ஐடி துறையில் வேலை கொடுத்த நிறுவனங்கள்.. வேலையை பறித்த நிறுவனங்கள்.. எது தெரியுமா..?

நாட்டின் முன்னணி ஐடி நிறுவனங்களில் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்சிஎல் டெக், டெக் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலைகள் கடந்த காலாண்டில் கணிசமாக உயர்ந்துள்ளன. அந்த வகையில் ஐடி நிறுவனங்கள் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சியைக் கண்டுள்ளன. பங்கு விலை உயர்வடைவதை விட, எந்த ஐடி நிறுவனத்தில் ஊழியர்கள் அதிகளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர் என்பதை இந்த பதிவில் காணலாம்.

பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் தங்கள் வரவை தற்போது அறிவித்த வண்ணம் உள்ளன. சில நிறுவனங்கள் ஏற்கனவே அறிவித்துள்ளன. இந்த ஆண்டிற்கான காலாண்டு வருவாய் முடிவுகள் ஐடி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மூலம் தொடங்கப்பட்டது.

ஐடி துறையில் வேலை கொடுத்த நிறுவனங்கள்.. வேலையை பறித்த நிறுவனங்கள்.. எது தெரியுமா..?

இந்த காலாண்டில் நிதி வெளியிடுவதில் டிசிஎஸ் முன்னணியில் இருந்த நிலையில், மற்ற பல ஐடி நிறுவனங்களும் காலாண்டு முடிவுகளை வெளியிட்டன. அவைகளின் வருவாய், லாபம், வருவாய் அறிக்கைகள் மற்றும் காலாண்டு முடிவுகள் ஒரு நிறுவனத்தின் பணியமர்த்தல் நடைமுறைகள் மற்றும் பணி கலாச்சாரம் பற்றிய அதிக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

விப்ரோ, டிசிஎஸ், இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய 5 முக்கிய ஐடி நிறுவனங்களில் ஒன்று மட்டுமே ஊழியர்களின் எண்ணிக்கை சரிவைக் கண்டது. மற்ற நிறுவனங்களின் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

2025 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஐடி நிறுவனங்கள்:
பட்டியலிடப்பட்ட ஐந்து பெரிய ஐடி நிறுவனங்களும் ஜூலை-செப்டம்பர் 2024 ஆம் ஆண்டு பல ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன என்பது ஐடி துறையில் பெரிய விஷயமாக உள்ளது. ஊழியர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, ஒரு நிறுவனம் மட்டுமே இதில் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் 2025ம் நிதியாண்டின் 2ஆம் காலாண்டில் சரிவைக் கண்டது.

2025 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது ஒரே தகவல் தொழில்நுட்ப நிறுவனம் எச்சிஎல் டெக் ஆகும். டிசிஎஸ், விப்ரோ, இன்ஃபோசிஸ் மற்றும் டெக் மஹிந்திரா ஆகிய முக்கிய ஐடி நிறுவனங்களின் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

விப்ரோ:
கடந்த காலாண்டில் இந்தியாவின் நான்காவது பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ, அதன் பணியாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, 2025ம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 978 பணியாளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். விப்ரோவின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை செப்டம்பர் 2024 இறுதியில் 233,889 ஆக இருந்தது இது முந்தைய காலாண்டில் 232,911 ஆக இருந்தது.

இன்ஃபோசிஸ்:
ஜூலை-செப்டம்பர் 2024 அன்று, 2,456 ஊழியர்களைச் சேர்த்தது. அந்த காலாண்டு பணியமர்த்தல் சரிவை முடிவுக்கு கொண்டு வருகிறது. இதன் மூலம், செப்டம்பர் 2024 இறுதியில் இன்ஃபோசிஸ் ஊழியர்களின் எண்ணிக்கை 3,17,788 ஆக உயர்ந்தது.

டிசிஎஸ்:
இந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ், ஜூலை முதல் செப்டம்பர் 2024 வரையிலான 5,726 ஊழியர்களைச் சேர்த்துள்ளது. இதன் மூலம் டாடா நிறுவனத்தின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 612,724 ஆக உயர்ந்துள்ளது.

டெக் மஹிந்திரா:
ஐடி நிறுவனம் மதிப்பாய்வுக்கு உட்பட்ட காலாண்டில் 6,653 புதிய ஊழியர்களைச் சேர்த்துள்ளது. இது கடந்த ஐந்து காலாண்டுகளில் அதிக ஆட்சேர்ப்பு ஆகும். இதன் மூலம் டெக் மஹிந்திராவின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 154,273 ஆக உயர்ந்துள்ளது.

எச்சிஎல் டெக்னாலஜிஸ்:
எச்சிஎல் டெக்னாலஜிஸ் மட்டுமே அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதியில் எச்சிஎல் டெக்கின் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை 218,621 ஆக இருந்தது. ஜூன் 2024 காலாண்டில் ஊழியர்களின் எண்ணிக்கை 219,401 ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+