கூடிய விரைவில் இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ் விப்ரோ, உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான Fresherகளை பணியில் அமர்த்த இருப்பதாக தெரிவித்துள்ளன. 2025 ஆம் நிதியாண்டில் டிசிஎஸ், இன்போசிஸ், ஹெச்சிஎல் டெக் மற்றும் விப்ரோ ஆகிய நிறுவனங்கள் மொத்தமாக 80 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு எடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஐடி நிறுவனங்களில் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 80 ஆயிரம் பேர் வேலைக்கு எடுக்கப்படுகின்றனர் என்ற நற்செய்தி வெளியாகியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் நடப்பு ஆண்டில் மட்டும் 40 ஆயிரம் பேரை புதிதாக பணிக்கு எடுக்க இருப்பதாக இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில் மட்டும் டிசிஎஸ் நிறுவனம் புதிதாக 5,452 பேருக்கு வேலை வாய்ப்பு அளித்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை 6,06,998 என உயர்ந்துள்ளது.
இந்தியாவில் இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் 2025 ஆம் நிதியாண்டில் 20 ஆயிரம் பேரை புதிதாக வேலைக்கு எடுக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இன்போசிஸ் நிறுவனம் இந்த 20,000 பேரையும் On Campus மற்றும் Off Campus என்ற இரண்டு வழிமுறைகளில் வேலைக்கு எடுக்க திட்டமிட்டுள்ளது.
தொடர்ந்து ஆறு காலாண்டுகளாக இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்த நிலையில் தற்போது மீண்டும் வேலைக்கு ஆட்களை எடுக்கும் பணியை இன்போசிஸ் தொடங்கியுள்ளது நிறுவனம்.
ஹெச்சிஎல் டெக் நிறுவனம் 2025ஆம் நிதியாண்டில் புதிதாக 10 ஆயிரம் பேரை வேலைக்கு எடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்த நிறுவனத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்பட்ட நிலையில் தற்போது 10,000 பேரை வேலைக்கு எடுக்க போகிறோம் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதேவேளையில் தங்கள் நிறுவனத்தில் ஏற்கனவே பணியாற்றி வரக்கூடிய ஊழியர்களுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்த பயிற்சியை வழங்குவதிலும் ஹெச்சிஎல் தீவிரம் காட்டி வருகிறது .
விப்ரோ நிறுவனத்தைப் பொறுத்தவரை புதிதாக 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான Fresherகளை பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளது. ஓராண்டு காலத்திற்குப் பிறகு விப்ரோ நிறுவனம் மீண்டும் கேம்பஸ் இன்டர்வியூ வாயிலாக ஆட்களை வேலைக்கு எடுக்க உள்ளது.
தற்போது இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் வேலைக்கு ஆட்களை எடுக்கும் இலக்கினை அதிகரித்துள்ளதால் ஐடி துறை மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதே வேளையில் இந்த நிறுவனங்கள் நவீன தொழில்நுட்பங்களை அறிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications