இந்திய பொருளாதார வளர்ச்சியிலும், அன்னிய செலாவணியில் பெரும் பங்கீட்டை கொண்ட இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டு துவங்கியது முதல் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட 2.5 வருடத்தில் வரலாறு காணாத வகையில் வர்த்தகத்தை பெற்ற ஐடி சேவை நிறுவனங்கள் 2023ல் அமெரிக்காவில் ஏற்பட்ட வங்கிகள் திவால் மற்றும் ரெசிஷன் அச்சம் மூலம் புதிய வர்த்தகத்தை பெற முடியாமல் மாடிக்கொண்டது.

ஆனால் கடந்த 3 மாதத்தில் ஐடி நிறுவனங்கள் அவ்வபோது புதிய திட்டங்களை பெற்றது மூலம் ஐடி துறை இயல்பு நிலைக்கு திருப்பி வருவதாக கணிக்கப்பட்ட நிலையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, பிரிட்டன் நாட்டு பொருளாதார பாதிப்புகள், அமெரிக்காவின் ஷட்டவுன் போன்ற பிரச்சனைகள் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் டேட்டா ஸ்டோரேஜ் மற்றும் சொல்யூஷன்ஸ் பிரிவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் நெட்ஆப் சிஇஓ ஜார்ஜ் குரியன் முக்கியமான விஷயத்தை இந்தியாவுக்கு மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த ஐடி துறைக்கும் முக்கிய எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
ஐடி துறையில் சிறிய அளவிலான ரெசிஷன் சூழ்நிலையை எதிர்பார்ப்பதாக கூறும் ஜார்ஜ் குரியன், இந்த mild recession பிரச்சனை மோசமான நிலையை செல்வதற்குள் மீண்டு வளர்ச்சி பாதைக்கு மாறிவிடும் என ஜார்ஜ் குரியன் கூறும் வேளையில்..
இந்த mild recession சூழ்நிலைக்கு முக்கிய காரணம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டு உள்ள நிலையற்ற தன்மை தான் எனவும் கூறுகிறார். இதே வேளையில் சீனாவை அதிகளவில் நம்பியிருக்கும் நாடுகள் தான் ரெசிஷனில் தப்பிக்க வைல்டுகார்ட் ஆக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார் ஜார்ஜ்.
மேலும் அவர் கொரோனா பாதித்த 2-3 வருடத்திவ் பப்ளிக் கிளவுட் சேவைக்கு அதிகப்படியான டிமாண்ட் உருவாகி பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்தது. ஆனால் கடந்த ஒரு வருடம் இத்துறையில் மந்தமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது என தெரிவித்தார்.
மேலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ஜெனரேட்டிவ் AI சேவைகள் மக்கள் கைகளுக்கு வந்த பின்பு எப்போதும் இல்லாமல் kubernetes மற்றும் பிற opensource application-களுக்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. இந்த மாற்றத்தை உலகில் அனைத்து நாடுகளிலும் இருப்பதாக தெரிவிக்கிறார் ஜார்ஜ் குரியன்.
நெட்ஆப் - NETAPP இந்தியாவில் பெங்களூரில் மிகப்பெரிய டெவலப்மென்ட் சென்டர் வைத்துள்ளது. இந்தியாவில் மட்டுமே சுமார் 3000 ஊழியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications