இந்தியாவின் ஐடி துறை வேலைவாய்ப்பு சந்தை கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு, தொடக்க நிலை ஊழியர்கள் அதாவது பிரஷ்ஷர்களுக்கான தேவை மேலும் குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
பட்டம் பெற்று கல்லூரியை விட்டு வெளியேறி ஐடி துறையில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற கனவுடன் வருபவர்களுக்கு இந்த செய்தி கட்டாயம் பெரும் அதிர்ச்சியை அளிக்கக் கூடும். பெரும்பாலான ஐடி நிறுவனங்கள் இந்த வருடம் கேம்பஸ் இண்டர்வியூ செல்வதை நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முடிவு செய்துள்ளன.

ஐடி துறையில் கடந்த 6 மாதத்தில் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் வேளையில், பிரஷ்ஷர்களுக்கான வாய்ப்புகள் தொடர்ந்து குறைவாகவே உள்ளது. மேலும் ஒட்டுமொத்த ஐடி துறையின் புதிய வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை அடுத்த சில மாதங்களுக்குப் பின்பே அதன் உண்மையான முகம் தெரியும்.
இந்த நிலையில் பிரபல ஆட்சேர்ப்பு நிறுவனமான TeamLease Services நிறுவனத்தின் தலைமை நிதியியல் இயக்குநர் ரமணி டாத்தி சமீபத்தில் அளித்த பேட்டியில், கடந்த ஆண்டே கல்லூரி மாணவர்களை பணியில் அமர்த்தும் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தது.
ஐடி துறை நிறுவனங்கள் கடந்த ஆண்டு அனுபவம் வாய்ந்த ஊழியர்களை பணியில் சேர்ப்பதை நிறுத்திவிட்டு, சம்பளம் குறைவாக கொண்ட பிரஷ்ஷர்களை கணிசமாக பணியில் அமர்த்தி பயிற்சி மற்றும் மேம்பாட்டில் அதிகம் முதலீடு செய்தது. இந்த ஐடியா கடந்த ஆண்டுக்கு வேலை செய்தது.
ஆனால் இந்த ஆண்டு பிரஷ்ஷர்கள் கூட வாய்ப்புகள் குறைவாகவே இருக்கும் என ரமணி டாத்தி கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளின் போக்குகளை விட பிரஷ்ஷர்களின் பணியமர்த்தல் குறைவாக இருக்கும். அது 50% குறைவாக இருக்குமா, 60% குறைவாக இருக்குமா என்பது எங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் நிச்சயமாக, இந்த ஆண்டு கல்லூரி மாணவர்களை பணியில் அமர்த்தும் எண்ணிக்கையில் குறைவு இருக்கும் என்று தற்போதைய சந்தை போக்குகள் தெரிவிக்கின்றன என்று ரமணி டாத்தி எச்சரித்தார்.
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மெஷின் லேர்னிங் (ML) போன்ற சிறப்பு திறன் கொண்ட ஊழியர்களுக்கு சந்தையில் அதிகப்படியான டிமாண்ட் இருக்கும் நேரத்தில், இதை நோக்கிய மாற்றத்தை பிரஷ்ஷர்ஸ் பாலோ செய்ய வேண்டும் என ரமணி டாத்தி வலியுறுத்தினார்.
ஐடி சேவை துறையில் தொடர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும், உலகளாவிய வளர்ச்சி மையங்களில் வேலைவாய்ப்புகள் உள்ளன, என்றாலும் அவை மெதுவான வளர்ச்சியைக் கொண்டிருக்கும். மாறிவரும் ஐடி வேலைவாய்ப்பு சூழலைச் சமாளிக்க தன்னார்வ திறன் மேம்பாடு அவசியமாக உள்ளது.
மேலும் ஐடி துறையில் தற்போது பல பணிகள் ஆட்டோமேட் செய்யப்படும் காரணத்தால் பிரஷ்ஷர்களின் அவசியம் பல இடத்தில் குறைந்து வருகிறது. இதனால் 2 ஆண்டு அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் செய்யும் பணிகளை பிரஷ்ஷர்கள் செய்ய வேண்டும் என நிர்பந்தம் ஐடி நிறுவனங்கள் மத்தியில் உருவாகிறது.
இல்லையெனில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மெஷின் லேர்னிங் (ML) போன்ற நவீன தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட, திறன் கொண்ட பிரஷ்ஷர்ஸை தேர்வு செய்ய விரும்புகின்றனர். இந்த நிலை ஸ்டார்ட்அப்-ல் இன்னும் மோசம் என்பது தான் இன்றைய சந்தை நிலவரம்.
More From GoodReturns

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?



Click it and Unblock the Notifications