இந்திய ஐடி துறையில் நடப்பு நிதியாண்டில் மட்டும் சுமார் 11.5 லட்சம் பேர் அதாவது மொத்த ஐடி ஊழியர்கள் எண்ணிக்கையில் 23 சதவீதம் பேர் தங்களது பணிகளை மாற்றியுள்ளனர்.
இதனால் ஐடி நிறுவனங்கள் எப்போதும் இல்லாத வகையில் அதிகப்படியான நிர்வாக நெருக்கடியைச் சந்தித்து வருவது மட்டும் அல்லாமல் புதிய ஊழியர்களைப் பணியில் அமர்த்த கூடுதலாகச் செலவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.
Attrition விகிதம்
2020 பிற்பகுதியில் இருந்து 2021 முழுவதும் ஐடித்துறை நிறுவனங்கள் மத்தியில் Attrition விகிதம் பெரிய அளவில் அதிகரித்தது. Attrition விகிதம் என்றால் ஒரு நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் வெளியேறும் ஊழியர்கள் எண்ணிக்கைக்கும் மத்தியில் இருக்கும் வித்தியாசம் தான்.
11.5 லட்சம் பேர்
இதன் படி 2021ல் இந்திய ஐடி துறையில் இருக்கும் 50 லட்சம் ஊழியர்கள் எண்ணிக்கையில் சுமார் 11.5 லட்சம் பேர் பணி மாற்றம் செய்துள்ளனர். இதன் மூலம் இந்திய ஐடி துறையின் மொத்த Attrition விகிதம் 23 சதவீதமாக அதிகரித்துள்ளது என Xpheno நிறுவனத்தின் துணைத் தலைவர் கமல் கார்நாத் தெரிவித்துள்ளார்.
வெளியேற்றத்தில் வித்தியாசம்
ஆனால் இதே வேளையில் ஐடித்துறையில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் கடந்த 4 வருடத்தில் மாறவில்லை என்றும், தற்போது ஏற்பட்டு உள்ள மாற்றம் involuntarily-யில் இருந்து voluntary-ஆக மாறியுள்ளது. கடந்த 3 வருடத்தில் இந்திய ஐடி துறையின் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 21.3 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக இருந்தது. 2022ல் இதன் அளவு 23 சதவீதமாக உள்ளது, involuntarily-யில் இருந்து voluntary-ஆக மாறியுள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
தற்போது இந்திய ஐடி துறையில் ஊழியர்கள் வெளியேற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தான். இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கையில் வெளியேற்ற விகிதம் 30 சதவீதமாக உள்ளது.
அதிகளவிலான வேலைவாய்ப்புகள்
இதேவேளையில் இந்திய ஐடி நிறுவனங்கள் அதிகளவிலான திட்டங்கள் வெளிநாட்டில் இருந்து பெற்ற காரணத்தால் வெளியேறிய ஊழியர்கள் சக போட்டி நிறுவனத்தில் சேர்த்தது மட்டும் அல்லாமல் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளது.
பென்ச் ஊழியர்கள்
2022 நிதியாண்டு முன்பு வரையில் ஐடி நிறுவனங்களில் பென்ச்-ல் இருக்கும் ஊழியர்கள் எண்ணிக்கை அதிகரித்தது மட்டும் அல்லாமல், பென்ச்-ல் இருக்கும் ஊழியர்கள் பணிநீக்கமும் செய்யப்பட்டனர். ஆனால் தற்போது அதிகப்படியான ஐடி திட்டங்கள் கிடைக்கும் காரணத்தால் பென்ச் ஊழியர்களைத் தாண்டியும் அதிகளவிலான ஊழியர்களைப் பணியில் அமர்த்தி வருகிறது.
ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகரிப்பு
திறன் வாய்ந்த ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தால் ஐடி நிறுவனங்கள் ஏற்கனவே நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் போனஸ், பதவி உயர்வு எனப் பலவற்றை அளித்து வருகிறது. இதுபோல் புதிதாக வரும் ஊழியர்களுக்கு 120 சதவீதம் வரையில் சம்பள உயர்வை அளிக்கிறது.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications