சதவீதத்தை கொண்டுள்ளது.
கோவை மாவட்டம் ஆனது, ஐ.டி துறை வளர்ச்சியில் 2-ம் நிலை நகரங்கள் பட்டியலில் மிகச் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இதனால் பல ஐ.டி. நிறுவனங்கள் கோவையில் தொழில் தொடங்க தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகின்றன. எனவே, தமிழக அரச சார்பில் சமீபத்தில் விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி மதிப்பீட்டில் 2.94 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஐ.டி. பூங்கா திறந்தது. இதில் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட உள்ளது
அதேபோல், எல்காட் நிறுவனம் மேலும் 2 ஐ.டி வளாகங்களை ரூ.2,000 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிட்டுள்ளது. மொத்தம் 26 லட்சம் சதுர அடிபரப்பளவில் அமைய உள்ள இதில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் துறை வளர்ச்சிக்காக ரூ.2,295 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவை, மதுரை, திருச்சி போன்ற 2-ம் நிலை நகரங்களில் ஐ.டி துறையின் வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பல திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவோர் பட்டியலில் தமிழ்நாடு தேசிய அளவில் 15% பங்களிப்பை கொண்டுள்ளது. அதேபோல், ஐ.டி துறையின் வளர்ச்சிக்காக, தமிழக அரசு பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், ஜிசிசி நிறுவனங்களுக்கு முதல் ஆண்டில் 30%, இரண்டாம் ஆண்டில் 20%, மூன்றாமாண்டில் 10% ஊதிய மானியம் வழங்கப்படும்.
அத்துடன் கோவை மாவட்டத்தில் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், புதிய மேம்பாலங்கள், மெட்ரோ ரயில் திட்டம், விமான நிலைய விரிவாக்கம், புறவழிச்சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. எனவே, கோவையில் வெளிநாட்டு நிறுவனங்கள் அதிக அளவில் முதலீடு செய்வதற்கு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

கடந்த ஆண்டு அட்சய திருதியை-இல் ஒரு சவரன் நகை வாங்கி இருந்தால் இன்று அதன் மதிப்பு என்ன தெரியுமா?



Click it and Unblock the Notifications