இந்தியாவில் வேலைவாய்ப்பு தேடுவோர் மத்தியில் இருக்கும் திறன் குறைபாடு காரணமாக இந்திய ஐடி துறையில் உள்ள வேலைவாய்ப்புகளில் வெறும் 45 சதவீத இடங்களுக்கு மட்டுமே பட்டதாரிகள் வேலையில் நியமிக்கப்பட தகுதியுடன் உள்ளனர்.
இதேபோல் 2024 நிதியாண்டில் 1.55 லட்சம் பிரஷ் பட்டதாரிகளுக்கு மட்டுமே ஐடி துறையில் வேலை கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. 2023 நிதியாண்டில் இதுவரை 2.3 லட்சம் பொறியியல் பட்டதாரிகளுக்கு இந்திய ஐடி துறையில் வேலை கொடுக்கப்பட்டு உள்ளது.

ஆனால் இந்தியாவில் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பொறியியல் பட்டதாரிகள் தங்கள் கல்வியை முடிக்கின்றனர். இந்த நிலையில் கிட்டத்தட்ட 15 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் ஐடி மற்றும் டெக்னாலஜி நிறுவனங்களில் மும்முரமாக வேலை தேடி வருகின்றனர். வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் நிறைய இருந்தாலும் பிரஷ்ஷர்கள் அனைவருக்கும் வேலை கிடைப்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.
உள்நாட்டு நிறுவனங்களில் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் இருக்கும் காரணத்தால், ஐடி மற்றும் டெக்னாலஜி நிறுவனங்கள் தங்களது வேலை நியமன கொள்கைகளை தாரளமயமாக்க வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.
TeamLease Digital நிறுவன அறிக்கையின்படி 2023-24 நிதியாண்டில் இந்திய ஐடி நிறுவனங்கள் 10 சதவீத பொறியியல் பட்டதாரிகளுக்கு மட்டுமே வேலைக்கு சேர்க்க இலக்கு வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் முன்னணி ஐடி நிறுவனங்கள் இப்போது புதிதாக வேலைக்கு ஆள் எடுப்பதை நிறுத்தி வைத்துள்ளது தான்.
ஐடி நிறுவனங்கள் பிரஷ்ஷர்களுக்கு பணியில் சேர்ப்பதை குறைத்துள்ள இதேவேளையில், குளோபல் கேப்பபிலிட்டி சென்டர்கள், டெக்னாலஜி அல்லாத துறைகளான BFSI, கம்யூனிகேஷன், மீடியா, ரீடெய்ல், கன்ஸ்யூமர் பிஸினஸ், லைப் சயின்சஸ், ஹெல்த்கேர், இஞ்சினியரிங் ரிசர்ச் அண்டு டெவலப்மெண்ட், எனர்ஜி போன்ற நிறுவனங்களில் என்ட்ரி லெவல் பணியில் கூடுதலான மக்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் அனைத்து பிரஷ்ஷர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்குமான என்றால் வாய்ப்புகள் குறைவு தான். இந்த நிலையில் TeamLease Digital நிறுவனத்தின் பிசினஸ் ஹெட் கிருஷ்ணா விஜ் இதுபற்றி கூறுகையில் அரசு, கல்வி நிறுவனங்கள், இண்டஸ்ட்ரி ஆகியவை இணைந்து ஒருமுகமாக வேலைவாய்ப்புக்கான திட்டத்துக்கு ஏற்றவாறு பட்டப்படிப்பு பாடங்களை மாற்றியமைக்க வேண்டும்.
ஸ்கில் டெவலப்மென்ட், ரிசர்ச் புராஜக்ட்கள் மூலம் மாணவர்களின் திறனை வளர்ப்பதற்கு அரசு முன்னெடுப்புகளை செய்ய வேண்டும் என்கிறார்.
கம்யூனிகேஷன், ப்ராப்ளம் சால்விங், புரோகிராமிங், சாப்ட்வேர் டெவலப்மென்ட் மெத்தாடலஜீஸ், க்ளவுடு கம்யூட்டிங், டேட்டா அனாலிசிஸ் போன்ற திறன்களை ஒட்டுமொத்தமாகக் கொண்டவர்களைத் தான் ஐடி நிறுவனங்கள் வேலைக்கு எடுக்க ஆர்வம் காட்டுகின்றன. எனவே அதற்கேற்ப கல்வி நிலையங்கள் தங்களது பாடத் திட்டங்களை வடிவமைக்க வேண்டும் என்று டீம்லீஸ் டிஜிட்டல் அறிக்கை தெரிவிக்கிறது.


Click it and Unblock the Notifications