இந்தியாவில் ஒரு புதிய பொருளாதார மாற்றத்தையும், இந்திய பொருளாதாரத்தை பல மடங்கு வேகமாகவும் சுழலச் செய்த துறைகளில் மிக முக்கியமான ஒன்று ஐடி தான்.
அப்படிப்பட்ட ஐடி துறையில் இருக்கும் மிகப் பெரிய அபாயமே வேலை வாய்ப்புகள் தான். ஐடி கம்பெனிகளில் எப்போது யாருக்கு வேலை பறி போகும், என்ன காரணத்தால் பறி போகும் என்பது, ஐடி கம்பெனிகளுக்கே தெரியாது. அதற்கு சிறந்த சமீபத்தைய உதாரணம் கொரோனா வைரஸ் பிரச்சனை தான்.
இந்த கொரோனா வைரஸ் பிரச்சனை இப்போது வரை முழுமையாக ஒரு முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை.
டாப் 4 கம்பெனிகள்
கொரோனா வைரஸால் ஏற்பட்ட பிரச்சனைகள் இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை என்பதை, இந்தியாவின் டாப் 4 ஐடி கம்பெனிகளான டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச் சி எல் போன்ற கம்பெனிகளின் ஊழியர்கள் எண்ணிக்கை நமக்குத் தெளிவாகச் சொல்கின்றன. இந்த 4 கம்பெனிகள் தான், இந்தியாவின் ஒட்டு மொத்த மென்பொருள் ஏற்றுமதியில் சுமாராக 3-ல் ஒரு பங்குக்கு மேல் வியாபாரம் செய்கிறார்கள்.
10 லட்சம் பேர்
இந்த டாப் 4 ஐடி கம்பெனிகளில் (டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, ஹெச் சி எல்) தான், இந்தியாவின் ஒட்டு மொத்த ஐடி ஊழியர்கள் எண்ணிக்கையில் 25% ஊழியர்களுக்கு வேலை வாய்ப்புகளைக் கொடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட பெரிய கம்பெனிகளிலேயே, கடந்த ஜூன் 2020 காலாண்டில் 9,100 வேலை வாய்ப்புகளை குறைத்து இருக்கிறார்கள்.
எப்படி சொல்கிறோம்
ஒரு குறிப்பிட்ட காலத்தில், புதிதாக வேலைக்கு எடுத்தவர்கள் எண்ணிக்கையில் இருந்து, வேலையில் இருந்து விலகியவர்கள் மற்றும் நீக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையைக் கழித்தால், எத்தனை ஊழியர்களை முன்பை விட கூடுதலாக அல்லது குறைவாக வேலைக்கு எடுத்து இருக்கிறார்கள் என்கிற கணக்கு கிடைத்து விடும். உதாரணமாக ஒரு கம்பெனியில், கடந்த 2019-ல்100 பேரை புதிதாக வேலைக்கு எடுக்கிறார்கள். வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்கள் & விலகியவர்கள் 85 பேர். ஆக 100 - 85 = 15 பேரை, 2019-ம் ஆண்டில் கூடுதலாக வேலைக்கு எடுத்து இருக்கிறார்கள் அல்லது 15 வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாகி இருக்கிறது.
வேலை வாய்ப்புகள் இழப்பு
அப்படி இந்திய ஐடி கம்பெனியில், கடந்த ஜூன் 2020 காலாண்டில் 9,100 வேலை வாய்ப்புகளை குறைத்து இருக்கிறார்கள் 4 ஐடி கம்பெனிகள்.. அதாவது வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்களை விட குறைவாகவே புதிய ஆட்களை வேலைக்கு எடுத்து இருக்கிறார்கள். ஆனால் கடந்த ஜூன் 2019-ல் வேலையில் இருந்து நீக்கப்பட்டவர்களை விட 22,622 பேரை கூடுதலாக வேலையில் சேர்த்து இருந்தார்கள். ஆக இந்த ஜூன் காலண்டில் இந்தியாவின் டாப் 4 கம்பெனிகளிலேயே வேலை வாய்ப்புகள் குறைந்து இருக்கின்றன.
சிறப்புத் திறன் உள்ளவர்கள்
ஐடி கம்பெனிகள் இனி சிறப்புத் திறன் (Specialised Skill Set) உள்ளவர்களையே வேலைக்கு எடுக்க விரும்புவார்கள் என்கிறார்கள் நிபுணர்கள். இந்த ஆண்டில் சில வேலை சார்ந்த டிரெண்டுகள் ஐடி கம்பெனிகளில் நிலவலாம் என்கிறார் CIEL HR Services கம்பெனியின் முதன்மைச் செயல் அதிகாரி ஆதித்யா மிஸ்ரா. அவைகள் என்ன?
ரிவ்யூ & பெஞ்ச் குறைப்பு
1. ஐடி கம்பெனிகளில், ஒவ்வொரு ஊழியர்களின் செயல்பாட்டையும் அடிபடையாகக் கொண்டு செய்யப்படும் ரிவ்யூ தொடரும்.
2. பெஞ்சில் அமர்த்தப்பட்டு இருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து குறைப்பார்கள் என்கிறார்.
3. மேனேஜர் பதவிகளில் இருப்பவர்களின் வேலை ரிஸ்கு தான். தொடர்ந்து நிர்வாக ரீதியிலான வேலைகள் குறையும். Augmented Reality, Mixed Reality, Computer Vision போன்ற ஏரியாக்களில் திறன் படைத்தவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவார்கள் என்கிறார் ஆதித்யா மிஸ்ரா.
ஐடி ஊழியர்களே தயார் ஆகுங்கள்
எனவே தற்போது ஐடி துறையில் வேலையில் இருப்பவர்கள் தொடர்ந்து தங்கள் வேலையை தக்க வைத்துக் கொள்ளு மற்றாவர்களை விட கூடுதலாக உழைக்க வேண்டும். அதோடு உங்களை அப்டேட் செய்து கொள்ள மறந்துவிடாதீர்கள். காலம் பொல்லாதது, யாரை வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பும்.


Click it and Unblock the Notifications