மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வழக்கம்போல் பொருளாதார வளர்ச்சியை மையமாக கொண்ட பட்ஜெட்டாக இந்த பட்ஜெட் இருந்தாலும், கடந்த பட்ஜெட்டுகளை காட்டிலும் இந்த பட்ஜெட் கொஞ்சம் தனித்துவமானது. இந்த முறை மூலதன செலவினங்கள் அதிகரிப்புக்கு பதிலாக நுகர்வு அதிகரிப்புக்கு நிர்மலா சீதாராமன் முக்கியத்துவம் அளித்துள்ளார்.
இந்த பட்ஜெட்டில், நடுத்தர வர்க்கத்தினரின் நுகர்வை அதிகரிக்கும் வகையில், வரி குறைப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தனிநபர்கள் மற்றும் வணிகள் மீதான சுமையை குறைக்கும் இந்த நடவடிக்கையால், மத்திய அரசாங்கம் ரூ.1 லட்சம் கோடி நேரடி வரி வருவாயையும், ரூ.2,600 கோடி மறைமுக வரி வருவாயையும் இழக்கும்.

இருப்பினும், மத்திய பட்ஜெட்டில், அடுத்த நிதியாண்டுக்கான நிதிப்பற்றாக்குறை இலக்கு 4.4 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து டிவிடெண்டாக ரூ.69,000 கோடி பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வருவாயை அதிகரிக்க அரசு நிறுவனங்களை பயன்படுத்துவதற்கான அரசாங்கத்தின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
மத்திய பட்ஜெட் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றியுள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கோடக் மகிந்திரா ஏஎம்சியின் நிர்வாக இயக்குனர் நிலேஷ் ஷா கூறுகையில், நிதிப் பற்றாக்குறையை குறைத்தல், வரி குறைப்பு மூலம் நகர்ப்புற நுகர்வக்கு ஆதரவு, மத்திய, மாநில மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு மூலம் மூலதன செலவினங்களில் அதிகரிப்பு போன்ற திரிவேணி சங்கமத்தின் எதிர்பார்ப்புகளை பட்ஜெட் நிறைவேற்றுகிறது என்று தெரிவித்தார்.
ரீடெயில் புரோக்கிங் சென்ட்ரம் புரோக்கிங் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப் நாயக் கூறுகையில், கடந்த ஆண்டு மதிப்பீட்டை விட சற்று குறைவான மூலதன செலவினங்கள் ஒதுக்கீடு கொஞ்சம் எதிர்மறையாக உள்ளது. அதேசமயம், சீர்த்திருத்தங்கள் முன்னணியில், வரி விகிதங்கள் எளிமைப்படுத்திருப்பது வரி செலுத்துவோருக்கு அதிக மகிழ்ச்சியை தரும். காப்பீட்டு துறையில் அன்னிய நேரடி முதலீட்டு உச்ச வரம்பு 100 சதவீதமாக அதிகரித்தது ஒரு பெரிய பாசிட்டிவ் அம்சமாகும்.
நடுத்தர வர்க்கத்தினரின் செலவழிக்கக்கூடிய வருமானத்தை அதிகரிப்பதில் பட்ஜெட் கவனம் செலுத்தியுள்ளது. வரி விதிக்கக்கூடிய வருமான வரி வரம்பை ரூ.7 லட்சத்திலிருந்து ரூ.12 லட்சமாக உயர்த்தியுள்ளது. இந்த பட்ஜெட் நடுத்தர வர்த்தகத்தினருக்கு மகிழ்ச்சியான (sukino bhavantu) பட்ஜெட். இது நுகர்வை அதிகரிக்கும். நகர்புற நுகர்வு மறுமலர்ச்சி பொருளாதாரத்தில் நேர்மறையான பெருக்க விளைவை ஏற்படுத்தும். கடந்த இரண்டு காலாண்டுகளால் காணப்பட்ட மந்தநிலையின் விளைவை குறைக்க உதவும் என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications