பெங்களூரு நகரின் பொருளாதாரத்திற்கான முதுகெலுப்பாக இருக்கிறது ஐடி துறை. இதில் ஏற்படும் எந்த ஒரு நிகழ்வும் பெங்களூரு பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக ரியல் எஸ்டேட் துறையில் பாதிப்பை காண முடியும்.
பெங்களூருவில் ரியல் எஸ்டேட் துறை முழுக்க முழுக்க ஐடி துறையை சார்ந்து தான் இருக்கிறது. ஐடி துறையின் வளர்ச்சி தான் இந்தியாவிலேயே அதிக வாடகை கொண்ட நகரமாகவும் அதிக நில மதிப்பு கொண்ட நகரமாகவும் பெங்களூருவை மாற்றி வைத்திருக்கிறது. ஆனால் நிலைமை தற்போது மாறி வருகிறது. பெங்களூருவில் ஐடி துறை மந்தம் ரியல் எஸ்டேட் துறையையும் மந்தமடைய செய்துள்ளது.

அண்மையில் கூட டிசிஎஸ் நிறுவனம் 12 ,000க்கும் அதிகமான ஊழியர்களை வேலையில் இருந்து நீக்குவதாக அறிவித்துள்ளது. இதனை அடுத்து பல ஐடி நிறுவனங்களும் இதனை பின்பற்றும் என சொல்லப்படுகிறது. இதனால் ஐடி வேலைகள் பாதுகாப்பற்றவை என்ற மனநிலை உண்டாகி இருக்கிறது. எனவே வீடு வாங்க பலரும் தயக்கம் காட்டுகின்றனர் என ரியலெ எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன.
ஐடி ஊழியர்களை நம்பி ஆடம்பர குடியிருப்பு திட்டங்களை அறிவித்த நிறுவனங்கள் தற்போது சலுகைகளை அறிவிக்க தொடங்கியுள்ளன. ரெடிட் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டுள்ள பதிவில் பெங்களூருவில் ரியல் எஸ்டேட் நிலைமை ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைப் போல இப்பொழுது கிடையாது பல்வேறு நிறுவனங்களும் சலுகைகளை வழங்க தொடங்கிவிட்டன, அடுக்குமாடி குடியிருப்புகளை விற்பனை செய்யக்கூடிய நிறுவனங்கள் 25 சதவீத தொகையை தற்போது செலுத்தினாலே போதும் வீடு கைக்கு வரும்போது மீதமுள்ள 75 தொகையை செலுத்துங்கள் என தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன என குறிப்பிட்டு இருக்கிறார்.
இதனிடையே அனராக் என்ற தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெங்களூருவில் கடந்த 2024 ஆம் ஆண்டு இரண்டாம் காலாண்டுடன் ஒப்பிடும்போது 2025 ஆம் ஆண்டின் இரண்டாவது காலத்தில் வீடுகளின் விற்பனை 8% வரை குறைந்து இருப்பதாக தெரிவித்திருக்கிறது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 16,350 வீடுகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு அது 15,500 யூனிட்களாக குறைந்து இருக்கிறதாம். ஆனால் வீடுகளின் சராசரி விலை என்பது 12 சதவீதம் உயர்ந்திருப்பதாக தெரிவிக்கிறது.
தற்போது சந்தை நிலவரத்தையும் ஐடி துறையின் போக்கையும் கண்காணித்து அதன் அடிப்படையில் தான் புதிய திட்டங்களை ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அறிவிக்கின்றன. பெங்களூருவில் வீடு வாங்குபவர்களின் அணுகுமுறை மாறி இருக்கிறதாக அனராக் அறிக்கை கூறுகிறது. அதிக வசதி கொண்ட ஆடம்பர குடியிருப்புகளை வாங்க பலரும் விருப்பம் காட்டுகின்றனர் இதனால் பிரஸ்டீஜ் உள்ளிட்ட குழுமங்கள் 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள குடியிருப்பு திட்டங்களில் தான் கவனம் செலுத்துகின்றன என கூறுகிறது.
80 லட்சம் முதல் 1.5 கோடி ரூபாய் வரையிலான குடியிருப்பு திட்டங்கள் மந்தமடைந்துள்ளன, இது ஐடி பணிநீக்கத்தின் ஒரு தாக்கம் என சொல்லப்படுகிறது. ஐடி துறை மந்தமடைந்தாலும் உயர் சொத்து மதிப்பு கொண்ட தனிநபர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் ஆடம்பர குடியிருப்புகளை வாங்க ஆர்வம் காட்டுவதால் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் அத்தகைய குடியிருப்புகளை கட்டுவதில் தீவிரம் காட்டுகின்றன என கூறுகிறது.
ஐடி துறை கைவிட்டாலும் பன்னாட்டு நிறுவனங்களின் ஜிசிசி மையங்கள் எண்ணிக்கை அதிகரிப்பது தங்களுக்கு சாதகமாக அமையும் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் நம்புகின்றன. ஆண்டுக்கு 50 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களை குறி வைத்து ஆடம்பர குடியிருப்புகளில் கவனம் செலுத்துகின்றன என நைட் ஃபிராங்க் அமைப்பு தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications