இந்தியப் பொருளாதாரத்தில் தகவல் தொழில்நுட்ப (IT) துறை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்தத் துறை வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், மென்பொருள் ஏற்றுமதி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் முக்கியப் பங்களிப்பைக் கொண்டு உள்ளது.
2022 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதாவது ஜிடிபி-யில் IT-BPM துறையின் பங்கு மட்டும் 7.4 சதவீதமாகும். இதேபோல் 2023 ஆம் நிதியாண்டில் IT மற்றும் BPM துறையின் மொத்த வருவாய் 245 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஐடி துறையின் உள்நாட்டு வருவாய் 51 பில்லியன் டாலராகவும், ஏற்றுமதி வருவாய் 2023 நிதியாண்டில் 194 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது.

ஐடி துறை இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு உருவாக்கும் துறையாக இருப்பதோடு, நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 8 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகளை அளித்துள்ளது. இந்தத் துறையின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்க அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவது மட்டும் அல்லாமல் இந்தியாவுக்குத் தொடர்ந்து டாலர் வருமானத்தை அளிக்கும் ஒரு துறையாக உள்ளது.
இந்தியாவில் டெக்ஸ்டைல், உற்பத்தி துறைகளுக்கு முன்பே ஐடி துறை நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி துறையாக இருந்து வருகிறது. 2022-23ஆம் ஆண்டில் இந்தத் துறையின் மொத்த ஏற்றுமதி சுமார் 190 பில்லியன் டாலர்களாகும். இந்தத் துறை இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் சுமார் 15 சதவீதம் பங்களிப்பைக் கொண்டு உள்ளது.
ஐடி துறை டிஜிட்டல் மயமாக்கலை பணிகளை உலகம் முழுவதும் செய்து வருவது மட்டும் அல்லாமல், புதிய வணிக மாதிரிகளை உருவாக்கித் தொடர்ந்து டாலர் வருமானத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் பெரிய பங்கீட்டை வகிக்கிறது. இதனால் ரூபாய் மதிப்பின் சரிவும் கட்டுக்குள் கொண்டு வரக் கணிசமாக உதவி செய்கிறது.
இதேவேளையில் உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாக்கல் வேகமெடுத்து வருவதால், இந்திய ஐடி துறையின் தேவை அதிகரிக்கும். இதேவேளையில் புதிய தொழில்நுட்பங்களின் வருகை மூலம் புதிய டெக் வேலைவாய்ப்புகள் உருவாகும் வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளது.
நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் காலாண்டில் நாட்டின் மொத்த ஜிடிபி அளவு 7.6% வளர்ச்சியைக் கண்டுள்ளது எனவும், இது பொருளாதார ஆய்வாளர்கள் கணித்ததை விடவும் அதிகம் என்று மத்திய அரசின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வியாழக்கிழமை அறிவித்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications