இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் பெரும்பாலான வர்த்தகத்தை வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தையில் தான் வைத்துள்ளது.
இந்த நிலையில் பொருளாதார மந்தநிலை அதாவது ரெசிஷனால் அதிகம் பாதிக்கப்படப்போவது அமெரிக்கா, ஐரோப்பா, பரிட்டனாக இருக்கும் நிலையில், இந்திய ஐடி நிறுவனங்கள் கட்டாயம் பாதிக்கப்படும் என்பதில் எவ்விதமான சந்தேகமும் இல்லை.
இந்திய ஐடி நிறுவனங்கள்
இந்திய ஐடி நிறுவனங்கள் எப்போதும் இல்லாத வகையில் ரெசிஷன் காரணத்தால் புதிதாகச் சேர்க்கப்படும் ஊழியர்கள் எண்ணிக்கையைப் பெரிய அளவில் குறைக்க முடிவு செய்துள்ளது. இதனால் ஐடி நிறுவனங்களில் ஆஃபர் லெட்டர் வாங்கியவர்களில் பலர் வேறு வாய்ப்புகளைத் தேட துவங்கியுள்ளனர். இந்திய ஐடி துறையில் என்ன நடக்கிறது..?
6 மாதம் முன்
இந்திய ஐடி நிறுவனங்கள் 6 மாதம் முன்பு வரையில் புதிய வர்த்தகம் வரும் காரணத்தால் அதிகப்படியான ஊழியர்களை, அதிகப்படியான சம்பளத்தில் சேர்த்து வந்த நிலையில் தற்போது வர்த்தகச் சூழ்நிலை மாறியதன் வாயிலாக மொத்தமும் மாறியுள்ளது.
கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா
உலகின் முன்னணி டெக் நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, ஆரக்கிள், ஆப்பிள் உட்படப் பல முன்னணி நிறுவனங்கள் செலவுகளைக் குறைக்க ஏற்கனவே புதிதாகப் பணியில் சேர்க்கும் ஊழியர்கள் எண்ணிக்கையைப் பெரிய அளவில் குறைத்துத் தற்போது பணிநீக்கம், மாஸ் லேஃஆப் வரையில் சென்றுள்ளது.
ஐடி சேவை நிறுவனங்கள்
இந்த நிலையில் இந்தியாவின் அனைத்து முன்னணி ஐடி சேவை நிறுவனங்களும் புதியாகத் தேர்வு செய்யும் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளது, இதேபோல் ஏற்கனவே பணி உத்தரவாதம் அளித்த பலருக்கு அழைப்புக் கடிதம் அளிக்கப்படாமல் உள்ளது.
ஆஃபர் லெட்டர்
இந்த நிலையில் ஐடி நிறுவனத்தின் OFFER LETTER பெற்ற அனைத்து பட்டதாரிகளும், ஐடி ஊழியர்களும் joining date வரும் வரையில் பயத்துடன் இருக்கும் நிலை உருவாகியுள்ளது. குறிப்பாகப் பிரஷ்ஷர்கள் நிலை இன்னும் மோசமாக உள்ளது என்றால் மிகையில்லை.
6.5 லட்சம் ரூபாய் சம்பளம்
வாரங்கல் பகுதியை சேர்ந்த ஸ்ராவியா என்பவர் முன்னணி பன்னாட்டு ஐடி சேவை நிறுவனத்தில் 6.5 லட்சம் ரூபாய் சம்பளத்தில் OFFER LETTER பெற்ற நிலையில் 6 மாதமாகியும் joining date வராத நிலையில் தற்போது வேறு வேலைவாய்ப்புகளைத் தேட உள்ளதாக டைம்ஸ் பத்திரிக்கையில் தெரிவித்துள்ளார்.
வேறு வேலை
இதனால் ஐடி நிறுவனங்களில் ஆஃபர் லெட்டர் பெற்ற பிரஷ்ஷர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த ஐடி ஊழியர்கள் 30 முதல் 45 நாட்களுக்குள் பணியில் சேரும் நாள் அறிவிக்கப்படாமல் இருந்ததால் வேறு வேலையைத் தேட துவங்கியுள்ளனர். இதனால் ஐடி நிறுவனத்தில் பணியில் சேரும் வரையில் வேலைக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உருவாகியுள்ளது எனப் பட்டதாரிகள் புலம்புகின்றனர்.
ரெசிஷன்
தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலையில் அமெரிக்கா, ஐரோப்பா, பிரிட்டன் ரெசிஷனில் மூழ்கினால் இந்திய ஐடி நிறுவனங்களின் வருவாய் அடுத்தச் சில காலாண்டுகளுக்குக் கட்டாயம் பாதிக்கப்படும் எனச் சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.
செலவுகள்
ஏற்கனவே இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் ஊழியர்கள் வெளியேற்றம், அதிகப்படியான சம்பள, மூன்லைட்டிங், ஆப்ரேட்டிங் மார்ஜின் அளவு போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த ரெசிஷன் பெரும் சுமையாக இருக்கும். இதனால் புதிய ஊழியர்களைச் சேர்த்து செலவுகளை அதிகமாக்காமல் குறைக்க முடிவு செய்து தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி மாணவர்களைச் சேர்க்காமல் உள்ளதாகத் தெரிகிறது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications