இன்றைய டிஜிட்டல் உலகத்தில் ஐடி துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. மேலும் மற்ற துறையை சேர்ந்த நிறுவனங்களை காட்டிலும் ஐடி நிறுவனங்கள் கவர்ச்சிகரமான சம்பளத்தை வழங்குவதால் இன்றைய தலைமுறையினர் ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். சிறந்த பணியாளர்களை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் மற்றும் போட்டி காரணமாக ஐடி நிறுவனங்களும் ஆண்டுதோறும் பணியாளர்களை சம்பளத்தை உயர்த்தி வருகின்றன.
மாறுபாடு
2020-21 முதல் 2023-24ம் நிதியாண்டு வரையிலான காலத்தில் இன்ஃபோசிஸ், விப்ரோ மற்றும் டெக் மகிந்திரா உள்ளிட்ட ஐடி துறையை சேர்ந்த நிறுவனங்கள் பணியாளர்களின் ஆண்டு சராசரி சம்பளத்தை 12 சதவீதம் முதல் 37 சதவீதம் வரை உயர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கால கட்டத்தில், நிறுவனங்களுக்கு இடையே சம்பள உயர்வுகள் மாறுப்பட்டன. உதாரணமாக இந்திய நிறுவனங்கள் பணியாளர்களின் சராசரி சம்பளத்தை ரூ.1 லட்சம் முதல் ரூ.2.6 லட்சம் வரை அதிகரித்தன.

அதேசமயம், காக்னிசன்ட் மற்றும் ஆக்சென்ச்சர் ஆகிய பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது பணியாளர்களின் ஊதியத்தை முறையே 1,600 டாலர் மற்றும் 3,200 டாலர் உயர்த்தியுள்ளன. இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ நிறுவனங்கள் தனது பணியாளர்களின் சராசரி ஆண்டு சம்பளத்தை (2020-21 நிதியாண்டு) ரூ. 7 லட்சத்திலிருந்து சுமார் ரூ.10 லட்சமாக அதிகரித்துள்ளன. 2020-21ம் நிதியாண்டில் டெக் மகிந்திராவில் பணியாளர்களின் சராசரி சம்பளம் ரூ.5.3 லட்சமாக இருந்தது. இது 2023-24ம் நிதியாண்டில் ரூ.6.6 லட்சமாக அதிகரித்துள்ளது.
டிசிஎஸ்
கணக்கீடு காலத்தில் காக்னிசன்ட் நிறுவனத்தில் பணியாளர்களின் ஆண்டு சராசரி சம்பளம் 13,019 டாலரிலிருந்து 14,640 டாலராக உயர்ந்துள்ளது. ஆக்சென்ச்சர் நிறுவனத்தில் பணியாளர்களின் சராசரி சம்பளம் 18,821 டாலரிலிருந்து 22,106 டாலராக உயர்ந்துள்ளது. இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை பணியாளர்களின் சராசரி சம்பள உயர்வில் நிலையான சராசரி வளர்ச்சியை காட்டின. அதேசமயம், டெக் மகிந்திரா, காக்னிசன்ட் மற்றும் ஆக்சென்ச்சர் ஆகியவை மாறுபாடுகளை சந்தித்தன. டிசிஎஸ் மற்றும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்கள் தங்களது ஒட்டு மொத்த சரசாரி பணியாளர்களின் வருவாய் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிடவில்லை.
ஐடி துறையின் ஊதிய உயர்வு குறித்து தொழில்நுட்ப வளர்ச்சி ஆலோசனை நிறுவனமான கேட்டலின்க்ஸ் நிறுவனத்தின் கூட்டாளியான ராம்குமார் ராமமூர்த்தி கூறுகையில், போட்டி தீவிரம், திறன் கலவை, பணியாளர்கள் வெளியேறுவது மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் செயல்பாடாகும் என்று தெரிவித்தார். உதாரணமாக ஒரு நிறுவனத்தில் அதிகளவில் பணியாளர்கள் வேலையை விட்டு வெளியேறினால், அந்த நிறுவனம் பணியாளர்களை தக்க வைத்துக் கொள்ள சம்பளத்தை உயர்த்தும்.


Click it and Unblock the Notifications