இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் தீவிரமடைந்து வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் பகல்காமில் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, இந்தியா பதிலடியாக ஆபரேஷன் சிந்துர் என்ற தாக்குதலை நடத்தியது. அதன் பிறகு மீண்டும் ட்ரோன் மூலம் பாகிஸ்தான் தனது தாக்குதலைத் தொடர்ந்தது. இந்த தாக்குதலையும் இந்தியா எதிர்கொண்டது.
இப்படி தொடர் தாக்குதல் நடந்து வருவதால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகள் பதற்றமாக இருந்து வருகிறது. இதையடுத்து உலகளாவிய தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள் மே 9-ஆம் தேதி அன்று தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணிபுரிய அறிவுறுத்தியுள்ளன. அதோட உள்நாட்டு மற்றும் சர்வதேச பணி தொடர்பான பயணங்களையும் தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக டெல்லி மற்றும் நாட்டின் வடக்கு பகுதிகளில் உள்ள ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகள் தற்போது நடைபெறும் தாக்குதல் காரணமாக உயர் எச்சரிக்கையில் இருந்து வருகின்றன. தொழில்நுட்ப நிறுவனமான டெலாய்ட் இந்தியா, உள்நாட்டு மற்றும் சர்வதேச பயணங்களை ஒத்திவைக்குமாறு தங்கள் ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது. அதோடு தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உதவி செய்யும் விதமாக உதவி எண்ணையும் வழங்கியுள்ளது.
பாகிஸ்தான் இந்தியா பார்டருக்கு மிகவும் நெருங்கிய மாநிலங்களில் பணி புரியும் ஊழியர்கள் விரைவில் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதோடு அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருக்கவும், அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய ஐடி நிறுவனமாக செயல்படும் ஹச்சிஎல் டெக் நிறுவனம் சண்டிகர், குருகிராம், நோய்டா போன்ற அலுவலகங்களில் மே 9-ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து பணிபுரிய தங்கள் ஊழியர்களை கேட்டுக் கொண்டுள்ளது.
டெக் மகேந்திரா நிறுவனமும் தற்போதைய இந்தியா - பாகிஸ்தான் பதற்றம் குறித்து சமூக ஊடகங்களிலோ அல்லது தங்கள் வாடிக்கையாளர்களிடமோ எந்த வித கருத்தையும் தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது. அதற்காக ஒரு மெசேஜ்-ஐயும் அனுப்பியுள்ளது. ஆனால் அந்த குறிப்பில் வீட்டில் இருந்து பணி புரிவது குறித்து எந்த தகவலும் குறிப்பிடப்படவில்லை.
இந்தியாவின் 2-வது பெரிய IT நிறுவனமாக இருக்கும் இன்ஃபோசிஸ் மாதத்திற்கு 10 நாட்கள் அலுவலகத்திற்கு வந்து பணிபுரியும் முறையை பின்பற்றி வருகிறது. இந்நிறுவனமும் வீட்டில் இருந்து பணிபுரிய கூறியிருக்கிறதா என்பது தொடர்பான விபரங்கள் இந்த கட்டுரை எழுதும் வரை தெரியவில்லை.
கேபிஎம்ஜி நிறுவனம் குர்கான், டெல்லி, நோய்டா, ஜெய்ப்பூர் போன்ற அலுவலகங்களில் தங்கள் ஊழியர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தியிருக்கிறது. அந்த அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் மேலாளர்களுடன் கலந்தாலோசித்து அலுவலகத்திலோ வீட்டிலோ அல்லது வாடிக்கையாளர்களின் இடத்திலோ இருந்து பணி புரிய முடியும். முக்கியமான வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அலுவலகங்கள் திறந்திருக்கும் என்றும் நிறுவனம் கூறியுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications